Monday, 27 January 2020

இதுதான் #பயன்தரும்_கல்வி. மனிதன் மரணிக்கையில் இந்த உலகில் விட்டுச் செல்லும் மகத்தான பொக்கிஷம் இது.

இதுதான் #பயன்தரும்_கல்வி.
மனிதன் மரணிக்கையில் இந்த உலகில் விட்டுச் செல்லும் மகத்தான பொக்கிஷம் இது.

காம்பியா தேசத்தின் சட்ட அமைச்சரான #அபுபக்கர்_தம்படூ என்கிற இந்த மாமனிதரைப் பற்றி படிக்கையில் மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை அறிய முடிகிறது.

#சட்டக்கல்வி பயிலும் வாய்ப்பை பயன்படுத்தி உயர்தரக் கல்வியைப் பெற்றவர்,
சர்வதேச விவகாரங்களில் நுணுக்கமான சட்ட அறிவைப் பயன்படுத்துவதன் மூலம் எத்தகைய நன்மைகளையெல்லாம் தன்னோடு வாழும் மனித சமூகத்திற்கு பெற்றுத்தர முடியும் என்பதை சரியாக அறிந்தவர்,
ரோஹிங்கிய மக்கள் சந்தித்த மியான்மர் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து,
அந்நாட்டு பிரதமர் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி, அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் பெற்றுத்தரும் ஒரு மகத்தான மனிதநேய சாதனையைப் படைத்திருக்கிறார்.

இதன்மூலம் நீதித்துறை வரலாற்றில் அனைவரும் பின்பற்றத்தகுந்த முன்னுதாரணத்தை உருவாக்கியிருப்பதுடன் உலக வரலாற்றில் தனக்கான தனித்துவ அடையாளத்தையும் நிலை நிறுத்தியிருக்கிறார்.

"The case at ICJ is Gambia showing the world you don't have to have military power or economic power to denounce oppressions. Legal obligation and moral responsibility exist for all states, big or small."

சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு இந்த வழக்கை கொண்டு வந்த காம்பியா (ஆப்ரிக்க) தேசம் உலகிற்கு சொல்லும் செய்தி "மனிதகுலத்திற்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டிக்க உங்களிடம் ராணுவ பலமோ, பொருளாதார பலமோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த உலகில் உள்ள சிறிய பெரிய நாடுகள் அனைத்திற்கும் சட்டரீதியான கடமையும் மனிதநேய தார்மீக ரீதியிலான பொறுப்பும் இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது".

அல்லாஹ் அந்த மனிதருக்கும் அவர் தேசத்திற்கும் அருள் புரிவானாக.

நன்றி பிபிசி.

https://bbc.in/2TOrxrR


Sent from my iPhone

No comments:

Post a Comment