ஏழு பழக்கங்கள் சொர்க்கத்தை உமக்கு இலகுவாக பெற்றுத்தரும்
1. தஹஜ்ஜத்
தஹஜ்ஜத் ஒருவருக்கு சிறப்பையும் மேன்மையையும் பெற்றுத் தரக்கூடியதாக இருக்கிறது . நிச்சயமாக தஹஜ்ஜத் எளிதில் பதிலளிக்கப் படக்கூடியதாகவும் நம்மை அல்லாஹ்வின் பக்கம் நெருங்க வைக்கக் கூடியதாகவும் இருக்கிறது .
2. அதிகாலையில் குர்ஆனை ஓதுங்கள் .
கண்கள் உலகைக் காண்பதற்கு முன்பு இறை வசனங்களை காண்பது சிறந்தது . குர்ஆனை முழு புரிதலுடன் படிப்பது மேன்மையானது . ஒவ்வொரு நாளும் குறைந்தது சில வசனங்களையாவது ஓதி வாருங்கள் .
3. ஃபஜ்ருடைய 2 ரக்அத் சுன்னத்
ஃபஜ்ர் தொழுகையின் இந்த முன் இரண்டு ரக்அத்கள் உலகம் மற்றும் அதில் உள்ள அனைத்தையும் விட சிறந்தது . கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் , அந்த இரண்டு ரக்காத்துகள் உங்களை இந்த உலகில் உள்ள செல்வந்தர்களுக்கெல்லாம் மேலான செல்வந்தராக மாற்றக்கூடியது .
4. லுஹா தொழுகை
ஏனெனில் வாழ்வாதாரத்துக்கான திறவுகோல் லுஹா தொழுகையில் உள்ளது . நிச்சயமாக லுஹா தொழுகை உங்களுக்கு வாழ்வாதாரத்தையும் மன அமைதியையும் பெற்றுத் தருவதற்கு சக்தி வாய்ந்த சிறந்த வழியாக அமையும் .
5. தினமும் சிறிய அளவேனும் தர்மம் செய்யுங்கள்
தர்மம் செய்வதை விரும்புபவர்களை அல்லாஹ் நேசிக்கிறான் , மேலும் வானவர்கள் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்பவர்களுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்கிறார்கள் . நிச்சயமாக நீங்கள் கொடுக்கும் தர்மம் அல்லாஹ்வினால் பல மடங்கு கூலியாக உங்களுக்கு திருப்பி கொடுக்கப்படும் .
6. எப்பொழுதும் உளூ உடன் இருக்க முயற்சி செய்யுங்கள்
ஃபஜ்ரு தொழுகையின் போது
பிலால் ( ரலி ) யிடம் நபி ( ஸல் ) அவர்கள் , ' பிலாலே ! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக ! ஏனெனில் உமது செருப்புச் சப்தத்தை சொர்க்கத்தில் நான் கேட்டேன் ' என்றார்கள் . அதற்கு பிலால் ( ரலி ) ' இரவிலோ , பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை . இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல் ' என்று பதிலளித்தார்கள் .
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரலி ) . நூல்கள் : புகாரி 1149 , முஸ்லிம் 4497
7. தினசரி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருங்கள்
பாவமன்னிப்பு கேட்பதன் மூலமே பெரும்பாலான பிரச்சனை தீர்ந்துவிடும் . பாவங்கள் மன்னிக்கப்படும் . மேலும் அது நிச்சயமாக நம்மை எப்போதும் நேர்மறையாக சிந்திக்கவும் நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் இருக்க வைக்கும் .
No comments:
Post a Comment