சிஏஏ க்கு ஆதரவு திரட்ட கேரளாவில் பாஜகவினர் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் மோகனன் நாயர் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இனி அந்த உரையாடல்:
நாயர்: வந்திருப்பவராகளில் பிராமின் யாராவது உண்டா?
பாஜக: இல்லை..
நாயர்: உங்களில் நாயர் யாராவது உண்டா?
பாஜக கூட்டத்தில் இருவர் கையை உயர்த்துகின்றனர்
நாயர்: நீங்கள் இருவர் மட்டும் உள்ளே வாருங்கள் மற்றவர்கள் வெளியே நிற்கவும்.
பாஜக : இது அசிங்கபடுத்துவதாக உள்ளது. நாங்கள் எல்லோரும் ஒன்றாக வந்தோம். அவர்கள் இருவரை மட்டும் அனுமதித்து பிறரை வெளியில் நிறுத்துவது எப்படி முறையாகும்?
நாயர்: அதேதான் சிஏஏ விற்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதம், சாதி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை பாரபட்சமாக நடத்த உங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பாஜக குழு:?
தோழர் Anandan Ganesan பதிவு
No comments:
Post a Comment