Sunday, 19 January 2020

விழிப்புணர்வு - வங்கி தகவல்கள் கேட்டு வரும் ஃபோன் கால்கள்

விழிப்புணர்வு - வங்கி தகவல்கள் கேட்டு வரும் ஃபோன் கால்கள்

உங்களின் வங்கியிலிருந்து பேசுகிறோம், உங்களின் ஏடிஎம் கார்டு, ஏடிஎம் பின் நம்பரை தாருங்கள் என அதிகமான ஃபோன் கால்கள் தற்போது வருகின்றன. வங்கியிலிருந்து ஃபோனில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை (முகவரி, ஏடிஎம் கார்டு எண், ஏடிஎம் பின் நம்பர் போன்றவற்றை) கேட்கும் உரிமையில்லை, இவ்வாறு செய்வது குற்றம். வங்கியில் உள்ளவர்கள் இவ்வாறு கேட்கவும் மாட்டார்கள். வங்கியிலிருந்து பேசுகிறோம் என்று பொய்யாக சொல்லி உங்களின் ஏடிஎம் மற்றும் மற்ற கார்டு எண்களை பெற்று, அதை வைத்து உங்களின் அக்கவுண்டிலிருந்து பணத்தை பயன்படுத்த, இவ்வாறு கொள்ளையர்கள் செய்கிறார்கள். எனவே, இது போன்ற எந்த ஃபோன் கால்கள் வந்தால், அவர்களுடன் வாதாட வேண்டாம், நீங்கள் வங்கியிலிருந்து பேசினால், எனக்கு கடிதமாக அனுப்புங்கள் என்று சொல்லி ஃபோன் காலை துண்டித்து விடுங்கள். வங்கிகள் மட்டுமல்ல, யாரும் எந்த நாட்டிலும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை ஃபோனில் கேட்டு பெறுவது இயல்பு அல்ல. உங்களின் சுய தகவல்களை மிரட்டினால் கூட கூறாதீர்கள், இது வெறும் போலியான மிரட்டலே! கேட்டவுடன் சுய தகவல்களை கொடுத்து, நஷ்டப்படாதீர்கள்.



Shared from The Tamil Qur'an iPhone/iPad App. Get it free from Apple App Store - https://apple.co/2Y3xmQC

No comments:

Post a Comment