Wednesday, 29 January 2020

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாத செயல்*

*காந்தி கொலை*

*சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாத செயல்*

வருடந்தோறும், அக்டோபர் 2-ஆம் நாள் அதாவது, காந்திஜி பிறந்த நாளை நினைவில் கொள்வது போல், *ஜனவரி 30-ஆம் நாள் காந்திஜி கொலை செய்யப்பட்ட நாளை நினைவு கூறுவதில்லை.*

- *இது நம் கண் முன்னே நடக்கும் வரலாற்று இருட்டடிப்பு :-*

காந்திஜி இறந்த நாளை நினைவு கூறாமலிருப்பதற்கான காரணம், காந்திஜி இறந்தது, *&சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் மிகப்பெரிய தீவிரவாத செயல். அதனை செய்தவன் இந்துத்துவ தீவிரவாதி. அவன் பெயர்தான் கோட்சே.* இன்றைக்கும் இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்தவன். காங்கிரஸ் அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை.

*சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாத தாக்குதல் காந்திஜியின் மீது வீழ்ந்தது. அன்று தொடங்கி இன்று முழு அளவில் வளர்ந்து வியாபித்து நிற்கின்றது.*

*சாவர்கர், கோட்சே வழித்தோன்றல்கள் இந்ந நாட்டில் தொடர்ந்து நடத்திய குண்டு வெடிப்புகளால் கொன்று குவித்த இந்தியக் குடிமக்கள் ஏராளம். தாராளம்.*

பழியை பாங்காக முஸ்லிம்களின் மேல் போட்டு, நாட்டை, இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் பிளந்து ஆட்சியைப் பிடித்துக் கொண்டார்கள். இல்லாத, பொல்லாத ஆட்டங்களைப் போடுகின்றார்கள்.

இவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் முதல் தீவிரவாதி கோட்சேயின் புகழ்பாடவும், துதிபாடவும் தொடங்கிவிட்டார்கள்.

அதிகார மமதை தந்த பெரும்பலத்தால், காந்திஜி கொலை செய்யப்பட்ட நாளை சாந்தியின் நாள் என பிடிக்கத் தொடங்கி விட்டார்கள். 2016 - ஆம் ஆண்டு முதல் காந்திஜி பிறந்த நாள் இவர்களுக்குத் "திக்கர்திவாஸ்" - சாபத்தின் நாள் அதைப் பற்றிக் கூறிடும்போது, அன்று இந்து மகா சபையின் தேசியத் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா இப்படிக் கூறினார்.

"நாங்கள் காந்திஜி பிறந்த நாளை "திக்கர் திவாஸ்" - Dikker Diwas "சாபத்தின் நாள்" எனக் கொண்டாடுகிறோம். இனி இந்த நாட்டு மக்கள், காந்திஜியின் வழியைப் பின்பற்றுவதை விட்டுவிட வேண்டும். கோட்சேயை வழிபடுவதற்கு இதுவே சரியான தருணம்."
(Source : Oct-3,2016 Indian Times)

காந்திஜி கொலை செய்யப்பட்ட நாள் இவர்களுக்கு, அகாநியா நாள் - அதாவது நல்ல நாள். அன்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கிகின்றார்கள்.

(1949-இல் காந்திஜி கொலை செய்யப்பட்ட நாளிலும், இனிப்பு வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

2016 - இல் இப்படிக் கூறிவிட்டு கோட்சேயின் சிலையை இந்து மகா சபையின் அலுவலகத்தில் திறந்து வைத்தார்.

இங்கேயும், இவர்கள் சூழ்ச்சியை நன்றாகப் புரிந்திட வேண்டும். இவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியை வழிபடுவதற்கும் சிலை வைப்பதற்கும் தேர்ந்தெடுத்துக் கொண்ட நாள் அக்டோபர் - 2, காந்திஜி பிறந்தநாள் அல்லாமல் முதல் தீவிரவாதம் நிகழ்ந்தேறிய ஜனவரி 30-ஆம் நாள் அல்ல.

இந்த சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, காந்திஜியை கொலை செய்த நாளையும், கொலை செய்தவர்களையும் மக்கள் மன்றத்தில் வைத்து வருகின்றோம் நமது நீதி அமைதிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில்.


https://m.facebook.com/story.php?story_fbid=134006611421437&id=105518857603546

No comments:

Post a Comment