Monday 3 June 2024

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணியின் அனைத்து மாவட்ட மே மாத செயல் அறிக்கை....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணியின் அனைத்து மாவட்ட மே மாத செயல் அறிக்கை....

1 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 
 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணி தேனி வடக்கு மாவட்டம் மே மாதம் செயல் அறிக்கை 
* அவசர காலகட்டத்தில் கொடையாளர்கள் மூலம் 10 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டுள்ளது 
* இரத்த வங்கி அதிகாரி மூலம் 02 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டுள்ளது 
* பிற மாவட்டங்களில் நம் இரத்தம் கேட்டுக் கொண்டு அடிப்படையில் 02 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டுள்ளது 
* மூணார் செல்லும் வழியில் விபத்து தூத்துக்குடி யூசுப் அவர்கள் கேட்டுக்கொண்ட  அடிப்படையில் அவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டோம் 
* ஒருவர் மருத்துவ உதவிக்காக மருத்துவ சேவை அணி தேனி வடக்கு மாவட்டம் சார்பாக  பணம் வழங்கப்படும் 
Dr.N.முகமது நிஷார் தீன் 
மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்
தேனி வடக்கு மாவட்டம் 

2 திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் மருத்துவ சேவை அணி செயல்பாடுகள்.-மே  2024.
1.திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக 19 யூனிட் ரத்ததானம் செய்யப்பட்டது.. 

2.எங்களது மாவட்டம் அல்லாமல் பிற மாவட்டங்களில் 12 யூனிட் ரத்த தானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
3.நோயாளி ஒருவர் மருத்துவ உதவி வேண்டி பணம் கேட்டு இருந்த நிலையில் அவர்களுக்கு 15,000 ரூபாய் வழங்கப்பட்டது.
4. ஆவடி மாநகர தமுமுக நிர்வாகி குடும்பத்தினரின் மருத்துவ செலவிற்காக 10,000 (ஆயிரம் ரூபாய்) வழங்கப்பட்டது.
5. மூன்று நபருக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் ஆம்புலன்ஸ் இலவசமாக சென்றது.
6. இரண்டு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் (Oxygen concentrator machine) வழங்கப்பட்டது.
---------அப்துல் ஹமீது     மருத்துவ சேவை அணி செயலாளர், திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.

3. தென்காசி மாவட்டம்
2024 மே மாத தமுமுக மருத்துவ சேவை அணியின் செயல் அறிக்கை:
இறைவனுடைய மாபெரும் கிருபையால் இந்த மாதம் 17 யூனிட்டுகள் ரத்ததானம் வழங்கப்பட்டது.
1. புளியங்குடியை சேர்ந்த தஸ்லிமா என்ற பெண்ணிற்கு பிரசவத்திற்காக, சங்கரன்கோவில் அரசுமருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் (O+) ஒரு யூனிட் வழங்கப்பட்டது.
2. புளியங்குடியை சேர்ந்த ராஜாமணி (வயது 75) என்ற நபருக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக தென்காசி அன்னை ரத்த வங்கியில் ஒரு யூனிட் (B+) ரத்தம் வழங்கப்பட்டது.
3. புளியங்குடியை சேர்ந்த முகமது (வயது 21) என்ற நபருக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக ஒரு யூனிட் (B+) திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் உள்ள ரத்த வங்கியில் வழங்கப்பட்டது.
4. தென்காசி மாவட்டம் வீரிருப்பு  கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 35) என்ற பெண்மணிக்கு அறுவை சிகிச்சைக்காக ஒரு யூனிட் ( O+) இரத்தம் தென்காசி அரசு ரத்த வங்கியில் வழங்கப்பட்டது. 
5. புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிந்தாமணி கீழபஜாரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (வயது 28) என்ற பெண்ணிற்கு பிரசவத்திற்காக சங்கரன்கோவில் அரசு ரத்த வங்கியில் (B+) ஒரு யூனிட் வழங்கப்பட்டது.
6. தென்காசி மாவட்டம் புன்னையாபுரம் கிராமத்தைச் சார்ந்த சீதாலட்சுமி என்ற பெண்மணிக்கு உடல் உள் உறுப்பு அறுவை சிகிச்சைக்காக ( AB+) ஒரு யூனிட் ராஜபாளையம் ரத்த வங்கியில் வழங்கப்பட்டது.
7. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாசுதேவநல்லூரை சேர்ந்த ரேவதி (25 வயது) என்ற பெண்ணிற்கு பிரசவத்திற்காக ஒரு யூனிட் (B+) ரத்தம் சங்கரன்கோவில் ரத்த வங்கியில் வழங்கப்பட்டது.
8. புளியங்குடியை சேர்ந்த அலி பாத்திமா வயது 43 என்ற பெண்மணிக்கு உடலில் ரத்த அளவு குறைவதன் காரணமாக ஒரு யூனிட் ( AB+) ரத்தம் தென்காசி அரசு ரத்த வங்கியில் ரத்ததானம் செய்யப்பட்டது.
9. புளியங்குடி தங்க விநாயகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புன்னையாபுரம் கிராமத்தைச் சார்ந்த விஜயலட்சுமி (வயது 24) என்ற பெண்ணிற்கு பிரசவத்திற்காக  இரண்டு யூனிட் (A+) ரத்தம் வழங்கப்பட்டது.
10. தமுமுக மருத்துவ சேவை அணி சங்கை தீன் அவர்களின் மூலமாக 7 யூனிட் சங்கரன்கோவில் ரத்த வங்கியில் வாங்கப்பட்டது.
இதற்காக உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக..!
இந்தமாத களப்பணிகள்..
1. தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியைச் சேர்ந்த செல்வம் (வயது 38) சொக்கம்பட்டி மின் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். மின்கம்பம் ஏரி வேலை செய்யும் பொழுது கை தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் உடல் கூர் ஆய்விற்காக கொண்டு சேர்க்கப்பட்டது.
2. புளியங்குடி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் ஏற்பட்ட விபத்துகளில் காயம் அடைந்தவர்களை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம்  மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம்.

எங்களுடைய பணியை இறைவன் பொருந்திக் கொள்ளட்டும்..
இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு வெற்றியை தரட்டும்...
4.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மத்திய சென்னை தெற்கு மாவட்டம் 
2024 மே மாதம் 29ஆம் தேதி வரை (1)ரத்ததானம் கொடையாளர் மூலம் 9 யூனிட்டும் 
(2)ரத்த வங்கி அலுவலர்கள் மூலம் 19 யூனிட்டும் இதில் பாம்பே ஓ பாசிட்டிவ் மூன்று யூனிட் 
(3)8 நோயாளிகளுக்கு பரிந்துரையும்  (4)ஒருவரின் உடலை ராயப்பேட்டை கபரஸ்தானில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது (5)தொண்டியைச் சேர்ந்த நோயாளி ஜியாவுதீன் வபாத்தான காரணத்தினால் அவரது உடலை அவரது ஊருக்கு அரசு இலவச ஆம்புலன்ஸ ஏற்பாடு செய்து தரப்பட்டது (6)பனையூர் சேர்ந்த பெண்மணி ஒருவரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வதில் ராயப்பேட்டை மார்ச்சுவரி வார்டு பாய்கள் 2000 ரூபாய் லஞ்சம் பெற்றதை நானே நேராகச் சென்று ஆர் எம் ஓ விடம் புகார் செய்தேன் அவர்களும் கண்டித்து இனி செய்ய மாட்டேன் என்று எழுத்து மூலமாக கடிதம் எழுதி வாங்கி  அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டார்கள் (7)மாற்றுத்திறனாளி ஒருவரை காவலர் அடித்து ஸ்டான்லி மருத்துவ மனையில் அட்மிட்டாகி உள்ளதாக வந்த தகவலின் பெயரில் நேதாஜி நகர் கிளை தலைவர் முகமது யூனுஸ் அவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் ரூபாய் இரண்டாயிரம் நிவாரண தொகையாகவும் மேற்கொண்டு எந்த விதமான மருத்துவதேவை ஏற்பட்டாலும் அதை காவல்துறை ஆய்வாளர் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் சொன்னார்கள் சம்பந்தப்பட்ட காவலரை கண்டிக்கவும் செய்தார்கள்.
 அண்ணாநகர் ஆம்புலன்ஸ் எட்டு நபர்களுக்கு சேவை செய்துள்ளது அதில் இரண்டு இலவச சேவை  செய்யபட்டது 

5.அஸ்ஸலாமு அலைக்கும்
தென் சென்னை கிழக்கு மாவட்டம் 01/05/24முதல் 30/05/24வரை 1யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது மற்றும் இதர மாவட்டங்களின் சார்பாக 16யூனிட் வழங்கப்பட்டது
தகவல்
தென் சென்னை கிழக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி A.R.பொருளாளர் முபாரக் பாஷா 30/05/24

6.திண்டுக்கல் மேற்கு மாவட்டம் 1/5/24 முதல்   30/5/24 வரை 8 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது

7.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......... 
திருவாரூர் மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக  மே மாதம் மாதத்தில் மட்டும் 5 யூனிட்டுகள் இரத்தம் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் அவசரம் இரத்தம் தேவைக்காக தமுமுக மருத்துவ சேவை அணி சார்பாக 01.5.2024 முதல் 31.5.2024 வரை 5 யூனிட்டுகள் இரத்தம் வழங்கப்பட்டது..
மருத்துவ சேவை அணி சார்பாக ஆண் துணை இல்லாத குடும்பத்திற்கு தம்  வீட்டிற்கு  கீற்று மாற்றி தர கேட்டதன் அடிப்படையில் 28-760 செலவில் போட்டு    கொடுக்கப்பட்டது    
அல்ஹம்துலில்லாஹ்
மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"
(அல்குர்ஆன் 5;32)
என்றும் மக்கள் சேவையில் தமுமுக
மருத்துவ சேவை அணி
திருவாரூர் மாவட்டம்.
8.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
வேலூர் மேற்கு மாவட்ட  மருத்துவ சேவை அணி 2024 - மே மாத செயல்பாட்டரிக்கை
1. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 1 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.
2. வேலூர் CMC மருத்துவமனையில் 1 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.
3. வேலூர் நாராயணி மருத்துவமனயில் 1 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.
4. நோயாளிகள் பயன்பெறும் வகையில்  சுமார் 5 முறை இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை செய்யப்பட்டது.
 5. மருத்துவமனையில்  இறந்த 2 உடல்களை எடுத்துச் சென்று அவரவர் வீட்டில் இலவசமாக சேர்க்கப்பட்டது.
6. அடையாளம் தெரியாத இறந்தவரின் உடலை மீட்டு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
7. இறந்த 2 நபர்களின் உடலை வைக்க பிரீசர் பாக்ஸ் சேவை இலவசமாக  செய்யப்பட்டது..

9.செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி 
இரத்ததானம் 13 நபர்கள் கொடுக்கப்பட்டது 
செம்பாக்கம் ஆம்புலன்ஸ் 
5 நபர்களுக்கு இலவசமாக சென்றது 
காமராஜபுரத்தில் விபத்தில் அடிபட்டவர்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அட்மிட் பண்ணப்பட்டது
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் குளிப்பாட்டி கபன் துணி 2 ஜனாஸாக்கள் மாத்தி கொடுக்கப்பட்டது

10.அஸ்ஸலாமு அலைக்கும் இராமநாதபுரம் தெற்கு மாவட்டத்தில் மே மாதத்தில் 19 5 2024 கமுதி கிளையின் சார்பாக நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 250 நபர்கள் பயனடைந்தனர் மேலும் அவசர தேவைக்கு 4 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது 3 நபர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டது.

11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மத்திய சென்னை வடக்கு மாவட்டம் சார்பாக 5 யூனிட் ரத்ததானம் செய்யப்பட்டது மற்றும் 21 நபர்களுக்கு மேல் சிகிச்சை பரிந்துரை செய்யப்பட்டது 2 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது எல்லா புகழும் இறைவனுக்கே.

12. அஸ்ஸலாமு அலைக்கும் திருவண்ணாமலை தெற்குமாவட்டம் சார்பாக 01 05 2024 முதல் 30 05 2024 வரை 11 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டுள்ளது அல்ஹம்த்துலில்லாஹ்

13.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ கள்ளக்குறிச்சி மாவட்டம் மருத்துவ சேவை அணி சார்பாக ஆறு யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது திருக்கோவிலூரில் இருந்து நெய்வேலிக்கு இறந்த உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது

14.அஸ்ஸலாமு அலைக்கும்
1.5.2024 முதல் 31.5.2024 வரை திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக அவசர தேவைக்கு  *7 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது
 திருப்பத்தூர்     3 
 வாணியம்பாடி 2
 ஆம்பூர்          2
 இரத்தம்  வழங்கப்பட்டது
 அண்டை மாவட்டங்களில் உதவியுடன் 2
 யூனிட் இரத்தம் தானமாக  வழங்கப்பட்டது
 ஆம்புலன்ஸ்  சேவை திருப்பத்தூர் நகரத்தில் *9 முறை இலவச செய்து தரப்பட்டது
A அஸ்கர் கான்
 மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்
 திருப்பத்தூர் மாவட்டம்

15.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 
 கடலூர் மாவட்டம் வடக்கு  
மாயவரம் மாவட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மூன்று   நபர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்தனர் அவர்களின் உடலை மாயவரம் நிர்வாகிகள் மூலம் உடல் கூறு ஆய்வு முடித்து அவரவர் குடும்பத்தினர் இடம் ஒப்படைக்கப்பட்டது 
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கும்பகோணம் நிர்வாகிகள் மூலமாக ஒரு யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது.

16.அஸ்ஸலாமு அலைக்கும் தென் சென்னை மேற்கு மாவட்டம் மருத்துவ சேவை அணியின் இந்த மாதத்தின் செயல் அறிக்கை டி நகர் பகுதியில் சார்பாக 3 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது விருகம்பாக்கம் பகுதியில் சார்பாக 6 வழங்கப்பட்டது மயிலை பகுதியில் சார்பாக ஒரு யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது சைதை பகுதியின் சார்பாக இரண்டு யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது மருத்துவ சேவை அணி மாவட்டத்தின் சார்பாக 6 யூனிட்  ரத்தம் வழங்கப்பட்டது மேலும் விருகம்பாக்கம் பகுதியில் சார்பாக கத்னா முகாமில் 33 நபர்களுக்கு சுன்னத்து  செய்யப்பட்டது இந்த மாதத்தின் தென் சென்னை மேற்கு மாவட்டத்தின் மருத்துவ சேவை அணியின் செயல்பாடுகள்
17.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பாக 01-05-24 முதல் 30-05-2024 வரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு B+ பாசிட்டிவ் இரத்தம்  மூன்று யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது. 
 பரமக்குடி ஜெயேந்திர மருத்துவமனைக்கு B+பாசிட்டிவ் ஒரு யூனிட் ரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு யூனிட் இரத்தம் வழங்கப்பட்டுள்ளது. 19 -5 -24 அன்று பரமக்குடி காக்கா தோப்பில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது இரண்டு முறை சாலை  விபத்தில்   காயம் அடைந்தவர்களுக்கு இலவச  சேவையாக மருத்துவமனையில் முதல் உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டது தகவல் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் S.முகமது இஸ்மாயில்

18.காரைக்கால் மாவட்ட 
மருத்துவ சேவை அணி சார்பாக 01.05.2024 முதல் 30.05.2024 வரை 17 யூனிட் இரத்த தானம் வழங்கப்பட்டது
பிற மாவட்டங்களின் மூலம் 3 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது
மனித நேய மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் குடும்பத்திற்கு 2 முறை காரைக்காலில் இருந்து கோயம்புத்தூர் வரை இலவசமாக அவசர ஊர்தி உதவி செய்யப்பட்டது

19.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட S.P. பட்டினம் மருத்துவ சேவை அணி மே மாதம் (1-5-2024  முதல் 30-5-2024  வரை செயல் அறிக்கை
1) ( 02 -05-2024 )அன்று மதியம்: 12:30 . மணிக்கு ஓரியூர் ரோட்டில் ஜேஜே டைல்ஸ் ஜான் அண்ணன் வீட்டு பக்கத்தில் புதுக்காடு சேர்ந்த   ஆரின் ரிசான்ட் என்ற 12. வயது சிறுவன் விளையாட்டுத்தனமாக பூச்சி மருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.. உடனே  தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்ற  தமுமுக  மருத்துவ அணி செயலாளர் கோட்டார் கலந்தர் அவர்கள்  முதல் சிகிச்சைக்காக S.P. பட்டினம் அரசு  மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டனர் பிறகு மேல்  சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு தமுமுக ஜெகதா பட்டினம் ஆம்புலசில் கொண்டு செல்லப்பட்டது....
2) ( 3-05-2024 ) அன்று கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற கார் மீமிசல் இருந்து வந்த தண்ணி வண்டி  அரசங்கரை உப்பளம் பாலம் இடத்தில் நேருக்கு நேர் மோதி காரில் உள்ள 5. பேர் பலத்த காயம் ஏற்பட்டது உடனே தகவல் கிடைத்தவுடன் ஜெகதா பட்டின தமுமுக ஆம்புலன்ஸ் வரவைத்து முதல் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
3) (3-05-2024) அன்று சென்னை வெஸ்ட் மாம்பலம் ஹெல்த் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட S.P. பட்டினத்தை சேர்ந்த சித்தி சிபானா என்ற பெண்ணுக்கு பிரசவ  காரணத்தால் 0+  1. யூனிட் இரத்தம் சகோதரர் R.N. இப்ராஹிம் அவர்கள் இரத்ததானம் செய்தார்கள்...
4) ( 06-05-2024) அன்று வெள்ளையபுரத்தில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்திற்கு மாட்டு வண்டி வீரர் உயிர் காக்க.9, 8,7,6, மைல் மொத்தம் 45. கிலோ மீட்டருக்கு மங்களக்குடி தமுமுக ஆம்புலன்ஸ் கொடுக்கப்பட்டது..
5) (11/05/2024) அன்று இரவு 12:12. மணிக்கு பாசி பட்டிணத்தை சேர்ந்த சேகு அம்மாள்  பெண்ணுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது உடனே அங்கு சென்ற இராமநாதபுரம் மாவட்டம் மருத்துவ அணி செயலாளர் கோட்டார் H.கலந்தர் அவர்கள் முதல் சிகிச்சைக்காக S.P. பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிறகு மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு இரவு 1:05 மணிக்கு ஜெகதா பட்டின தமுமுக ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர்
6) (11/05/2024) அன்று காலை 07:30. மணிக்கு S.P.பட்டினம் அம்பேத்கர் நகரை சேர்ந்த கேபிள் டிவி மோகன் அவர்களுடைய அப்பாவுக்கு திடீரென்று வாதம் ஏற்பட்டது உடனே ஆட்டோவில் ராதாகிருஷ்ணன் கிளினிக் கொண்டு சென்று முதல் சிகிச்சை பெற்றனர் பிறகு மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் ஜோசப் ராஜன் மருத்துவமனைக்கு (மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கோட்டார் H.கலந்தர் அவர்கள்) ஜெகதாப்பட்டினம் தமுமுக ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர்
7) (11/05/2024) அன்று மதியம் 2:10. மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கொளுவனூர் கிராம இடத்தில் S.P. பட்டினம் முகமது அலி என்பவரின் கார் விபத்து ஏற்பட்டது உடனே முதல் சிகிச்சைக்காக விபத்தடைந்த 5. நபரை மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிறகு மேல் சிகிச்சைக்காக (இராமநாதபுரம் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கோட்டார் H.கலந்தர் அவர்கள்) காரைக்குடி P.K.N. மருத்துவமனைக்கு தமுமுக ஜெகதா பட்டினம் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர்
8) (12-05-2024) அன்று காரைக்குடி P. K.N. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட S.P. பட்டினத்தை சேர்ந்த முகமது அலி என்ற சகோதரருக்கு கால் ஆப்ரேஷன் காரணத்தால் B+  1. யூனிட் இரத்தம் சகோதரர் கலந்தர் நைனா முகம்மது  அவர்கள் இரத்ததானம் செய்தார்கள்...
9) (13-05-2024) அன்று காரைக்குடி P. K.N. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட S.P. பட்டினத்தை சேர்ந்த முகமது அலி என்ற சகோதரருக்கு இன்று மதியம் : 3:00 மணிக்கு கால் ஆப்ரேஷன் காரணத்தால் B+  1. யூனிட் இரத்தம் சகோதரர் மௌலவி S. முகமது அன்சாரி குதுஸி B.com..( I.P.P. மாவட்டச் செயலாளர் இராமநாதபுரம் கிழக்கு )அவர்கள் இரத்ததானம் செய்தார்கள்...
10) (18/05/2024) அன்று இரவு 9: மணிக்கு தொண்டியே சேர்ந்த மிருபா கனி என்ற பெண்ணுக்கு வலிப்பு ஏற்பட்டது உடனே ராதாகிருஷ்ணன் கிளினிக் கொண்டு வரப்பட்டு முதல் சிகிச்சை பெற்றனர் பிறகு மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் 🏥தானியா மருத்துவமனைக்கு தமுமுக ஜெகதாப்பட்டினம் ஆம்புலன்ஸில் இராமநாதபுரம் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கோட்டார் H.கலந்தர் அவர்கள் கொண்டு சென்றார்கள்...
11) (20/05/2024) அன்று மதியம் 12:09 : மணிக்கு S.P. பட்டினத்தை  சேர்ந்த ஆயிஷா பேகம்  என்ற பெண்ணுக்கு வலி ஏற்பட்டது உடனே S.P. பட்டினம்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு முதல் சிகிச்சை பெற்றனர் பிறகு மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் 🏥 செய்யது அம்மாள்  மருத்துவமனைக்கு தமுமுக ஜெகதாப்பட்டினம் ஆம்புலன்ஸில் இராமநாதபுரம் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கோட்டார் H.கலந்தர் அவர்கள் கொண்டு சென்றார்கள்
12) (25-05-2024) அன்று சென்னை ராயப்பேட்டை GH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட S.P. பட்டினத்தை சேர்ந்த சே.சு.மு. ஜெயினுல் ஆப்தீன் அவர்கள் மூட்டு அறுவை சிகிச்சை காரணத்தால் 0 + 1. யூனிட் இரத்தம் சகோதரர்  A.பாதுஷா அவர்கள் இரத்ததானம் செய்தார்கள்...
13) (25/05/2024)  அன்று இரவு 11:20 மணிக்கு S.P. பட்டினத்தில் வீட்டு வேலை பார்க்கும் (ஹிந்தி காரர்) சைதுல் இஸ்லாம் என்ற சகோதரருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது உடனே ராதாகிருஷ்ணன் கிளினிக் கொண்டு வரப்பட்டு முதல் சிகிச்சை பெற்றனர் பிறகு மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் 🏥 அரசு மருத்துவமனைக்கு தமுமுக ஜெகதாப்பட்டினம் ஆம்புலன்ஸில் இராமநாதபுரம் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கோட்டார் H.கலந்தர் அவர்கள் கொண்டு சென்றார்கள்...

20. 15:05:2024)  அன்று * திருச்சி மேற்கு மாவட்டம் தமுமுக வின் அவசர இரத்ததான சேவவை* 🩸🩸
இரத்ததானம்!! பெரம்பலூர் தலைட்சுமி சீனிவாசன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை ஊரைச் சேர்ந்த 
* முகமது அன்சாரி அவர்களுக்கு B+பாசிட்டிவ் இரத்தம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு இரண்டு யூனிட்டும் காவேரி மருத்துவமனைக்கு ஒரு யூனிட்டும் வழங்கப்பட்டது  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் கூனிபஜார் பரக்கத் ஹோட்டல் புரோட்டா மாஸ்டர் உசேன் பாய் விபத்தில்  வபாத் ஆகிவிட்டார் 13-5-24 இன்று மதியம் அரசு மருத்துவமனைக்கு சென்று உடல் கூறு ஆய்வுக்கு பின் அவருடைய உடலை   குடும்பத்தாரிடம்  ஒப்படைக்கப்பட்டது இந்த மாதம் மட்டும் நான்கு நபர்களுக்கு ஆம்புலன்ஸ் இலவசமாக சேவை செய்யப்பட்டது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் 
 திருச்சி மேற்கு மாவட்டம்  பஜார் பக்ருதீன்  அவர்கள் இரத்ததானம் செய்தார்கள் 
உடன்...
தல்ஹா பாபு
திருச்சி மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் ஏற்பாடு  செய்தார்கள் 
எல்லாப் புகழும் இறைவனுக்கே...
என்றென்றும் மக்கள் சேவையில்..!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
மருத்துவ சேவை அணி தல்ஹா பாபு   மாவட்ட பொருளாளர்

21.அஸ்ஸலாமு அலைக்கும்
1.5.2024 முதல் 31.5.2024 வரை சிவகங்கை மாவட்டம் சார்பாக அவசர தேவைக்கு  *14 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது
 தேவகோட்டை  6
 காரைக்குடி 2
 சிவகங்கை 2
 திருப்பத்தூர்
இரத்தம்  வழங்கப்பட்டது 
 ஆம்புலன்ஸ்  சேவை தேவகோட்டை நகரத்தில் *3 முறை இலவச ஆம்புளன்ஸ் சேவை செய்து தரப்பட்டது
மாவட்டத்தில் மூன்று இடங்களில் இலவச கத்னா முஹாம் நடத்தப்பட்டது காரைக்குடியில் 2️⃣4️⃣ *குழந்தைகளுக்கும்  
 சிவகங்கையில் 
1️⃣7️⃣ குழந்தைகளுக்கும் 
 தேவகோட்டையில் 4️⃣7️⃣
 குழந்தைகளுக்கும் மொத்தம் 8️⃣8️⃣ குழந்தைகளுக்கு இலவசமாக கத்னா செய்துவைக்கப்பட்டது*

22.*அஸ்ஸலாமுஅலைக்கும்   வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு 
வேலூர் கிழக்கு மாவட்டம் மே மாதம் மருத்துவ அணியின் செயல்அறிக்கை 
1. வேலூர் CMC மருத்துவமனைக்கு 5 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.
2. மொசானிக் தனியார் இரத்த வங்கிக்கு 2 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.
3. மாவட்ட அரசு மருத்துவமனைக்கு 1 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது. 
4. இறந்த நிலையில் மீட்டெடுக்கபட்ட  முதியவரை நல்லடக்கம் செய்யப்பட்டது.
5. மாவட்ட அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுக்கபட்டதால் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டது.
K.பவாஸ் கான்.
மருத்துவ சேவை அணி செயலாளர் 
வேலூர் கிழக்கு மாவட்டம்.

23.அஸ்ஸலாமுஅலைக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சார்பாக 01 05 2024 முதல் 30 05 2024 வரை  7 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டுள்ளது அல்ஹம்த்துலில்லாஹ்...
24.அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வடசென்னை கிழக்கு மாவட்டம் மருத்துவ அணி சார்பாக மே மாதம் செயல் அறிக்கை
 1) 8 யூனிட் இ ரத்தம் தானம் செய்யப்பட்டது
2) 2ஆம்புலன்ஸ் சேவை இலவசமாக செயல்பட்டது மற்றும் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டது .
கோவை - சேலம் மண்டல மொத்த மாவட்டங்கள் 15 . இதில் மருத்துவ சேவை அணியின் ஏப்ரல் மாத செயல் அறிக்கைகள் பெறப்பட்ட மாவட்டங்கள் 13 .
25. கோவை தெற்கு மாவட்டம்
கோவை தெற்கு மாவட்டம் மருத்துவ அணி சார்பாக இந்த மாத அறிக்கை மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு நூறு பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. மே 2 இரண்டு யூனிட் பி பாசிடிவ் பிளட் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மே 5 ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரயில் நிலையங்களில் மூன்று உடல்கள் எடுக்கப்பட்டது. இந்த மாதம் அழுகிய நிலையில் எட்டு உடல்கள் எடுக்கப்பட்டது. மே 10 அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பன் ரொட்டி பிரட் போன்றவை வழங்கப்பட்டது. இந்த மாதம் ஆதரவற்ற அனாதை உடல்கள் 18 உடல்களை நல்லடக்கம் செய்யப்பட்டது கோவை மாவட்டம் மருத்துவ அணி சார்பாக. இம்மாதம் ஆனைமலை ஆழியார் ஆற்றுப்பகுதிகளில் இருந்து மொத்தம் 16 உடல்கள் எடுத்து அனுப்பப்பட்டது. கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை டவுனில் தமுமுக ஆம்புலன்சில் பெண் குழந்தை ஒன்று இம்மாதம் இருந்தது. இம்மாதம் இலவசமாக இரண்டு பேரை கோவை அரசு மருத்துவமனைக்கும் 10 பேரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும் இலவசமாக ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லப்பட்டது. பொள்ளாச்சி நகர ஆம்புலன்ஸ் மூலம் 6 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.மே 21 அன்று உணவு உடை போன்றவை ஊனமுற்றவர்களுக்கு ஆனைமலையில் வழங்கப்பட்டது.
இம்மாதம் 36 அழகிய நிலையில் உள்ள பாடிகள் மொத்தமாக 36 எடுக்கப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மொத்தமாக 2 யூனிட் பி பாசிட்டி கொடுக்கப்பட்டது. கோவை தெற்கு மாவட்டம் மருத்துவமனை சார்பாக.
26. கோவை வடக்கு மாவட்டம்
1.05.2024 முதல் 30.05.2024  வரை* *  
கோவை வடக்கு மாவட்டம்.  மருத்துவ சேவை அணி சார்பாக ஒரு மாத கால செயல் அறிக்கை
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அவசரகால ரத்த தானம் 5 யூனிட் மற்றும் சிறிய ரத்ததான முகாம் 14 யூனிட் மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் 6 தனியார் மருத்துவமனையில் 4யூனிட் மொத்தம் 29 யூனிட் ரத்ததானம் வழங்கப்பட்டது.
ஊட்டிக்கு சுற்றுலா வந்த இடத்தில் மேட்டுப்பாளையம் வரும்பொழுது பேருந்து ஒன்று கவிழ்ந்து விட்டது அந்த பேருந்தில் பயணித்த 36 பேரில் 16 பேருக்கு மேற்பட்ட படுங்காயம் அடைந்தது உடனடியாக பேருந்து கவிழ்ந்த இடத்தில் உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளை மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதில் நான்கு வயது குழந்தை ஒன்று இறந்துவிட்டது அடுத்த நாள் போஸ்ட் மாடம் செய்யப்பட்டு சொந்த ஊருக்கான சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வேலை நிம்மந்தமாக மேட்டுப்பாளையத்தில் தங்கி இருந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இறந்துவிட்டார் அவரை காவலர் உதவியுடன் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அணி சார்பாக மொத்தம். 4  நபர்களுக்கு ஒரு மாத காலம் மருந்துகள் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மற்றும் ஆறாவது வார்டு உட்பட்ட உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் கர்ப்பிணி பெண்களுக்கு 20-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கோவை வடக்கு மாவட்டம் தலைவரின் ஒப்புதலோடு அனுமதிக்கப்பட்ட உள் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் உதவிகள்  செய்யப்பட்டது.
தகவல்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மருத்துவ சேவை அணி
கோவை வடக்கு மாவட்டம்

27. ஈரோடு மேற்கு மாவட்டம்
1. ஈரோடு மேற்கு மாவட்டம் சார்பில் மே மாத செயலறிக்கை  1.5.24 முதல் 30.5.24 வரை 11 யூனிட் இரத்த தானம் செய்யப்பட்டது.. 
2. கோபி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மற்றும் தனியார் இரத்த வங்கி மூலமாக  6 யூனிட் இரத்தம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது
தகவல்...
S.முஜிபுர் ரஹ்மான்
மாவட்ட செயலாளர் மருத்துவ சேவை அணி ஈரோடு மேற்கு
9488801388

28. நீலகிரி மாவட்டம் 
நீலகிரி மாவட்ட  மருத்துவ சேவை அணி சார்பாக 01.05.2024 முதல் 30.05.2024 வரை 8 யூனிட் இரத்த தானம் வழங்கப்பட்டது.
ஊட்டிக்கு தினகூலி வேலைக்கு வந்த  தெலுங்கானா  மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வந்த நிலையில் 29-05-2024 அன்று மும்தாஜ் எனும் பெண் மரணமடைந்தார் இரண்டு குழந்தைகளுடன் கணவர் ஆதரவற்று நின்ற நிலையில் உதகை நகர தமுமுகவினரால் நல்லடக்கம்  செய்யப்பட்டது.

29. ஈரோடு கிழக்கு மாவட்டம்
1.5.2024.30.5.2024. வரை.7. யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. 5.  ஜனாஸாக்கள் வாங்கி கொடுக்கப்பட்டது.2. ஜனாஸாக்கள் குளிப்பாட்டி அடக்கம் செய்து கொடுத்தது. ஈரோடு கிழக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி.R. சிக்கந்தர்

30. நாமக்கல் மாவட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும்
1.05.2024 முதல் 30.05.2024 வரை நாமக்கல்  மாவட்டம் சார்பாக அவசர தேவைக்கு  *20 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது
சேந்தை அ.ஜாகிர்உசேன் M.com.,B.Ed.,
 மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்
 நாமக்கல் மாவட்டம்

31. தர்மபுரி மாவட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும் இந்த மாதத்தில் 1-TO-30-05-2024தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவ சேவை இரத்ததானம் 6. நபர்களுக்கு மருத்துவ உதவி.8. நபர்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி.6. நபர்களுக்கு மருத்துவ சேவை அணி D.A.முனவர். K.தென்றல் யாசின் P.S.நௌஷாத். S.பைசல் பாஷா. D.A.அஸ்கர் BA.LLB.

32. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமுமுக மருத்துவ சேவை அணி (1/05/24) முதல் (31/05/24) செயலறிக்கை  
(1) தனியார் ரத்த வங்கிக்கு   (5) யூனிட் ரத்த தானம் தரப்பட்டது
(2) இலவச ஆம்புலன்ஸ்🚑 சேவை (5)  நபர்களுக்கு இலவசமாக இயக்கப்பட்டது
(3) மருத்துவ உதவி வருமானமின்றி தவித்த குடும்பத்திற்கு  ரூபாய் ₹11000 தரப்பட்டது
அக்குடும்பத்தில் கணவருக்கு தினமும் மருத்துவ சிகிச்சை தமுமுக மூலமாக  செய்யபட்டு வருகிறது
(4) வருமானமின்றி தவத்து வரும் குடும்பத்திற்கு படிப்பு செலவிற்கு ரூபாய் ₹5000 தரப்பட்டது

33. கோவை மத்திய மாவட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 
கோவை மத்திய மாவட்ட  மே மாதம்
1தேதி முதல்31 வரை
*  13 ஜனாஸாக்கள் குளிப்பாட்டி கஃபன் செய்யப்பட்டுள்ளது , 2இதில் பெண்கள் ஜனாஸாவும் உட்பட்டது….
* 7ஜனாஸாக்கள் பிரேத பரிசோதனை செய்த பிறகு கஃபன் செய்யப்பட்டுள்ளது ,
* இம்மாதம் 17யூனிட்டுகள் ரத்ததானம் செய்யப்பட்டுள்ளது மருத்துவ அணி மட்டும் ,
*  5க்கும் மேற்பட்ட நோயாளிகளின் நலம் விசாரித்து அவர்களுக்கு தேவைப்பட்ட மருத்துவ உதவியும் மற்றும் வேறு உதவிகளையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது,
*ஊட்டியை சேர்ந்த சகோதரர் கோவை அரசு மருத்துவமனையில் மரணித்தார் அவருடைய உடலை எடுத்து செல்ல மொத்த செலவும் மாவட்ட சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
*11 இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டுள்ளது
*5 சிதைந்தது நிலையில் கஃபன் செய்யப்பட்டுள்ளது அதனுடைய ஆவணங்களை மாநில செயலாளருக்கு தனி ஐடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

34. சேலம் கிழக்கு மாவட்டம் .
சேலம் கிழக்கு மாவட்ட மே மாத செயல் அறிக்கை ...
இந்த மே மாதத்தில் மொத்தம் 7 யூனிட்கள் இரத்த தானம் செய்யப்பட்டுள்ளது.
தகவல் : மருத்துவ சேவை அணி , சேலம் கிழக்கு மாவட்டம் .

35. திருப்பூர் வடக்கு மாவட்டம் .
திருப்பூர் வடக்கு மாவட்ட மே மாத செயல் அறிக்கை ....
இந்த மே மாதத்தில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு 12 யூனிட் இரத்தம் மற்றும் தனியார் மருத்துவமனைக்கு 2 யூனிட் இரத்தம் என மொத்தம் 14 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது . 
லேப் டெக்னீசியன் படிப்பு முடித்த ஒரு வாலிபரை , மருத்துவ சேவை அணி சார்பில் கொங்குநாடு மருத்துவமனையில் டெக்னீசியன் வேலைக்கு சேர்த்து விடப்பட்டுள்ளது . 
மேலும் +2 முடித்த 2 பெண் பிள்ளைகளை ரேவதி மருத்துவமனையில் நர்சிங் கோர்ஸ் படிக்க , தமுமுக மருத்துவ சேவை அணியின் சார்பில் சேர்த்து விடப்பட்டது .
தகவல் : மருத்துவ சேவை அணி , திருப்பூர் வடக்கு மாவட்டம் .

36. திருப்பூர் தெற்கு மாவட்டம்.
அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ 
 திருப்பூர் தெற்கு மாவட்டம் மே மாத செயலறிக்கை ...
* பல்லடம் நகரத்தில் ஆதரவற்ற சடலம் ஒன்று அடக்கம் செய்யப்பட்டது 
* எட்டு யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது  
* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஒரு நபருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டது  .
தகவல் : மருத்துவ சேவை அணி , திருப்பூர் தெற்கு மாவட்டம் ..

37. சேலம் மத்திய மாவட்டம் .
சேலம் மத்திய மாவட்ட மே மாத செயல் அறிக்கை ...
இந்த மே மாதத்தில் மொத்தம் 7 யூனிட் இரத்த தானம் செய்யப்பட்டுள்ளது . மேலும் கிறிஸ்துவ மத சமுதாயத்தைச் ஒருவருக்கு , நமது ஆம்புலன்ஸ் இலவசமாக இயக்கப்பட்டது . மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் சேலத்தை அடுத்த ஆத்தூர் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தவரை மீட்டு , மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் அவரது உறவினர்கள் வந்தவுடன் , அவர்களுடன் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
தகவல் : மருத்துவ சேவை அணி , சேலம் மத்திய மாவட்டம்

சேலம் மேற்கு மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டங்களில் இம்மாதம் மருத்துவ சேவை அணியின் எந்த செயல்பாடும் இல்லை என்று தெரிவித்தனர்.

A.M. பௌஜுல் ஹசன் 
மாநில துணை செயலாளர் மற்றும் கோவை - சேலம் மண்டல பொறுப்பாளர் . 
மருத்துவ சேவை அணி. தமுமுக.

தகவல் வெளியீடு :
கலீல் ரஹ்மான்,
செயலாளர்,  
மாநில மருத்துவ சேவை அணி 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
31.05.2024.

No comments:

Post a Comment