சீனாவில் கொடூரமான
கொனோரோ வைரஸ் தாக்குதல்;
உஹான் நகரம் சீல் வைப்பு!
-இஸ்லாத்தை உண்மைப் படுத்தும்
நாட்டு நடப்புக்கள்!
சீனாவில் மிகக்கொடூரமான கொனோரோ வைரஸ் தாக்குதலால் உஹான் நகரம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வலி தாங்க முடியாமல்
கீழே விழுந்து துடிதுடித்து அங்குள்ள மக்கள் உயிர்விடும் வீடியோக்கள் பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கிறது.
கொனோரோ வைரஸ் தாக்கியுள்ள பகுதிகளுக்குள் யாரும் உள்ளே நுழைவதற்கும்,
அங்கிருந்து யாரும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாய்க்கறி, பாம்புக்கறி, வவ்வால் கறி உள்ளிட்ட அசைவ உணவுகளின் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கொடிய வைரஸ் தாக்குதலில் இருந்து
தற்காத்துக் கொள்ள தற்போது மருத்துவர்கள்
கண்டுபிடித்துள்ள அறிவியல் உண்மையை
1400 ஆண்டுகளுக்கு முன்னதாகவே
மனித குல வழிகாட்டியான இறுதித்தூதர்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திச் சென்றுள்ளார்கள்.
ஆம்!
ஒரு பகுதியில் கொள்ளை நோய் பரவி அதன் காரணமாக மக்கள் உயிரிழக்கின்றார்கள் என்றால், அந்த ஊருக்குள் வேறு யாரும் உள்ளே நுழையக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்; அதே நேரம் அந்த நோய் பரவும் குறிப்பிட்ட ஊரில் இருந்து
யாரும் வெளியேறக் கூடாது எனவும் நபிகளார் தடை விதித்தார்கள்.
இதுபோன்ற தருணங்களில் நோய் பரவி வரும் குறித்த ஊரில் உள்ளவர்கள் எப்படியாவது அங்கிருந்து தப்பி
வெளியேறிவிடலாம் என்றுதான் நினைப்பார்கள்.
ஆனால் அது மாபெரும் தவறு.
நோய் ஏற்பட்ட அந்த ஊரிலிருந்து அனைவரும் தப்பி ஓடிவிட்டால் நோயால் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு யார் உதவி செய்வது?
மேலும், அப்படி தப்பி ஓடி வருபவர்களுக்கு அந்த நோய் தொற்று இருந்தால் அவர்களால்
அவர்கள் செல்லும் மற்ற ஊர்களும் அழிவுக்குள்ளாக நேரிடும் என்பதால்தான்
இப்படி ஒரு அற்புதமான வழிகாட்டுதலை
இஸ்லாம் வழங்கியுள்ளது.
இந்த நோய் பரவும் ஊரில் உள்ளவர்கள் இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, அந்த ஊரிலேயே இருந்து மரணிப்பாரேயானால்
அவர் இறைவனின் வழியில் உயிர் நீத்த
உயிர் தியாகியின் அந்தஸ்தை அடைவார் எனவும் நபிகளார் தெளிவுபடுத்தி உள்ளார்கள்.
அதுபோலவே நோய் பரவும் அந்த ஊருக்குள்
வெளியிலிருந்து யாரும் உள்ளே நுழைவதும்
நமக்கு ஆபத்தாக முடியும் என்பதால் அதற்கும்
நபிகளார் தடை விதித்து அழகான தீர்வை வழங்கியுள்ளார்கள்.
நபிகளாரின் இந்த அற்புதமான வழிகாட்டுதலைத்தான் கொனோரோ வைரஸ் தாக்குதலுக்குள்ளான இந்நிலையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி சீன அரசு கடைப்பிடித்து வருகின்றது.
அந்த சீன மக்கள் இந்த நோயிலிருந்து மீண்டு
பூரண நலம் பெற வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம்.
No comments:
Post a Comment