கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான பத்து அதி முக்கிய காரணங்கள்:
1. குடும்பத்தில் உள்ள அனைவரின் கரங்களில் தவழும் ஸ்மார்ட்போன்கள்...
2. சமூக அந்தஸ்திற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்...
3. வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறிப்போனது...
4. வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, வார இறுதி மற்றும் பிற நாட்களிலும் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவதை அத்தியாவசியமாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையை பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது...
5. சீரழிந்த வாழ்க்கைமுறை மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...
6. சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்பிற்கான பெரு நிறுவன தயாரிப்பினை (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது...
7. ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட, அதிகப் பணத்தை பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவை சிறப்பாக்க செலவழிப்பதன் மூலம்...
8. பிரமாண்ட திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்...
9. வணிகமயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவற்றினால்...
10. தங்கள் சம்பாத்யத்தில் அனுபவிக்க இயலாததை குறித்த காலத்தில் குறைந்த காலத்தில் அடைந்துவிட கடன் மற்றும் கடன் அட்டைகள் அதி முக்கியமாக மாறிவிட்டதால்.....
11. வீடு மற்றும் அலுவலகத்தின் உட்புறங்களில் பணம் செலவழித்து உள் மற்றும் வெளி அலங்காரம் செய்து குவியல் குவியலாக குப்பைகளை சேரச்செய்து அதன் மூலம் பராமரிப்புச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...
நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம். இது குறைக்கப்படாவிட்டால், அது பல வருடங்கள் கடந்தும் (பழக்கங்கள் மாறாததால்) நோயாக மாறி அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.
இது யோசிக்க விரும்புபவர்களுக்கு மிக நுட்பமான செய்தி
நம்மில் பெரும்பாலோருக்கும் இவை பொருந்தும் .!!!
No comments:
Post a Comment