அமுதம் புக் ஷாப் வழங்கும் சிறந்த அறிவியல் நூலின் சில வரிகள் வாசிப்பை நேசிப்பவர்களுக்காக...
அடுத்த கலாம்
^^^^ ^^^^ ^^^^ ^^^^ ^^^^ ^^^^
நம் வீட்டின் / நாட்டின் கண்ணின் மணிகளான மாணவச் செல்வங்கள் விஞ்ஞானிகளாகுவதற்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்லும் அறிவியல் நூலிது!
இன்றைய கல்விச் சூழலில் தலைசிறந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கூட விஞ்ஞானி ஆவதற்கான....
வழிமுறைகளில் சரியான புரிதல் இல்லை! இந்த சூழலில் கண்கள் முழுக்க கனவுகள் கொப்பளிக்கும் பள்ளிக்கூட மாணவர்களின் நிலையை என்னவென்பது...?
அதிலும் கிராமப்புரத்து பள்ளிகளில் பயிலும் தொலைத் தொடர்புகளின் தொப்புள்கொடி...
இல்லாத மாணவர்களுக்கு எப்போது எப்படி கிடைக்கும் இந்த அறிவார்ந்த அடி உரம்....?
பல பள்ளி மாணவர்களுக்கு மலைப்புடன் முகத்திலும் அகத்திலும் தொக்கி நிற்கிற பெரிய கேள்வி...
நான் எப்போது எப்படி விஞ்ஞானியவது என்பதே...?
இன்றைய காலச்சூழலில் விவசாயம் முதல் விண்வெளி வரை இந்திய விஞ்ஞானிகள் புரிந்து வரும்...
சாதனைகளால் ஈர்க்கப்பட்டு தானும் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவு பல மாணவர்களுக்கு வந்துள்ளது!
இதன் பலனாக ஏற்பட்டுள்ள போட்டியில் இந்திய அளவில் தமிழக மாணவர்கள் முன்னேற்றம் சற்றே குறைவாக உள்ளது!
இந்த குறையை களையும் வகையில் அற்புதமான அறிவுப் பெட்டகம் உங்களுக்காக காத்திருக்கிறது!
இந்த கேள்விகளுக்கு எல்லாம் மிகச்சிறந்த முறையில் அழகிய தமிழில் மிக எளிய நடையில்...
ஏறத்தாழ 120 பக்கங்களில் பெரிய எழுத்துக்களில் மிதமான ₹ 150/- விலையில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஓர் அறிவியல் விருந்து இந்நூல்!
நூலாசிரியர் விஞ்ஞானி டில்லி பாபு அவர்கள் அப்துல் கலாம் பணிபுரிந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர்.
தொழில் நுட்பங்கள் மக்களுக்காகவே என்ற அடிநாதத்துடன் மாணவர்களை ஒருங்கிணைத்து....
சமூக தொழில் நுட்ப திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்!
தென்னிந்தியாவில் உயிரிக்கழிவறை நுட்பத்தை அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்தது இவரே!
இன்றைய சூழலில் அறிவியலும் ஆராய்ச்சியும் இல்லாமல் எந்த நாடும் ஒரு மில்லி மீட்டர் அளவு கூட முன்னேற முடியாது!
என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து உங்களுக்கான நம்பிக்கை விதைகளை காலமறிந்து விதைத்திருக்கிறார்.
நூலாசிரியரும் விஞ்ஞானியுமான டில்லி பாபு அவர்கள்.
அறிவியல் ஆராய்ச்சியில் தடம் பதிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூலிது!
மாணவர்களுக்கு சரியான வழிகாட்ட ஆசிரியர்கள் அவசியம் அறிமுகப் படுத்த வேண்டிய நூலிது!
ஒவ்வொரு பள்ளி நூலகங்களிலும் இல்லங்களிலும் இருக்க வேண்டிய அறிவார்ந்த நூலிது மறவாதீர்கள்!
மிக அழகிய முறையில் அச்சிட்ட பதிப்பகத்தாரும், நூலாசிரியரும் பாராட்டுக்குரியவர்கள்!
புத்தகத்தை வாசகர்கள் புரட்டுவது வழக்கம். ஆனால் சில நூல்கள் வாசகர்களையே புரட்டுவதும் உண்டு!
இந்த நூல் இரண்டாவது ரகம் கவனம் கொள்வீர்!!
சாதனையாளர்களின் சங்கமம் அமுதம். இங்கு எதை எடுத்து வாசித்தாலும் வாழ்வில் ஏற்றம் நிச்சயம் வாருங்கள் என அன்புடன் அழைக்கிறது...
AMUTHAM BOOKS, MTP.
98430 24980 : 94864 11900.
No comments:
Post a Comment