Thursday, 30 January 2020

#முத்துப்பேட்டையில்_அமைதியாக_நடந்த_குடியுரிமை_சட்ட_எதிர்ப்பு_போராட்டத்தை_சீர்குழைக்க_முயன்ற_காவிகள்..!!

#முத்துப்பேட்டையில்_அமைதியாக_நடந்த_குடியுரிமை_சட்ட_எதிர்ப்பு_போராட்டத்தை_சீர்குழைக்க_முயன்ற_காவிகள்..!!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் அமைதியாக அறவழிப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது,

அதனடிப்படையில் முத்துப்பேட்டையில் இதுவரை 3,ஆர்ப்பாட்டம் 1,மனித சங்கிலி போராட்டம் 1,பொதுக் கூட்டம் அமைதியாக நடந்தது,

நேற்றும் (30-01-2020) தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு முத்துப்பேட்டையிலும் மனித சங்கிலி போராட்டம் அமைதியாக நடைபெற்றது,

அமைதியா நடைபெற்று வரும் போராட்டங்களை சகித்துக் கொள்ள முடியாத காவிகள்,

முத்துப்பேட்டையில் நடந்த அமைதி மனிதசங்கிலி போராட்டத்தை சீர்குழைக்கும் நோக்கில் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை ஆபாசமாக பேசி புகைப்படம் எடுக்க முயன்றனர்,

போராட்டத்தினரின் கவனத்தை திசை திருப்பி மத கலவரமாக மாற்ற காவிகள் செய்த சூழ்ச்சியை உணர்ந்த முஸ்லீம்கள் உடனடியாக அவர்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களை மதகலவரமாக மாற்ற நினைக்கும் காவிகளின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் சமூக ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் பாதுகாக்கும் வகையில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

அமைதியை விரும்புபவர்கள் யார்? அமைதியை கெடுப்பவர்கள் யார்? என்று பொது சமூகத்திற்கு அடையாளப்படுத்திக் கொண்டே நாம் போராட்டங்களை தொடர வேண்டும்

தேசத்தின் பன்முகத்தன்மையை பாதுக்கும் களத்தில் நிற்கிறோம் என்பதை மனதில் கொண்டு தொடர்ந்து போராட வேண்டும் ,

இதுவரை நடைபெற்று வந்த தொடர் போராட்டங்கள் காவிகளை நிலை குழைய செய்து விட்டது,

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்,

வேகமாக அல்ல, விவேகமாக....

No comments:

Post a Comment