Saturday, 11 January 2020

குடியுரிமை போராட்ட விஷயத்தில் தளர்ந்து விட்டீர்களா அல்லது சாதித்து விட்டீர்களா?

தமிழக முஸ்லிம்களே..

குடியுரிமை போராட்ட விஷயத்தில் தளர்ந்து விட்டீர்களா அல்லது சாதித்து விட்டீர்களா?
நாம் இன்னும் எதையும் சாதிக்கவில்லை.. என்பதை மறந்து விடாதீர்கள்..
இது நம் வீட்டு பிரச்சினை .. நாட்டு பிரச்சனை..
நமது சந்ததிகளின் பிரச்சனை..

இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு வலுவடைந்து கொண்டிருக்கிறது நீங்கள் மட்டும் வீரியமிக்க போராட்டங்களை செய்யாமல்.குளிர் காயலாம் என்று நினைக்கிறீர்களா?

இன்னும் மத்திய அரசு ஒரு அங்குலம் கூட இந்த சட்டத்தை விட்டு நாங்கள் நகர மாட்டோம் என்று தெளிவாக அறிவித்துவிட்டார்கள்..

அகதி வாழ்க்கை என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பிரித்து வைத்து விடுவார்கள்..
எந்த காலத்திற்கும் நீங்கள் இந்தியாவில் குடியுரிமை வாங்கி விட முடியாது..

அதிமுக அமைச்சர்களும் தமிழக முதலமைச்சரும் சொல்கிறார்கள்.. இந்த குடியுரிமை சட்டத் தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது நாங்கள் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு அரணாக இருப்போம் என்ற வெற்று வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள்...

அப்படி சொல்பவர்கள் தான் தமிழகத்தில் அகதி முகாம்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்..

இதுவரை சொன்ன எந்த கருத்தையும் அவர்கள் வாபஸ் பெறவில்லை..

போராட்டத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும்..

ஷேக் மைதீன்


Sent from my iPhone

No comments:

Post a Comment