Sunday 2 February 2020

*ஆர்ப்பாட்டத்துக்கு எல்லாம் போனா பொழப்ப யார் பாக்குறது..?*

*ஆர்ப்பாட்டத்துக்கு எல்லாம் போனா பொழப்ப யார் பாக்குறது..?*

குடியை கெடுக்க வந்த குடியுரிமை மசோதாவை எதிர்த்து முழுநாடும் போராடிக் கொண்டிருக்கிறது..

குறிப்பாக பெண்களின் பங்கு இதில் மிக முக்கியமானது. முதியவர்கள் கூட முன்வரிசையில் நின்று போராடுகின்றனர்.

அதிலும் ஷாஹின் தோட்டத்தின் கடும் குளிரில் குழந்தைகளுடன் தங்கி, இரவு பகலாக குடும்பத்துடன் போராடி வருகின்றனர் டெல்லி மக்கள்.

அங்கேயே தொழுகையை நிறைவேற்றி, முறையான போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
"தொழுகையுடன் கூடிய போராட்டம் தான் தீர்வை தேடித்தரும்.!

போலிஸ் அடித்தபோதும் போராட்டத்தை விடாமல் நிற்கின்றனர் நம் பெண்கள்..
ஆர்எஸ்எஸ் குண்டர்கள் அடித்து உதைத்த போதும் அசராமல் நிற்கின்றனர் மாணவ செல்வங்கள்..

நமது உரிமைக்காக இவ்வளவு தியாகங்கள் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் இன்னமும் சில சுயநல மனிதர்கள்..

# ஆர்ப்பாட்டத்துக்கு எல்லாம் போனா பொழப்ப யாருங்க பாக்குறது..?

# நான் ஒரு ஆள் போகாமல் இருப்பதால், ஆர்ப்பாட்டம் நடைபெறாமலா போய்விடும்..?

# ஆர்ப்பாட்டத்தில் கைது செய்தால், மாலை வரை போலிஸ் ஸ்டேஷனில் இருக்கனும், அதெல்லாம் நம்மால் முடியாதுப்பா..?

இவ்வாறெல்லாம் கோழைத்தனமாக பேசும் மக்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஷாஹின் தோட்டத்தில், பிறந்த குழந்தையுடன் போராட்டத்தில் நிற்கும் அப்பெண் கூறிய வார்த்தை தான் இவர்களுக்கான பதில்..

இன்று நான் போராடவில்லை என்றால், நாளை எனது மகன் வளர்ந்து..
"இவ்வளவு பெரிய அநியாய சட்டத்திற்கு எதிராக நீங்கள் என்ன செய்தீர்கள் என்றால், அவனிடம் நான் என்ன பதில் சொல்வேன்! அதனால்தான் இவ்வளவு குளிரிலும் இப்பிள்ளையுடன் இங்கு நிற்கிறேன் என்றார்.!

* ஆர்ப்பாட்டத்திற்கு போனா பொழப்பு எதுவும் போய்விடாது. நம் ஊரில் ஒரு ஆர்ப்பாட்டம் அதிகபட்சம் 3மணி நேரம் தான்.

* நான் ஒரு ஆள் போகாமல் இருப்பதால் என்ன ஆகிவிடும் என ஒவ்வொருவரும் நினைத்தால் பிறகு யார்தான் போராடுவது.?

* ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களே கைது செய்வதற்கு ஆட்களை நியமித்து இருப்பார்கள். அவ்வளவு பயப்பட தேவையில்லை.

இந்த சிறிதுநேர கைதுக்கே பயப்படுகிறீர்களே! நாளை நம்மை இந்தியன் இல்லை என முகாமில் அடைத்தால் என்ன செய்வீர்கள்..?
சோற்றுக்கு கூட வழியில்லாத அந்த நேரத்தில் யாரிடம் வியாபாரம் செய்வீர்கள்..?

நமது உரிமைக்காக இன்று நாம் போராடாவிட்டால், நாளை
நாம் இருந்த தடம் கூட இங்கிருக்காது.

இனியும் வியாபாரம் தான் முக்கியம் என்றிருப்பீர்கள் என்றால்..
விரைவில் வியாபார பொருட்களுடன் தயாராக இருங்கள்..

*பங்களாதேஷ், பாகிஸ்தானுக்கு சென்று பானிபூரி கடை வைத்துக் கொள்ளலாம்..!*


உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment