Monday, 20 January 2020

*ரசிக்க ருசிக்க!ஆரோக்கிய சமையல்: காய்கறி பரோத்தா செய்முறை

*ரசிக்க ருசிக்க!ஆரோக்கிய சமையல்: காய்கறி பரோத்தா செய்முறை!* *பகிர்வு* *┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​* காய்கறி பரோத்தா (வெஜிடபிள் பரோட்டா) செய்யத் தேவையான பொருட்கள்: பரோட்டாக்கள் – 10 வெங்காயம் – 2 நாட்டுத் தக்காளி(பெரியது) – 1 குடமிளகாய்(பெரியது) -1 காரட் – 1 பட்டாணி – 1 டம்ளர் கொண்டைக்கடலை சுண்டல் – 1 டம்ளர் பூண்டு – 2 பல்லு எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் கொத்தமல்லி – அலங்கரிக்க காரப்பொடி – 2 டீஸ்பூன் கேஸரி கலர்(சிவப்பு நிற) – 1/2 டீஸ்பூன் பட்டை – 8 சோம்பு – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 2 கிராம்பு – 6 எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: பரோட்டாக்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். .கொண்டைக்கடலையை முந்தின நாள் இரவே ஊற வைத்து கொத்து பரோட்டா செய்யும் வேளையிலே குக்கரில் சுண்டல் செய்யும் பதத்திற்கு ஏற்ப வேக வைத்துத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து,வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கின பூண்டையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கினதும் தக்காளி,குடமிளகாய் போட்டு சற்று வதக்கவும். தண்ணீர் விடத் தேவையில்லை. காரட்,பச்சைப் பட்டாணியையும் சேர்த்து உப்பு, காரப்பொடி சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும். மசாலாக்குத் தேவையான பொருட்களைப் பச்சையாகவே திரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகள் வெந்தவுடன் மசாலாப்பொடி, சிவப்பு நிறமூட்டி சேர்த்து நன்றாகக் கிளறவும். இதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து காய்களுடன் ஒன்று சேர்க்கவும். .காரம் பார்த்து விட்டு எலுமிச்சைச்சாற்றைச் சேர்க்கவும். .பரோட்டா துண்டுகளைக் காய்கறிக்கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். அலங்காரத்திற்குக் கொத்தமல்லித்தழைகளைச் சேர்த்துப் பரிமாறவும். கூடுதல் குறிப்புகள்: 1.எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வெஜிடபிள் பரோட்டாக்களைச் செய்யலாம். 2.காரப்பொடிக்குப் பதிலாக கடலைப்பருப்பு(1 டீஸ்பூன்),தனியா(1 டீஸ்பூன்),வெந்தயம்(5),மிளகாய்வற்றல்(4 டீஸ்பூன்) ஆகியனவற்றை வாசனை வரும் வரை வறுத்து ஆற விட்டுப் பொடித்து காய்களில் சேர்த்தும் செய்யலாம். இவ்வகை முறையில் காரப்பொடியால் காரம் கூடி விட்டது போன்ற பதட்டங்களைத் தவிர்க்கலாம். 3.காரப்பொடிக்குப் பதில் வீட்டில் தயாரித்த சாம்பார் பொடியையும் பயன்படுத்தலாம். 4.எலுமிச்சைச்சாற்றைக் காய்கறிகள் வதங்கினதும் பரோட்டாக்களைச் சேர்க்கும் முன்பு தான் போட வேண்டும். 5.இவ்வகை பரோட்டாக்களுக்கு ஆனியன் ரெய்தா,வெஜிடபிள் ரெய்த்தா,வெள்ளரிப் பச்சடி போன்றன சிறந்த இணைகள். *பகிர்வு* *┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

No comments:

Post a Comment