இந்து மத சகோதரர்களின் அறிவுரை இஸ்லாமியர்கள் சிந்திக்கவும்.!
<><> <><> <><>
BJP,RSS காரர்களுக்கு வார்த்தைகளை எளிதாக எடுத்துக் கொடுக்கும் இஸ்லாமிய இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகளில் பயணிக்கும் இளைஞர்களின் கவனத்திற்கு.!
பொது வலை தளங்களில் வார்த்தைகளில் கவனம் தேவை.!!
நம்மிடம் சில வருடங்களாக பல நூற்றுக்கணக்கான இந்து மதத்தின் சகோதரர்கள் இந்த உண்மைகளை தான் கூறுகின்றார்கள்.👇👇
பாய்.. BJP,RSS நபர்கள் ஏன் காவி என்ற வார்த்தைகளை பயன் படுத்துகின்றார்கள் தெரியுமா என்று கூறி விளக்கம் அளித்தார்.
இந்துக்களின் ஆடை! அதாவது இந்துக்களில் எத்துனை சாதி பிரிவுகள் இருக்கின்றார்களோ, அவர்களில் பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்தும் முக்கிய ஆடை காவி ஆடைகள் தான். ஜயப்பன் கோவிலுக்கு செல்லும் போது அனைவரும் பயன்படுத்தும் ஆடை காவி துண்டு, காவி வேஷ்டி..
எந்த கோவில்களுக்கு சென்றாலும் சாதாரணமாக இந்துக்கள் காவி நிற ஆடைகளை தான் அணிவோம். இதை பல்லாண்டு காலம் முஸ்லிம்கள் அனைவர்களும் கண் கூடாக பார்க்கின்றீர்கள்.
முஸ்லிம்களை RSS,BJP சீண்டும் போது பொது வலைதளங்களில் அனைவரும் பயன்படுத்தும் வார்த்தை காவி. இப்படி காவி, காவி என்று நீங்கள் விமர்சனம் செய்கின்றீர்கள். அதைதான் மதவெறி பிடித்தவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
அப்படி விமர்சனம் செய்யும் போது அனைத்து மத இந்துக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடம் 'பார்ப்பனர்கள்' பா.ஜ.க- ஆட்கள் மூலம் ஊர், ஊருக்கு விஷத்தை விதைக்கின்றார்கள்.
இதோ பார் நாமெல்லாம் இந்து நம்மை முஸ்லிம்கள் நமது காவி ஆடைகளை, விமர்சனம் செய்து கேவலமாக பேசி மகிழ்கின்றார்கள், நாம் ஒற்றுமைாக இருந்து முஸ்லிம்களை எதிர்ப்போம் என்ற 'நச்சுக்களை' பார்ப்பனர்கள் பல வருடமாக விதையாக விதைக்கின்றார்கள்.
பாய்... காவி உடை இந்துக்களின் ஆடை
அந்த ஆடைகளை நீங்கள்(முஸ்லிம்கள்)விமர்சிக்காமல் BJP,RSS மத வெறியர்களை சங்கிகள் என்றோ, சாவர்க்கர்,கோட்சேவின் கோழை வாரிசுகள் என்றோ, இன்னும் வேறு சில பெயர்கள் வைத்தோ அழையுங்கள் அது குறிப்பிட்ட மத வெறியர்களுக்கு போய்ச் சேரும். 90% இந்துக்களை அந்த வார்த்தைகள் பாதிக்காது.
இந்துக்களின் ஆடைகளை கூறி பேசாதீர்கள், அது பா.ஜ.க-விற்கு நீங்கள் போடும் "தீனி" என்ற உண்மைகளை கூறி நம்மிடம் வரும் பலநூறு இந்து மத சகோதரர்கள் முறையிட்டுள்ளார்கள்.
இன்று அதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.
BJP,RSS சங்கிகளின் நாவுகளுக்கு வார்த்தைகளை தீனியாக போடாதீர்கள் என் அருமை இஸ்லாமிய சமூக இளைஞர்களே, தொப்புள் கொடி உறவு என்கிறோம் அவர்களிடமும் பகைகளை ஏற்படுத்த வேண்டாம் சகோதரர்களே...
(உண்மை, விழிப்புணர்வு பதிவு)
No comments:
Post a Comment