முதலாம் தர மாணவர்களிடம், "நீங்கள் எதிர் காலத்தில் யாராக வர விரும்புகிறீர்கள்?" என ஆசிரியர் கேட்டார்.
அதற்கு மாணவர்கள், விமானியாக.. வைத்தியராக.. பொறியியலாளராக.. என எல்லோரும் அவர்களது ஆசைகளை சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஒரு மாணவன் மாத்திரம் தனது ஆசையைக் கூறிய போது மற்ற மாணவர்கள் சிரித்து விட்டனர்.
அம் மாணவன் கூறியது இதுதான்:
"ஒரு நபித் தோழராக வர வேண்டும் என்பதே எனது ஆசை".
அதற்கு ஆசிரியர், "ஒரு நபித் தோழராக வர வேண்டுமென்று ஏன் நீ விரும்புகிறாய்? " என வியப்போடு கேட்டார்.
அதற்கு மாணவன், "ஒவ்வொரு நாள் உறங்கச் செல்லும் போதும் எனது தாய் நபித் தோழர்களது கதையைக் கூறுவார். அந்த நபித் தோழர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பெரிதும் விரும்பக் கூடியவர்களாகவும் அவர்களுடன் நெருக்கமானவர்களாகவும் இருந்தார்கள்".
ஆசிரியர் மெளனமானார். மாணவனது பதிலைக் கேட்டு கண்களில் பொங்கிய நீரை கட்டுப்படுத்த சிரமப்பட்டார்.
மகத்தான தாய் கிடைத்தால் குழந்தையின் இலட்சியமும் மகத்தானதாவே இருக்கும்.
படித்ததில் பிடித்தது
-----------------
உங்கள் நன்பனான AS
No comments:
Post a Comment