Wednesday 22 January 2020

இந்திய தேசிய லீக் - கட்சி அறிவிப்பு உருப்படியான, நல்ல முடிவு..!

 #அல்ஹம்துலில்லாஹ்

உருப்படியான, நல்ல முடிவு..!  
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

*#இந்தியதேசியலீக்கட்சியைக் கலைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து,*
 *அதன் தேசிய பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார் 
#எம்ஜிகே_நிஜாமுதீன்.*

“இன்றைய இக்கட்டான சூழலில் முஸ்லிம்கள் பல கட்சிகளாகவும் கட்சிக்குள் கூறுகளாகவும் கோஷ்டிகளாகவும் பிரிந்துகிடப்பது சமுதாயத்துக்கு நல்லதல்ல. 

"நலிவடைந்த கட்சிகளைக் கலைப்பது அல்லது பிற கட்சிகளோடு இணைப்பது ஆகிய நடவடிக்கை மூலமாக முஸ்லிம் கட்சிகளின் கட்டுக்கடங்கா எண்ணிக்கையைக் குறைப்பது அவசியம்” என்று நிஜாமுதீன் அவர்கள் கூறியுள்ளார்.

உருப்படியான நல்ல ஆலோசனை, நல்ல முடிவு இது.

இந்த வகையில் முன்னோடியாக இருந்தவர் அ.ச. உமர் பாரூக் அவர்கள்.

*#மறுமலர்ச்சிமுஸ்லிம்லீக் எனும் கட்சியின் தலைவராக இருந்த அ.ச. உமர் பாரூக்* ஒரு கட்டத்தில் தமது கட்சியை *எஸ்டிபிஐ கட்சியுடன் இணைத்துவிட்டார்.*

இன்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில 
பொதுச் செயலாளராகவும் திறம்படப் பணியாற்றி வருகிறார்.

முஸ்லிம்களுக்கென்று ஒன்று அல்லது இரண்டு கட்சிகள் இருந்தால் போதும்.

ஆகவே சிறிய கட்சிகள் நாட்டு நலனையும் சமுதாய நலனையும் கருத்தில் கொண்டு தங்கள் கட்சிகளைக் கலைத்துவிட வேண்டும் அல்லது பிற  கட்சிகளுடன் இணைந்துகொள்ள வேண்டும்.

இது காலத்தின் கட்டாயம்.

தன்முனைப்பு, ஈகோ, ‘நீ தலைவனா நான் தலைவனா” என்றெல்லாம் முறுக்கிக்கொண்டு முகம் திருப்பி நின்றால், பாசிச அலை உங்களை அடித்துச் சென்றுவிடும்.

அப்போது கதறி எந்தப் பயனும் இல்லை.
-சிராஜுல்ஹஸன்

No comments:

Post a Comment