Monday 20 January 2020

பாரத ரத்னா பாதுஷா கான் ..!! நல்லவேளை நீங்கள் இன்று இல்லை..!

பாரத ரத்னா பாதுஷா கான் ..!!
நல்லவேளை நீங்கள் இன்று இல்லை..!

கஃபார்கான் அவர்கள் எப்போதும் ஒரு துணிப் பையை தன்னுடனேயே வைத்திருப்பார் . அதை தொடக்கூட யாரையும் அனுமதிக்க மாட்டாராம்.

காந்திஜி கூட இதுபற்றி பலமுறை அவரிடம் கேட்டதுண்டு - பலமுறை கிண்டல் அடித்ததுண்டு. கஸ்தூர்பா காந்தி அவர்களும் காந்தியின் கிண்டலை கண்டித்ததும் உண்டு. அப்போதும் கூட, அந்த பையில் இருப்பதை பற்றி சொன்னதில்லை - எவரையும் தொட அனுமதித்து இல்லை .

1969 ல் மகாத்மா காந்தி பிறந்த நாளன்று, அன்னை இந்திரா காந்தியின் அழைப்பின் பேரில், இந்தியா வந்தார். அவரை இந்திரா காந்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் விமானநிலையம் சென்று வரவேற்றனர் ..

நீங்கள் காண்பது அந்த படம் தான் ..!!

வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின் - மரியாதை நிமித்தமாக , அந்த பையை கொடுங்கள் , நாங்கள் கொண்டு வருகிறோம் என இந்திராஜி கேட்க - அப்போதும் அவர் அந்த பையை மற்றவர் தொட அனுமதிக்கவில்லையாம்..

அத்தோடு, இது ஒன்றாவது என்னோடு இருக்கட்டும். அதையும் பிடுங்க பார்க்கிறீர்களே என்று , கான் அவர்கள் சொல்ல - அந்த இடத்திலேயே கண்கலங்கி விட்டார்களாம் -அன்னை இந்திரா காந்தியும் , ஜேபியும்...

1985 ல் அருமைத் தலைவர் ராஜீவ் காந்தி அழைப்பின் பேரில் இந்தியா வந்தார் எல்லை காந்தி ..

மகாத்மா காந்தி கிண்டல்கள், அதற்கு காஸ்தூர்பா காந்தி கண்டனங்கள் , அன்னை இந்திராஜிக்கு நேர்ந்தது என அனைத்தையும் அறிந்திருந்த ராஜீவ் காந்தி அவர்களும் - கான் சாஹேப் கையிலிருந்த பையை காட்டி " இந்த பையில் அப்படி என்னதான் இருக்கிறது . நான் பார்க்கலாமா .. " என்று கேட்க -

ஒரு சிரிப்பு சிரித்த பாதுஷா - நீ எனது குழந்தை. உனக்கு காட்டா விட்டால் , நல்லாயிருக்காது. மேலும், இந்த கிழவன் அப்படி என்னதான் வைத்திருந்தான் என்று ஏதாவது பேசுவார்கள் . இந்தா, உனக்கு காண்பிக்கிறேன் என்று பையை திறந்து காட்டினாராம்.

அதில், உடுத்தும் உடைகள் இரண்டு செட் இருந்ததாம் ...!!

அந்த மாபெரும் மனிதருக்கு 1989 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது ..!

அவரது நினைவு நாளில் , அவரது நினைவுகளை போற்றுவோம் ...

நன்றி Kundrathu Murugaraj

No comments:

Post a Comment