Friday, 28 June 2024

ஏன் இந்த அரசியலை மட்டும் பாரதிய ஜனதா ஒருபோதும் பேசுவதில்லை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாதி சங்கங்களும் தங்களுடைய சுவற்றில் ஒட்டி வைத்து பேச வேண்டியது இதைத்தான், இந்தியாவின் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளில் மட்டும் உள்ள மிக உயர்ந்த பதவியான ஜெனரல் மேனேஜர் பதவி 814 இருக்கிறது, அதில் வெறும் 16 பேர் தான் OBC மக்கள், 

27% இட ஒதுக்கீட்டின்படி 219 OBC மக்கள் அந்த பதவியில் இருந்திருக்க வேண்டும்,ஆனால் நிலை என்ன, இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 56 % ( சுமார் 80 கோடிக்கு மேல்) உள்ள மக்கள் கூட்டத்திலிருந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இதுதான் நிலை. 

எஸ்சி எஸ்டி மக்களின் நிலையும் அதேதான்.. 

இது வங்கிகள் என்ற ஒரே ஒரு பொதுத்துறையில் மட்டும் உள்ள கணக்கு, இந்தியாவில்  எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன, அப்போ எத்தனை ஆயிரம் உயர்ந்த பதவிகளை நம் மக்கள் இத்தனை ஆண்டுகளாக இழந்து கொண்டிருக்கிறார்கள்? 

இந்த அரசியல் உரிய முறையில் முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டிருந்தால் நம் மக்கள் எவ்வளவு பேர் உயர்ந்த பதவிகளுக்கு சென்று அவர்களின் தலைமுறைகளும் வாழ்க்கை தரமும் மேம்பட்டிருக்கும், 

ஏன் இந்த அரசியலை மட்டும் பாரதிய ஜனதா ஒருபோதும் பேசுவதில்லை, இட ஒதுக்கீடு ஓபிசி எஸ்சி எஸ்டி என்று சொன்னாலே பிரிவினைவாதம் என்று நரேந்திர மோடி வரைக்கும் கதருவது ஏன்? அப்போ அவன் பேசும் அரசியல் யாருக்கானது, இந்த பல்லாயிரக்கணக்கான உயர் பதவிகளை சுரண்டி கொழுத்திருக்கும் பார்ப்பன உயர் வகுப்பிற்கான அரசியல் அது. ஆனால் அவன் கட்சிதான் நம் எல்லா சாதி சங்கங்களையும் முதலில் வந்து பார்க்கிறான், அவன் அணிந்திருக்கும் முகமூடி இந்து மதம், நாம் இத்தனை ஆயிரம் பதவிகளை இழந்தும் சொரணை அற்று கிடப்பது அந்த மகுடிக்குத்தான். நாம் எப்போது விழித்துக் கொள்வது நம் சாதி சங்கங்கள் எப்போது இந்த அரசியலை பேசுவது?..

No comments:

Post a Comment