Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Sunday 24 March 2024

சிறுவர்கள் நோன்பு நோற்பது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறுவர்கள் நோன்பு நோற்பது

இஸ்லாத்தின் எல்லாக் கடமைகளும் பருவ வயதை அடைந்தவர்களுக்கு மட்டுமே உரியதாகும். சிறுவர்களுக்கு நோன்போ, தொழுகையோ கடமையில்லை என்றாலும் தொழுகைக்கு ஏழு வயது முதலே பயிற்சியளிக்க வேண்டும். பத்து வயதில் தொழாவிட்டால் அடிக்க வேண்டும் என்றெல்லாம் உள்ளன. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை இத்தகைய கட்டளை ஏதும் நபிகள் நாயகத்தினால் பிறப்பிக்கப்படவில்லை. பருவமடைந்தவர்களுக்கே பயணத்தில் இருப்பதாலும், நோயாளியாக இருப்பதாலும், கர்ப்பிணியாக இருப்பதாலும் நோன்பிலிருந்து மார்க்கம் சலுகையளித்துள்ளது. எனவே சிறுவர்களை தொழுகையைப் போல் கட்டாயப்படுத்தி நோன்பு நோற்குமாறு வற்புறுத்தக் கூடாது.

தொழுகைக்குப் பலவிதமான நடைமுறைகள், ஓத வேண்டியவை உள்ளன. அவற்றையெல்லாம் சிறுவயது முதலே கற்றுப் பயிற்சி எடுக்கும் அவசியம் உள்ளது. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை பருவமடைந்தால் அடுத்த நாளே நோன்பைக் கடைப்பிடிக்க முடியும்.

அதே நேரத்தில் சிறுவர்களுக்குச் சக்தியிருந்தால் அவர்களையும் நோன்பு நோற்கச் செய்ய அனுமதி உள்ளது. அனுமதி தானே தவிர அவசியமில்லை. ரமளான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு தான் கடமையான நோன்பாக இருந்தது. இந்த நோன்பு குறித்துப் பின்வரும் செய்தி புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

ஆஷுரா தினத்தில் நாங்களும் நோன்பு நோற்போம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். அவர்களுக்குத் துணியால் விளையாட்டுப் பொருளையும் தயார் செய்து வைத்துக் கொள்வோம். அவர்கள் உணவு கேட்கும் போது அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து நோன்பு துறக்கும் வரை கவனத்தைத் திருப்புவோம்.

அறிவிப்பவர்: ருபைய்யி பின்த் முஅவித் (ரலி)

நூல்கள்: புகாரி 1960, முஸ்லிம் 2092

இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள் என்பது தான் தெரிகிறது. அவர்கள் தொழுகைக்குக் கட்டளையிட்டது போல் கட்டளை இடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும் ஆஷுரா நோன்பு என்பது ஒரு நாள் மட்டுமே நோற்கும் நோன்பாகும். ஒரு நாள் என்பதால் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காட்டலாம். ரமளான் நோன்பு ஒரு மாதம் முழுவதும் உள்ள நோன்பாகும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து சிறுவர்கள் நோற்றதாக எந்த ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் சிறுவர்கள் நோன்பு நோற்பதால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றால் அவர்களையும் நோன்புக்குப் பயிற்றுவிக்கலாம்.

மகத்தான அர்ஷின் அதிபதியே !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புடையவனே !
மகத்தான அர்ஷின் அதிபதியே !
பரக்கத்தான ரமளான் மாத ஜுமுஆ நாளில் அதிகாலையில் 
உன்னை வணங்கித் துதிக்கிறோம்.
எங்கள் கரங்களை உன்மேல்  உள்ள நம்பிக்கையில் உன் பால் உயர்த்தி விட்டோம்.

நீ மிகவும் சங்கைக்குரியவன்.
எங்களுடைய பிரார்த்தனையை நிராகரிக்கமாட்டாய் என நம்புகிறோம்.
எங்கள்தேவைகளை நிறைவேற்றுவாயாக !

துன்பங்களைப் போக்குபவனே !
கவலைப்பட்டு கண்ணீர் சிந்துவோரின்
கவலைகளைப் போக்குவாயாக !
அவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களின் மீது கருணை கொள்வாயாக !

திருமண வயதில் இருப்போருக்கு நல்ல சாலிஹான வாழ்க்கைத்துணையை அமைத்துக் கொடுப்பாயாக !
குழந்தைப் பேறுக்காக ஏங்குவோருக்கு
நல்ல வாரிசைத் தருவாயாக !
ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளைகளிடம் பாசத்தோடும் நேசத்தோடும் பரிவுடன் நடந்திடச் செய்வாயாக !

எங்களுக்கு ஆரோக்கியத்தை அளிப்பாயாக !
எங்களின் பாவங்களை பொருட்படுத்தாமல் மன்னித்து எங்களின் ஏட்டிலிருந்து அழித்து விடுவாயாக !

எங்களின் பிள்ளைகள் பெற்றோர்கள் மீது அன்பு செலுத்துபவர்களாக ஆக்கி வைப்பாயாக ! அவர்கள் சந்ததிகளும் எங்களின்மீது பாசம் நிறைந்தவர்களாக மாற்றி வைப்பாயாக !
எங்கள் உள்ளங்களை விரிவாக்குவாயாக ! எங்க நிலைமைகளை சிறந்த நிலைமைக்கு மாற்றுவாயாக ! எங்களின்எதிர்பார்ப்புகளை நிதர்சனமாக்குவாயக !
எங்களின் நோய்களை குணப்படுத்துவாயாக ! 
நோய் நொடிகளை எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக !
பூரணசுகத்தை எங்களுக்கு வழங்குவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

மீண்டும் உயிர் கொடுத்து நோன்பை நோற்க வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழனைத்தும்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மீண்டும் உயிர் கொடுத்து நோன்பை நோற்க  வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழனைத்தும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருளைப் பொழிவாயாக !

அல்லாஹ் ! உள்ளங்களை மாற்றுபவனே ! எங்கள்  உள்ளத்தை
உன்னுடைய ஈமானின்பால் உறுதியாக்கி வைப்பாயாக !

நாங்கள் எதன் பால் ஆர்வமாக இருக்கிறேமோ அதிலிருந்து எங்களை  மீட்டெடுப்பாயாக !
நீ எதனை செய்வதின் பால் ஆர்வப்படுவாயோ அதன் பால் எங்களை  ஆர்வமடையச் செய்திடுவாயாக !

யா அல்லாஹ் ! இப்பூமி விசாலமாக இருந்தாலும் எனக்கு நெருக்கடி யாக மாறினால் மீன் வயிற்றில் இருந்த யூனுஸ் நபிக்கு உதவியது போல் எனக்கு உதவுவாயாக !
 
எங்கள் இறைவனே ! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை அதிலிருந்து தவறுமாறு செய்து விடாதே ! 
நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு ரஹ்மத் என்னும் நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாக இருக்கிறாய்.

பித்னாவும் ஃபஸாதும் நிறைந்த இந்த காலகட்டத்தில் எங்களுக்கு சத்தியத்தை சத்தியம் எனவும் அசத்தியத்தை அசாத்தியம் எனவும் தெளிவுறக் காட்டுவாயாக !

அதில் குழப்பமடையச் செய்துவிடாதே ! நாங்கள் வழி தவறிவிடுவோம்.
நேர்வழியிலேயே எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

எங்களை பரிபூரணமான ஈமான் கொண்டவர்களாக !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மத் !

யா அல்லாஹ் ! 
எங்களை பரிபூரணமான ஈமான் கொண்டவர்களாக !
நீ விதித்த கடமைமைகளை நிறைவேற்றுபவர்களாக !
தொழுகைகளை பேணுபவர்களாக !
ஜகாத்தை கொடுப்பவர்களாக !
உன்னிடம் இருப்பவைகளைத்  தேடுபவர்களாக !
உன்னுடைய மன்னிப்பை ஆதரவு வைத்தவர்களாக !
நேர்வழியைப் பற்றிப்பிடித்தவர்களாக !
கேளிக்கைகளைப் புறக்கணித்தவர்களாக !
இவ்வுலகின் மீது பற்றற்றவர்களாக !
மறுமையின் மீது ஆர்வமுடையவர்களாக !
உன் விதியின் மீது திருப்தியுடையவர்களாக !

அருட்கொடைகளின் மீது நன்றி செலுத்துபவர்களாக !
துன்பங்களின் மீது பொருமையாளர்களாக !
மறுமை நாளில் உன்னுடைய நபியும், தூதரும்,
தூய்மையான நண்பரும், நேசத்துக்குறிய வருமான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கொடியின் கீழ் வலம் வருபவர்களாக !
ஹவ்ளுல் கவ்ஸருக்கு நீர் அருந்த வருபவர்களாக !
மென்மையான மற்றும் கனமான பட்டாடைகளை அணிந்தவர்களாக !
சொர்கத்தின் உணவுகளை உண்பவர்களாக !
பாலையும், சுத்தமான தேனையும் அருந்துபவர்களாக,
உன் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்திக்கீன்கள் சத்தியவான்கள் ஷுஹதாக்கள் உயிர்த்தியாகிகள் ஸாலிஹீன்கள் நற்கருமங்கள் செய்தவர்கள் ஆகியோருடன் உடன் இருப்பவர்களாக ஆக்குவாயாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

எங்களுக்கு உயிர் தந்து தொழவும் ஸஹர் செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மீண்டும் எங்களுக்கு உயிர் தந்து தொழவும் ஸஹர் செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !

தன்னுடைய சொல்லாலும் செயலாலும் எங்களுக்கு வழிகாட்டிய ரஹ்மத்துல் ஆலமீன் அண்ணல் நபிமீது உன் ஸலவாத்தைப் பொழிவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லங்களை மகிழ்ச்சி, குதூகலம் அன்பு, மனநிறைவு, மனநிம்மதி, அமைதி,  பாதுகாப்பு, மற்றும் உன் அருட்கொடைகளால்
நிரப்புவாயாக !
பொருளாதாரம் குடும்பம் மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கையில் 
பரக்கத் செய்வாயாக !

அருளாளனே ! எங்கள் இதயங்களை அன்பால் ஒன்றிணைப்பாயாக !
எங்களுக்கிடையே சமரசம் நிலவச்செய்வாயாக ! அமைதியின் பாதையில் எங்களை வழி நடத்துவாயாக !
ரஹ்மானே ! எங்கள் தவறுகளை மறைத்து, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக !

எங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் மீது கருணை காட்டுவாயாக ! அவர்களின் பிழை பாவங்களை மன்னித்தருள்வாயாக !
எங்களில் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவாயாக !
நேர்வழியில் செல்லாமல் இருப்பவரை இன்னும் வழிதவறியவர்களை
நேர்வழியின் பால்
இழுத்து வருவாயாக !

தயாளனே ! நாங்கள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து எங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் ரிஜ்கை வழங்குவாயாக !
ரப்புல் ஆலமீனே ! நாங்கள் உன்னை சந்திக்கும் வரை, நீ எங்கள் மீது திருப்தி அடைந்தவனாக எங்களை ஆக்குவாயாக !ஆமீன் ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !

அமீரகத்தில் பல பகுதிகளிலிருந்து அய்மான் சங்கத்திற்கு கோரிக்கை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பதிவு நாள் : 23-03-2024.

அபுதாபி :

 கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக

அமீரகத்தில் பல பகுதிகளிலிருந்து  அய்மான் சங்கத்திற்கு  கோரிக்கைகள் வைத்தார்கள். .

 என்னவென்றால் அபுதாபி முஸ்ஸபா பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் உணவில்லாமல் தங்க இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார் அவரை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள் 

 அதன் அடிப்படையில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்கள் அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அந்த நபருக்கு  உடனடியாக  தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு கேட்டுக்  கொண்டார்கள் 

 நான்கு நாட்களாக தேடுதல்  பணியில் இருந்த அய்மான் சங்கத்தின்  நிர்வாகிகளுக்கு இன்று காலை ஒரு தொலைபேசியின் மூலம் கடையநல்லூர் அருகே உள்ள சுரண்டை என்கின்ற ஊரைச் சேர்ந்த  சகோதரர் வின்சென்ட் அவர்கள் தொடர்பு கொண்டு  நீங்கள் தேடிக் கொண்டிருக்க கூடிய நபர்  இங்கு இருக்கிறார் என்று சொன்னதும் அவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி விரைவில் இந்திய தூதரகத்தின் மூலமாக  தமிழகத்திற்கு அனுப்பி வைக்கலாம்  என்று சொன்னோம்.

 தற்காலிகமாக  சகோதரர் வின்சென்ட் அவர்களின்  பராமரிப்பில் அவரைத் தங்க வைத்துள்ளோம்.

அய்மான் சங்கத்தின் சார்பாக  நன்றிகளை  சகோதரர் வின்சென்ட். அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டோம் 

 விரைவில் இந்திய தூதரகத்தின் உதவியுடன் தமிழகம் திரும்ப அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் அனைத்து உதவிகளும் செய்து கொண்டு இருக்கின்றார்கள் இறைவனை பிரார்த்திப்போம்.

அய்மான் சங்கம்
அபுதாபி

 மேலும் விவரங்களுக்கு அய்மான் MAK - 00971553038066.

பொறுமை_ஒரு_இபாதத்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பொறுமை_ஒரு_இபாதத்!

اِنِّىْ جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوْۤا ۙ اَنَّهُمْ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏

(உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்" (என்றும் இறைவன் கூறுவான்).

(அல்குர்ஆன் : 23:111)

அல்லாஹ் அவர்கள் தொழுததினால், நோன்பு நோற்றதினால் தர்மம் வழங்கினதினால் என்று கூறவில்லை பொறுமையாக இருந்து சகித்துக் கொண்டதினால் என்றுதான் குறிப்பிடுகிறான்.

பொறுமை என்பது ஒருவர் வலி வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதை அவர் சகித்துக் கொண்டு பொறுமையுடன் இருப்பது என்பது ஒரு இபாதத்தாக மாறுகிறது (வணக்க வழிபாடாக ஆகும்)

📚ததப்ருல் குர்ஆன் : 2021

அபூ மூஸா அல் அஷ்அரி ரழி and அபூதர் அல் கிஃபாரீ ரழி அவர்கள் வாழ்கை வரலாறு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

 https://youtu.be/c4oVKFAz5S8 
அபூதர் அல் கிஃபாரீ ரழி அவர்கள் வாழ்கை வரலாறு 24-03-2024 

https://youtu.be/G_GMIKHf34M
அபூ மூஸா அல் அஷ்அரி ரழி அவர்கள் வாழ்கை வரலாறு 23-03-2024



இராமநாதபுரம் & பரமக்குடியில் நான்கு ஈமானிய அமர்வு 23-3-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இராமநாதபுரம் & பரமக்குடியில் 
 நான்கு ஈமானிய அமர்வு 23-3-2024

1)பரமக்குடி மேலப்பள்ளிவாசலில் 
லுஹர் தொழுகைக்கு பின் கோடை வெப்பமும் நரகமும்  என்ற தலைப்பிலும், 

2)பரமக்குடி பாரதிநகரில் உள்ள தமுமுகவின் மஸ்ஜித் தஃக்வா பள்ளிவாசலில் மாலை 5 மணிக்கு நோன்பாளிகள் பேண வேண்டிய பண்புகள் என்ற தலைப்பிலும்

3)இராமநாதபுரம் மஸ்ஜித் தக்வா பள்ளியில் அபூதர் அல் கிஃபாரீ ரழி 
அவர்கள் வாழ்கை வரலாறு 
 
மெளலவி தாஹா புகாரி அவர்கள் மார்க்க விளக்க உரை வழங்கினார்கள்.

4)பரமக்குடி மஸ்ஜித் தஃக்வா பள்ளிவாசலில் மாலை 3 மணிக்கு பெண்களுக்கு குர்ஆன் வசனத்தை பொருள் உணர்ந்து ஓதுவது எப்படி என்ற தலைப்பில் முபல்லிகா மர்யம் புஸ்ரா வகுப்பெடுத்தார்கள்.

இந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட சகோதரர்கள்  சகோதரிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.....

தகவல்/செய்தி
இஸ்லாமிய பிரச்சார பேரவை
இராமநாதபுரம் & பரமக்குடி

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது :-

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது :-

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ

'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்' 

என்று ஓதுவார்கள். 

பொருள்:

கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.) 
ஸஹீஹ் புகாரி : 6346

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

திருக்குர்ஆன் காட்டும் சிந்தனைகள் என்ற தலைப்பில் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம் உரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


https://youtu.be/wOp9V1kuEJ8?si=BhU8uPrCS8EXjFvr  



Tuesday 19 March 2024

இது தமிழ்நாடா இல்லை உத்தர பிரதேசமா.?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது திராவிட ஆட்சியில்  குற்றமா.?

இது தமிழ்நாடா இல்லை உத்தர பிரதேசமா.?

திராவிட மாடல் ஆட்சியில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படும் அவல நிலை.!
**********

திருச்சி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தொகுதியில் உள்ள  கல்லணை ரோட்டில், வேங்கூர் பகுதியில் உள்ள இந்திரா நகர் 2 வது தெருவில் 22 ஆண்டுகளாக முறையாக பத்திரம் போட்டு,2024 வரை மாநகராட்சி வரி கட்டிய ஆவணங்களுடன் இருக்கும் பள்ளிவாசல் நிலத்தில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாக பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது. பள்ளிவாசல் பேஸ் மட்டம் வரை போடப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு வந்த நிலையில் பள்ளிவாசல் இடத்திற்கு எதிராக உள்ள பிஜேபி ஒன்றிய செயலாளர் பிரபாகரன் இந்த இடம் பூங்காவிற்கு சொந்தமானது இந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டக்கூடாது என்று அழுத்தம் கொடுத்து பள்ளி கட்டுமான பணியை நிறுத்திவிட்டார்.

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் KN.சேகரன் அவர்களையும் மற்றும் ஆளும் அரசின் முக்கிய பொறுப்பாளர்களையும் சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்தும் அவர்கள் பிஜேபியின் அழுத்தத்திற்கு அடிபணிந்து எந்தவித செவியும் சாய்க்காமல் காலத்தை கடத்திவிட்டனர்.

முன்னாள் திமுகவின் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் KN.சேகரன் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் பள்ளியை கட்டுமான பணிகள் செய்யாமல் இருந்து வந்தனர், ஆனால் அவரும் கையை விரித்து விட்டார்.

ஆனால் ரமலான் மாதத்தில் பள்ளிவாசலில் தொழுகையும் இப்தார் நிகழ்வுகளும் நடந்து வந்தன அதே போன்று இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என்று நேற்று அந்த இடத்தை சுத்தம் செய்ய போனபோது வழக்கம் போல பிஜேபி ஒன்றிய செயலாளர் கொலை செய்து விடுவேன்பள்ளிவாசலை கட்ட முடியாது இது உத்தரகாண்ட்,ஜார்கண்டு  போல கலவரம் செய்து விடுவேன் என்றும் மிரட்டியும் காவல்துறை முன்பும் அதே வார்த்தைகளை கூறியபோதும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று 17.03.2024 லுஹர் தொழுகைக்கு பிறகு சென்று  களத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகளும், SDPI கட்சி, மமக கட்சி ஆகிய நிர்வாகிகளும்,அந்த பகுதி இளைஞர்களும் ஒன்றிணைந்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். 

ஆனால் காவல்துறை அதிகாரிகளும், தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர், துணை தாசில்தரும் அந்த இடத்தில் அசர் தொழுகை கூடாது சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று தொழுகையை நடத்தக் கூடாது என்று மிரட்டி வந்தனர்.

ஆனால் பலமுறை அஸர் தொழுகை நிறைவேற்ற முயற்சித்தும் காவல்துறை  தடுத்து வந்தனர்.

 இறுதியாக அஸர் தொழுகையை நிறைவேற்றினோம். அஸர் தொழுகையை தொழுதது குற்றம் என்று அனைவரையும் கைது செய்ய வாகனங்களை வரவழைத்தது காவல்துறை.

இந்த சம்பவம் அறிந்து அந்தப் பகுதியில் பொதுமக்களும், SDPI , மமக கட்சியினுடைய நிர்வாகிகளும் பெருந்திரளாக திரண்டதன் விளைவாக கைது செய்வதை கைவிட்டது காவல்துறை.

முறையாக பத்திரப்பதிவு செய்து வரி கட்டிய ரசீதுடன் இருக்கும் பள்ளிவாசலை கட்ட விடாமல் தடுக்கும் பிஜேபியின் ஒன்றிய செயலாளருக்கு இசைவு கொடுக்கும் தமிழக அர


சின் காவல் மற்றும் மற்ற துறையை வன்மையாக கண்டிக்கிறோம் சிறுபான்மை சமூகத்தின் மீது தொடுக்கப்படும் இது போன்ற தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இது உத்தரப்பிரதேசமா.? இல்ல தமிழ்நாடா? என்ற ஐயம் திராவிட மாடல் ஆட்சியில் நடக்கின்றது.

நோன்பிருப்போம், உணவளிப்போம் - புளியங்குடியில் தமுமுக அறக்கட்டளையின்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


புளியங்குடியில் தமுமுக அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹித் பள்ளிவாசல் சார்பாக நோன்பு காலங்களில் ஏழை குடும்பங்களுக்கு உணவு தயார் செய்வதற்காக உணவுப் பொருட்களை நோன்பிருப்போம், உணவளிப்போம் திட்டத்தின் கீழ் கடந்த ஏழு ஆண்டுகளைத் தொடர்ந்து 8 வது ஆண்டாக இந்த வருடம் சுமார் 65 குடும்பங்களுக்கு 1,50,000 ரூபாய் மதிப்புள்ள பல சரக்கு சாமான்கள் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் மஸ்‌ஜிதுர் ரஹ்மான் தலைவர் எம்.எஸ்.அப்துர் ரஹ்மான், செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் சதாம் உசேன், துணைத் தலைவர் சமதானியா சாகுல், துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது, முகம்மது ரபீக், எம்.எஸ்.ஹமீது, இமாம் இப்னு தைமியா இஸ்லாமிய கல்லூரி தாளாளர் பொறியாளர் காஜா முஹைதீன் செயற்குழு உறுப்பினர் ஜாஹிர் தீன், மத்ரஸா பொறுப்பாளர் பஷீர் ஒலிEx.mc, தமுமுக நகர செயலாளர் அசன், பள்ளிவாசல் இமாம் மவுலவி அப்துல் மஜீத் பைஜி அட்மின் சுலைமான் உள்ளிட்டோர் இந்த பணியினை சிறப்பாக செய்தனர்.

ஏன் குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் அல்லாஹ்வின் இல்லங்கள் இந்த பூமியில் உருவாக்க பட வேண்டும்???

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மூன்று நிமிடங்கள் மட்டுமே உள்ள இந்த காணொளியை பாருங்கள்:-
https://youtu.be/-Do1Y0Br4BI?feature=shared

ஏன் குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் அல்லாஹ்வின் இல்லங்கள் இந்த பூமியில் உருவாக்க பட வேண்டும்???

அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ அடிப்படையில் உருவாக்குவதால் இந்த சமூகத்திற்கு ஏற்படும் நலவுகள் என்ன???

ஏன் மீண்டும் மீண்டும் அல்லாஹ்வின் இல்லத்திற்காக கொடுங்கள் கொடுங்கள் என கேட்டு கொண்டே இருக்கிறோம்

முஹம்மது நபி ﷺ அவர்கள் மக்காவை விட்டு மதினாவிற்கு வந்து உடன் செய்த முதல் பணி எது

இதை உணர்ந்த சமூகம் எப்போதும் அல்லாஹ்வின் இல்லங்கள் இந்த பூமியில் உருவாக்க போட்டி போடுவார்கள்

நாளை மறுமையில் கிடைக்கும் கூலியை உறுதியாக ஈமான் கொண்டால் அதிகம் அதிகம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வார்கள்

அப்படி அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ் வழங்கிய பொருளாதாரத்தை அல்லாஹ்வின் இல்லம் கட்டுவதற்காக இதுவரை 3100 சதுர அடிக்கான பொருளாதார உதவியை அல்லாஹ்வின் நல்லடியார்கள் நமது காரைக்கால் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிக்கு கொடுத்து உதவி உள்ளார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக

இன்னும் 500 சதுர அடிக்கான பொருளாதார உதவ மட்டுமே தேவைப்படுகிறது.

ஒரு சதுர அடி 2500₹ மட்டுமே

இந்த ரமலான் காலங்களில் அதிகம் அதிகம் கொடுத்து உதவுங்கள்

அதிகம் அதிகம் பிறருக்காவது அனுப்பி விடுங்கள்

இராமநாதபுரம் & பரமக்குடியில் மூன்று ஈமானிய அமர்வு 17-3-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,




இராமநாதபுரம் & பரமக்குடியில் 
 மூன்று ஈமானிய அமர்வு 17-3-2024

பரமக்குடி மேலப்பள்ளிவாசலில் 
மாலை 5 -30 மணிக்கு தக்வா வை பேணி பாதுகாப்போம் என்ற தலைப்பிலும், 

பரமக்குடி பாரதிநகரில் உள்ள தமுமுகவின் மஸ்ஜித் தஃக்வா பள்ளிவாசலில் இரவு 6-45 மணிக்கு பள்ளிவாசல்களை பேணி பாதுகாப்போம் என்ற தலைப்பிலும்

இராமநாதபுரம் மஸ்ஜித் தக்வா பள்ளியில் சத்திய சாஹபி தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலி அவர்கள் வாழ்கை வரலாறு 
 
மெளலவி அப்துல் காதர் மன்பயி அவர்கள் மார்க்க விளக்க உரை வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரிகள்  கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.....

தகவல்/செய்தி
இஸ்லாமிய பிரச்சார பேரவை
இராமநாதபுரம்

ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல்

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது முக்கியமான கொள்கையாகும். ஒவ்வொருவரும் தத்தமது செய்கைகளுக்குப் பொறுப்பாளிகள் என்றாலும் இதிலிருந்து சில வணக்கங்கள் மட்டும் விதி விலக்குப் பெறுகின்றன. நோன்பும் அவ்வாறு விதிவிலக்குப் பெற்ற வணக்கங்களில் ஒன்றாகும்.

நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1952

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார். அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா?என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்! நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1953

புகாரியின் மற்றொரு ஹதீஸில் ஒரு பெண் வந்து இவ்வாறு கேட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நோன்பு கடமையாகி களாவாகவுள்ள நிலையில் யாரேனும் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருக்காக நோன்பு நோற்கலாம் என்று கூறுவதை விட நோற்பது அவசியம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கடனுடன் நோன்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பிட்டுள்ளார்கள். மேலும் கடனை விட நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதியுடையது எனவும் கூறுகிறார்கள்.

இறந்தவர்களுக்காக மார்க்கத்தில் இல்லாத கத்தம் பாத்திஹா ஓதுவதை விடுத்து இறந்தவர் மீது நோன்பு களாவாக இருந்தால் அதை நிறைவேற்றலாம். இறந்தவரின் சொத்துக்களுக்கு மட்டும் வாரிசாக ஆசைப்படுவோர் மார்க்கம் அவர்கள் மீது சுமத்திய இந்தக் கடமையைச் செய்வதில்லை. நாமறிந்த வரை பெற்றோர்களுக்காக ஹஜ் செய்பவர்களைக் கூட காண்கிறோம். ஆனால் நோன்பு நோற்பவர்களைக் காண முடியவில்லை. பெற்றோர் மீது கடமையான நோன்புகள் களாவாக இருந்தால் தான் வாரிசுகள் நோற்க வேண்டும். உபரியான சுன்னத்தான நோன்புகளுக்கு ஆதாரம் இல்லை. ஏனெனில் இறந்தவர்களை அது குறித்து அல்லாஹ் விசாரிக்க மாட்டான். மேலும் இந்த ஹதீஸில் கடமையான நோன்பு பற்றியே கூறப்பட்டுள்ளது

நபி நாயகம் (ஸல்) கற்றுத்தந்த துவாக்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


நபி நாயகம் (ஸல்) கற்றுத்தந்த துவாக்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்தனர்.

அல்லாஹும்ம அப்து(க்)க வப்னு அப்தி(க்)க கான யஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த வஅன்ன முஹம்மதன் அப்து(க்)க வரசூலு(க்)க வஅன்(த்)த அஃலமு பிஹி மின்னீ இன் கான முஹ்ஸினன் ஃபஸித் ஃபீ இஹ்ஸானிஹி வஇன் கான முஸீஅன் ஃபக்ஃபிர்லஹு வலா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா தஃப்தின்னா பஃதஹு

பொருள்: இறைவா! இவர் உனது அடிமையும் உனது அடிமையின் மகனுமாவார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி உனது அடியாரும், தூதரும் ஆவார் என்றும் சாட்சி கூறிக் கொண்டு இருந்தார். அவரைப் பற்றி நீயே நன்கு அறிந்தவன். இவர் நல்லவராக இருந்தால் இவரது நற்கூலியை அதிகரிப்பாயாக! இவர் தீயவராக இருந்தால் இவரை மன்னித்து விடுவாயாக! இவரது நற்செயலுக்கான கூலியை எங்களுக்குத் தடுத்து விடாதே! இவருக்குப் பின் எங்களைச் சோதனையில் ஆழ்த்தி விடாதே!

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்னத் அபூ யஃலா (11/477)

ஒரு ஜனாஸாத் தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு துஆச் செய்தனர்.

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஃபு அன்ஹு வஆஃபிஹி வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பிமாயின் வஸல்ஜின் வபரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ(க்)கிஹி ஃபித்ன(த்)தல் கப்ரி வஅதாபன்னார்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 1601

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்.

பொருள்: இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக! பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப் படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்தப்படுவது போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக! கப்ரின் வேதனையை விட்டும், நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக!

இந்த துஆவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த போது மனனம் செய்து கொண்டேன். இந்தச் சிறப்பான துஆவின் காரணத்தால் அந்த மய்யித்தாக நான் இருக்கக் கூடாதா என்று எண்ணினேன்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 1600

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வரும் துஆவை ஓதுவார்கள். அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஷாஹிதினா வகாயிபினா வஸகீரினா வகபீரினா வதகரினா வஉன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃப்பை(த்)தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான் அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு.

பொருள்: இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், இங்கே வந்திருப்போரையும், வராதவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்து விடுவாயாக! இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் இறந்தவர்களை ஈமானுடன் இறக்கச் செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் கூலியைத் தடுத்து விடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்து விடாதே!

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்கள்: அபூ தாவூத் 2786, இப்னு மாஜா 1487

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்துள்ளனர்.

அல்லாஹும்ம இன்ன ஃபுலானப்ன ஃபுலானின் ஃபீ திம்மதி(க்)க வஹப்லி ஜிவாரி(க்)க ஃப(க்)கிஹி மின் ஃபித்ன(த்)தில் கப்ரி வமின் அதா பின்னாரி ஃபஅன்(த்)த அஹ்லுல் வஃபாயி வல்ஹக்கி ஃபக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்

பொருள்: இறைவா! இன்னாரின் மகனான இவர் உனது பொறுப்பில் இருக்கிறார். கப்ரின் வேதனையை விட்டு இவரைப் பாதுகாப்பாயாக! நரகின் வேதனையை விட்டும் காப்பாயாக! நீயே வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன். உண்மையாளன். இவரை மன்னித்து அருள் புரிவாயாக! நீயே மன்னிப்பவன். அருள் புரிபவன்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

நூல்கள்: அபூ தாவூத் 2787, இப்னு மாஜா 1488, அஹ்மது 15443

இன்னாரின் மகன் இன்னார் என்ற இடத்தில், அதாவது ஃபுலானப்ன ஃபுலான் என்ற இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது, நான்காவது தக்பீர்களுக்குப் பின் மேற்கண்ட துஆக்களை ஓதிக் கொள்வதுடன் நமக்குத் தெரிந்த மொழியிலும் துஆச் செய்யலாம்.

‘இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: இப்னு ஹிப்பான் 7/345, 7/346

உள்ளத் தூய்மையுடன் கலப்பற்ற முறையில் துஆச் செய்வது என்றால் நமக்குத் தெரிந்த மொழியில் துஆச் செய்யும் போது தான் அது ஏற்பட முடியும். எனவே இறந்தவருக்காக மறுமை நன்மையை வேண்டி தாய் மொழியில் துஆச் செய்யலாம்

Monday 18 March 2024

இருப்பதைக் கொண்டு எவ்வாறு திருப்தி அடைவது?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இருப்பதைக் கொண்டு எவ்வாறு திருப்தி அடைவது?

இருப்பதை வைத்து திருப்தி அடைவது எப்படி என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர். உலகத்தில் நம்மை விட மேலான நிலையில் சிலர் இருப்பது போல் நம்மை விடத் தாழ்ந்த நிலையிலும் பலர் உள்ளனர். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நமது நிலையை ஒப்பு நோக்கிப் பார்த்தால் இருப்பதை வைத்து திருப்தி அடையும் மனநிலை நமக்கு வந்து விடும்.
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِى الْمَالِ وَالْخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ مِمَّنْ فُضِّلَ عَلَيْهِ
உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 5670

சங்கரன்பந்தல் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் ஊர் இளைஞர்களின் பாதுகாப்பிற்காக அதிரடி எச்சரிக்கை:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சங்கரன்பந்தல் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் ஊர் இளைஞர்களின் பாதுகாப்பிற்காக அதிரடி எச்சரிக்கை:

அஸ்ஸலாமு அலைக்கும், 

இன்று இரவு தொழுகை முடிந்தவுடன் நிர்வாகத்தின் சார்பில் இமாம் அவர்கள் அறிவிப்பு செய்தார்கள். 

அதில் நமதூர் இளைஞர்கள் இரவு நேரத்தில் தரங்கம்பாடி, காரைக்கால், பூந்தோட்ட எரவாஞ்சேரி என பல ஊருக்கு மந்தி சாப்பிட என கூறி அதிவேகத்தில் (ரேஸ்) பைக்கில் சுற்றிதிரிகின்றனர் என்றும் அதை பெற்றோர்கள் கண்டித்து அவர்களை, பாதுகாக்க நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்கள் இதை அறிந்து தங்களுடைய பிள்ளைகளின் பாதுகாப்பு விசயத்தில் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.

சமூக அக்கறையுடன் செயல்படும் சங்கரன்பந்தல் ஜாமீஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு .

🤝 சங்கரன்பந்தல் மஸ்ஜித் நிர்வாகத்திற்கு மிகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்  #நான் 
தேரிழந்தூர் H.முகம்மது சைபுல்லா உஸ்தா


முஸ்லிம் பெண்கள் அதிகமாக நகை அணிந்து வெளியூர் நிகழ்ச்சிக்கு செல்வதை சில காலம் தவிர்க்கலாம் !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம் பெண்கள் அதிகமாக நகை அணிந்து வெளியூர் நிகழ்ச்சிக்கு  செல்வதை சில காலம் தவிர்க்கலாம் !

வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வர இருக்கும் காரணத்தினால் தேர்தல் ஆணையம் ஐம்பதாயிரம் (50,000) ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால் அது உங்கள் பணமாக இருப்பதற்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது.

அதுமட்டுமின்றி கடந்த தேர்தலில் ஒரு சில முஸ்லிம் பெண்கள் நகை அணிந்து சென்று வெளியூர் நிகழ்ச்சிக்கு  செல்லும்போது  அவர்கள் பல இன்னல்களை சந்தித்து உள்ளார்கள். எனவே  இந்த தகவலை முஸ்லிம் சமுதாய மக்களிடையே அதிகமாக பகிர வேண்டும்.

50,000/ரூபாய்க்கு மேல்  தவிர்க்கமுடியாமல் பணம் எடுத்துக்கொண்டு சென்றால் அதற்கு உரிய ஆவணம் ( Bank passbook) வைத்துக்கொள்ளுங்கள். ஆபரண நகைகளை அதிகமாக அணிந்துகொண்டு வெளியூர் செல்லுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும்
அல்லாஹ் பாதுகாப்பானாக !