அரசியல்
சாந்தோம் சர்ச்சுக்குள் நுழைந்த அர்ஜுன் சம்பத்... சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
Nakkeran
Published on 29/02/2020 (10:35) | Edited on 29/02/2020 (10:41)
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடத்தாது என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தமிழக அரசிடம் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலயத்திற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று திடீரென சென்றுள்ளார். அப்போது அங்கு இருக்கும் ஊழியர்களிடம் சாந்தோம் அருங்காட்சியகத்தை திறந்து காட்ட வேண்டும் என்றும், அங்குள்ள பொருட்களை பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு சாந்தோம் தேவாலய ஊழியர்கள் தகுந்த அனுமதியின்றி திறந்து காட்ட முடியாது என்று கூறியுள்ளார்கள். அதன் பின்பு தேவாலயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பிறகு அங்கிருந்து சென்ற அர்ஜுன் சம்பத், நான் திரும்பி வருவேன் என்று கூறி சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்கின்றனர். இதுகுறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று இரவு வரை தேவாலயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
உங்கள் நன்பனான AS
No comments:
Post a Comment