2010 கணக்கெடுப்பில்
கேட்டவிபரங்கள்"தற்போது
குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக கேள்விகள் இடம்பெற்றுள்ளது
இந்தியாவில் மக்களின் எண்ணிக்கை, பொருளாதாரம், எழுத்தறிவு மற்றும் கல்வியறிவு, பெற்றோர் விகிதம், உறைவிட விவரம், நகரமயமாக்கம், பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள், மொழி, மதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியவை பற்றிய விவரங்களைச் சேகரிக்க அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கையாகும் இது. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1872-லிருந்து இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது, இருப்பினும் 2011-ல்தான் முதன்முறையாக உயிரியளவு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இந்தியா 29 மாநிலங்களும் 7 ஒன்றியப் பகுதிகளும் கொண்டுள்ளது. மொத்தம் 640 மாவட்டங்கள், 5,767 வட்டங்கள், 7,933 நகரங்கள், 600,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2.7 மில்லியன் அலுவலர்கள், 7,933 நகரங்களிலும், 600,000 கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று பாலினம், சமயம், கல்வி, தொழில் வாரியான மக்கட்தொகையின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தனர்.
இக்கணக்கெடுப்பிற்கான மொத்தச் செலவு தோராயமாக ₹2200 கோடிகள்
No comments:
Post a Comment