Monday, 24 June 2024

எழுத்தாளர் அருந்ததிராய் மீது உபா சட்டம் பாய்ந்திருப்பதன் பின்னணி பற்றி,

எழுத்தாளர் அருந்ததிராய் மீது உபா சட்டம் பாய்ந்திருப்பதன் பின்னணி பற்றி, 

14 ஆண்டுக்கு பிறகு ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னணி பற்றி நமது 
Aiman media studies digital journalism 
பத்திரிக்கை பயிற்சி பெறுவோர் சுருக்கமாக உள்வாங்கிக் கொள்ளும் வகையில் ஒரு சின்ன பதிவு

ஸ்ரீநகரில் 2010-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி. ‘ஜம்மு காஷ்மீர் சிவில் சொசைட்டி கூட்டமைப்பு’ சார்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், அருந்ததி ராய், முன்னாள் பேராசிரியர் ஹுசைன், சையத் அலி ஷா கிலானி, கவிஞர் வரவர ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில்,  ‘காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருந்ததில்லை. இது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவின் ஆயுதப்படைகளால் வலுக்கட்டாயமாக காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டது’ என்று அருந்ததி ராய் பேசினார்.  
அதன் பிறகு, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ‘ஆஸாதி (சுதந்திரம்) – ஒரே வழி’ என்ற தலைப்பில் டெல்லியில் 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கருத்தரங்கத்திலும், காஷ்மீர் பற்றிய தனது கருத்தை அவர் எடுத்துவைத்தார். அதைத்தொடர்ந்து, தேசத்துரோக கருத்துக்களை அருந்ததி ராய்  பேசியதாக சர்சசை எழுந்தது.
’அருந்ததி ராய் உள்ளிட்டோர் ஆத்திரமூட்டும் வகையில் பேசினர்’ என்று சுஷில் பண்டிட் என்ற  வலதுசாரி செயற்பாட்டாளர், காவல்துறையிடம் புகார் அளித்தார். ஆகவே, அருந்ததி ராய் கைது செய்யப்படலாம் என்று இந்திய ஊடகங்ளும், தி கார்டியன் உள்ளிட்ட சர்வதேச ஏடுகளும் பரபரப்பாக செய்தி வெளியிட்டன. 
அன்றைக்கு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘அருந்ததி ராய் மீது டெல்லி போலீஸ் வழக்கு எதுவும் பதிவுசெய்யவில்லை’ என்று பதிலளித்தார்.
தேசத்துரோகச் சட்டம், ’உபா’ சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பலரும் ஜாமீன் கிடைக்காமல் நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் அருந்ததி ராயும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அப்படித்தான், கடந்த ஆண்டு ‘உபா’ சட்டத்தின் கீழ் அருந்ததி ராய் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது அந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. முன்பு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீதுதான் ‘உபா’ போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவார்கள். ஆனால், தனிநபர்களையும் பயங்கரவாதிகளாகக் கருதி, இத்தகைய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்ற நிலையை 2018-ம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்தது.
அதன் பிறகுதான், சுதந்திரமான சிந்தனையாளர்கள் பலரும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். மற்ற வழக்குகளில் விசாரணை நடைபெற்ற பிறகுதான், தண்டனை வழங்கப்படும். ஆனால், உபா சட்டத்தில் தண்டனைக்குப் பிறகுதான் விசாரணையே நடைபெறும். அப்படியொரு கொடூரமான, ஜனநாயகத்துக்கு விரோதமான ஒரு சட்டம் இது. சுதந்திரமான சிந்தனையை முடக்குவதற்கான ஆயுதமாக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில், ஜனநாயகத்தின் அனைத்துத் தூண்களும் செல்லரித்துவிட்ட நிலையில், இந்த ஆட்சியின் தொடக்கத்திலேயே அருந்ததி ராய் மீது உபா சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது நல்ல சமிக்ஞை அல்ல”

No comments:

Post a Comment