முஸ்லிம்கள் இந்த நாட்டை 800 ஆண்டுகள் ஆண்டனர். அவர்களின் ஆட்சிகாலத்தில்தான் நீதிமன்ற, மாவட்ட, உள்ளாட்சி நிர்வாகமுறை நிர்வகிக்கப்பட்டது.
அதன் தாக்கம்தான் இன்றளவும் revenue துறைகளில் பயன்படுத்தும் சொல்லாடல்களான தாசில்தார்
தல்லேரி
ஜமாபந்தி
போன்ற அரபிச் சொற்கள் இன்றளவும் உள்ளது.
தமிழில் அரபுச்சொற்கள் ..
அசல் أصل மூலம்
மாஜிماضي முந்தைய
அத்து حد வரம்பு
முகாம்مقام தங்குமிடம்
அத்தர் عطر மணப்பொருள்
முலாம்ملام மேற்பூச்சு
அமுல் عمل நடைமுறை
ரத்துرد விலக்கு/நீக்கம்
அனாமத்أنعمت கேட்பாரற்ற
ரசீதுرصيد ஒப்புப் படிவம்
அல்வாحلوه இனிப்பு
ராஜிراضي உடன்பாடு
ஆஜர்حاظر வருகை
ருஜுرجوع உறுதிப்பாடு
ஆபத்துآفت துன்பம்
ருமால்رمال கைக்குட்டை
இனாம்انعام நன்கொடை
லாயக்لائق தகுதி
இலாகாعلاقة துறை
வக்கீல்وكيل வழக்குரைஞர்
கஜானாخزانة கருவூலம்
வக்காலத்துوكالة பரிந்துரை
காலிخالي வெற்றிடம்
வகையறாوغيره முதலான
காய்தாقاعدة
தலைமை/வரம்பு
வசூல்وصول திரட்டு
காஜிقاضي நீதிபதி
வாய்தாوعده தவணை
கைதிقيد சிறையாளி
வாரிசுوارث உரியவர்
சவால்سوال
அறைகூவல்/கேள்வி
சர்பத்شربة குளிர்பானம்
ஜாமீன்ضمان பிணை
சரத்துشرط நிபந்தனை
ஜில்லாضلعة மாவட்டம்
தகராறு تكرار வம்பு
தாவாدعوة வழக்கு
திவான்ديوان அமைச்சர்
பதில்بدل மறுமொழி
பாக்கிباقي நிலுவை
மஹால்محل மாளிகை
மகசூல்محصول அறுவடை
மாமூல்معمول வழக்கம்
இன்னும் ஏராளமான சொற்கள் உண்டு.
பெரும்பாலான உருது,அரபுச் சொற்கள் சட்டம், காவல், நீதித்துறை (உச்சநீதிமன்றத்திலும் இந்தி எனும் பெயரில் உருதுச்சொற்கள்தான் கோலோச்சுகின்றன) போன்ற அரசு நிர்வாகம் சார்ந்த துறைகளின் கலைச்சொற்களாகவே இருக்கின்றன. எ.கா.: கைது, ஜப்தி, ஜாமீன்(Zameen), தரப்பு(Taraf), அசல், நகல், ஜவாப்தாரி, தாசில்,(Tehsil), வசூல், பாக்கி(baaki), வாபஸ், முதலியவை. "Za", "qa", "fa" போன்ற ஓசைகள் உருது சொற்களில் அதிகம் காணலாம்.
அரபி சொற்கள் - தமிழ் உதாரணங்கள்
சாமான் - அதாங்க நாம ஊருக்கு போகும் போது வாங்கி செல்வது
வக்காலத்து - நீ என்னடா அவனுக்க வக்காலத்து வாங்குறே
வக்கீல் - நம்வூர் வக்கீல் முனாப்
மகசூல் - இந்த வருடம் வயல் நல்ல விளைச்சல்
சமூசா - நோன்பு திறந்தவுடன் 4 அல்லது 5 உள்ளே தள்ளிவோமோ
பிரியாணி -
ஹல்வா - நூர் லாட்ஜ் அதுக்கும் நூர் லாட்ஜ்தாதானா?
நபர் - மர்ம நபரை போலீஸ் வலை வீசி தேடுகின்றனர்
அசல் - அசல் அக் மார்க் நெய் (ஒரிஜினல்)
நகல் - காபி (COPY) அட்டு
குத்தகை - செக்கடிகுளம் குத்தகைக்கு விடுறாங்களாம்!
குதிர் -அப்பன் குதுருக்குள்ளே இல்லை என்பது போல் உள்ளது!
சுக்கர் - சக்கரை தூக்கலா ஒரு டி போடுப்பா
பாக்கி - பாக்கிய வச்சிட்டு மறுவேலையை பார்
சவால் - நீயா நானா போட்டு பாத்துருவோமா .
ஜவாப் - நான் கேட்ட கேள்விக்கு இன்னும் ஜவாப் (பதில்வரவில்லை)
தரப்பு - இருதரப்பு பேச்சு சுமுகமகா முடிந்தது.
அமானத் - இன்னொருவர் பொருள் நம்மிடம் இருத்தல் .
அமீனா - கோர்ட்டில் இருந்து ஜப்திக்கு வருபவர்.
ரசீது - பணம் கட்டிவிட்டு மறக்காமல் வாங்க வேண்டிய ஒன்று .
கடுதாசி (கிருதாசி) - காக்கை கத்துது கடுதாசி வருமோ.
ஆஜர் - (கோர்டில்) ஒப்படைப்பது
நமுனா - இரண்டும் ஒன்றை போல் இருப்பது.
அத்தர் - அத்தர் வாசம் தூக்குதுப்பா.
சால்னா - அப்பாகடை சால்னாவை அடிச்கிட வேறுகடை கிடையாது .
தபேளா(தப்ளா) - ஜாகிர் ஹுசைன்.
சுக்கான் - கப்பல் போட் விமானம் போன்றவற்றை திருப்பக்கூடிய ஒன்று.
சர்பத் - தாகம் தீர்க்கும்.
ச்சாயா - கடக்க ஒரு ச்சாயா போடுப்பா.
ஜமா பந்தி - போட்டும் பட்ட சிட்ட கிடைக்கவில்லை.
சாதா - முட்டை தோசை சாதா தோசை.
காலி(ஹாலி) - ஒரு ஷஹன் சாப்பாட்டை காலி செய்துவிட்டான்.
சைத்தான் (சாத்தான்) - வழி கெடுப்பவன்.
No comments:
Post a Comment