Monday, 24 June 2024

ஊடகம் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன?

ஊடகம் என்றால் என்ன? 
அதன் வரலாறு என்ன? 

ஊடகங்கள் என்றால் என்ன?:

ஊடகங்கள் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? என்பதை நாம் அறிந்து கொண்டு இந்த தலைப்பினுள் நுழைந்தால் 
நமக்கும் ஊடகங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அவசியம் என்ன? முக்கியத் துவம் என்ன? என்பதை இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

தகவல் தொடர்பு சாதனங்கள், மீடியாக் கள் வெகுஜன தொடர்பு சாதனங்கள் என்று பல பெயர்களில் இந்த ஊடகங்கள் அழைக்கப் படுகின்றன.

‘தனித்திருக்கும் தன்மையை மாற்றி ஐக்கியப்படுத்துதல்’ மீடியா எனலாம்.

‘தகவலை அனுப்புபவருக்கும் பெறுப வருக்குமிடையே நெருங்கிய தொடர்பை ஏற் படுத்துவது, இருவர் அல்லது இரு அமைப்புக் களுக்கிடையே நடைபெறுகின்ற செய்திப் பரிமாற்றமும் அதனால் ஏற்படும் தெளிவும் தகவல் தொடர்பு (மீடியா)’ என்பர்.

தொடர்பு என்பது மனிதர்கள் செய்தி களை அனுப்புவதும் அதனை பெற்றுக் கொள்ளுவதுமாகும்.

தகவல் தொடர்பை ‘கமியுனிக் கேஷன்’ என்பர். இது கம்மியுனிசி  எனும் இலத்தின் சொல்லில் இருந்து பிறந்ததாகும். இதன் பொருள் பகிர்ந்து கொள், செயல் விளைவு, செய்தியைப் பரப்பு என்பதாகும். தொடர்பு என்பது செயல் முறையாகும். அது கருத்துள்ள செய்தியை ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பரப்புவதைக் குறிக்கும்.

இத்தகவல் தொடர்பு முறை மனிதன் தோன்றிய காலம் முதல் இருந்து வருகிறது. ஒரு சமுதாயம் வளர அடிப்படைத் தேவையாக கருதப்படுவது தொடர்பு ஆகும்.

தொடர்பியல் என்னும் சொல்லிற்குப் ‘பொதுமையாக்குதல்’ எனப் பொருள் கொள்ள லாம். அதாவது, பெறுபவருடைய மனதில் அனுப்புவரின் கருத்து அல்லது கருத்துப் படிவத்தை உருவாக்குவது பொதுமையாக்குதல் எனப்படும். அதாவது, ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலில் செய்தி அனுப்புபவருக்கும் பெறுபவ ருக்கு மிடையே நிகழும் செய்திப் பரிமாற்றச் செயல் முறையே தொடர்பியல் எனப்படும்.

 

செய்திகள், எண்ணங்கள், உணர்ச்சி கள், திறமைகள் போன்றவற்றைக் குறியீடு, பேச்சு, எழுத்து, படம், வரைபடம் போன்றவற்றின் வழியாகப் பரப்புவதும் தொடர்பியல் என அழைக்கப்படும்.

ஊடகத்தின் வரலாறு:

பிறரைப் பற்றி அறிவதிலும் தன்னைச் சுற்றி நடக்கும் விசையங்களை அறிவதிலும் மனிதனுக்கு எப்போதும் அதிக ஈடுபாடு உண்டு. இக்குணமே தகவல் தொடர்பியல் அல்லது மீடியாக்கள் தோன்றக் காரணமாக அமைந்தது. கற்கால யுகம் சென்று கணனி யுகம் வளர்ந்த இக்காலம் வரை மனிதனின் ‘தேடல்’ குணமே மீடியாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்!

விஞ்ஞான தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டு விண்ணை ஆராய்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் இது!

சாதனைகளில் சிகரம் தொடும் இக் காலத்தில், மனிதன் அன்று முதல் இன்றுவரை தன்னைச் சூழவுள்ள நிகழ்வுகளை அறிந்து கொள்வதிலும் – அறிந்து கொள்ள கையாளும் படிமுறைகளிலும் முன்னேறி வருகின்றான்.

உலகம் உருண்டையானது என்று அறிவுலகம் நிரூபித்துக் காட்டியது போலவே உலகத் தொடர்புகளை ஒன்றுபடுத்தி ஒரு பந்து போல் தந்திருக்கிறது மீடியாக்கள்!

24 மணி நேரமும்  ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகின்ற அரசியல், சமூக, பொருளாதார, மற்றும் பிற விஷயங்களை எடுத்துக் காட்டுகின்ற நிலமைக்கு வெகுஜன தொடர்பு சாதனங்கள் வளர்ச்சி அடைந்து விட்டன.

தன்னைச் சூழ நடக்கும் விவகாரங் களையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் விவகாரங்களையும் அறிந்துகொள்ளும் நிலைக்கு மனிதன் உயர்ந்த போது வெகுஜனத் தொடர்பு சாதனங்களின் பரினாமமும் மாறத் தொடங்கியதுளூ வளர்ச்சியடையத் தொடங்கியது.

அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்த போது ஈராக்கில் என்ன நடக்கிறதுளூ உலக அரங்கில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக் கிறது என்ற செய்தியை அறிய மக்கள் ஆர்வம் காட்டினர்.

ஈராக் ஆக்கிரமிப்பிற்குப் பின் ஜனாதி பதி சதாம் ஹுஸைன் என்ன ஆனார்? அவரு டைய படைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய மக்கள் ஆர்வம் காட்டினர்.

சதாம் ஹுஸைன் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தி வெளியாகியவுடன், உண்மையில் சதாம் ஹுஸைன் தான் கைது செய்யப்பட்டாரா? அல்லது வேறொருவர்தான் கைது செய்யப்பட்டாரா என மக்கள் சந்தேகம் கொண்டபோது,

சதாம் ஹுஸைன் அமெரிக்கப் படை யினரால் கைது செய்யப்பட்ட விதம் அதன் பின் சதாம் மரபணு பரிசோதனைக்கு உட்படுத் தப்படும் காட்சிகளை ஒளிபரப்பிய பின்புதான் மக்கள் அச்செய்தியை ஏற்றுக் கொண்டனர்.

சுனாமி வந்தபோது ஏற்பட்ட அழிவு களையும் இழப்புக்களையும் அறிந்து கொள்ள வும் உறவினர்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளவும் 24 மணி நேரமும் மீடியாக்களைப் பெரிதும் நம்பியிருந்தனர்.

தேர்தல் காலங்களில் முடிவுகளை எதிர்பார்த்தும் புதிய அரசாங்கத்தின் செயற் பாடுகளை அவதானிப்பதற்கும் மீடியாக்களை எதிர்பார்க்கின்றனர்.

இதுபோன்று நடைபெறும் எல்லா நிகழ் வுகளையும் உடனுக்குடன் உறுதியாக அறிந்து கொள்ள மக்கள் இன்று வெகுஜனத் தொடர்பு சாதனங்களைப் பெரிதும் நம்பியிருக்கின்றனர்.

இன்று எந்தவொரு செய்தியையும் உடனுக்குடன் பார்த்து, அறிந்து கொள்ளக் கூடிய வசதிகள் உள்ளன. அல்-ஜஸீரா இணை யம் போன்ற ஊடகங்கள் ஒவ்வொரு நாட்டிலும் 24 மணி நேரமும் ஒளிபரப் பாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அன்று ஒரு செய்தியை அறிந்துகொள்ள மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது.

கொலம்பஸ் 12. 10. 1942 அன்று அமெரிக்காவை கண்டுபிடித்த செய்தியை ஐந்து மாதங்களுக்குப் பின்பு ஸ்பெயின் நாட்டு மன் னன் அறிந்து கொண்டார்.

ஆங்கில படைத்தளபதி நெல்சன் 21. 10. 1805 அன்று மரணித்த செய்தி பதினைந்து நாட்களுக்குப் பின்புதான் இங்கிலாந்துக்குத் தெரிந்தது.

04. 1865 அன்று அமெரிக்கா ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப் பட்ட செய்தி ஐரோப்பா கண்டம் பன்னிரெண்டு நாட்களுக்குப் பின் தெரிந்து கொண்டது.
இன்று துருக்கியில் நடந்த பூகம்பம், பக்தாதில் நடக்கும் குண்டுவெடிப்பு பலஸ்தீனில் நடக்கும் ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்வுள் அதே நிமிடம் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டிருக் கின்றன.

குகைகள்:

முதன் முதலில் மக்கள் செய்திகளை இன்னுமொருவருக்கு அறிவிப்பதற்கு குகை களைப் பயன்படுத்தினர்.

 

வேட்டைக்குச் செல்லும் மனிதர்கள் ஓலைச் சுவடிகளிலும், மட்டைகளிலும் செய்தி களைப் பரப்பிக் கொண்டார்கள்.

கூத்து – நாடகம்:

விசில் அடித்தல், பாறையடித்தல், மணி அடித்தல், ஓசை எழுப்புதல், தீ அம்புகளை வானத்தில் எறிதல், தீ பற்றவைத்தல், தெருக் கூத்து, நாட்டார் பாடல்கள், பட்டிமன்றங்கள், விவாத அரங்குகள், கிராமியப் பாடல்கள், நடனங்கள் மூலமாகவும் செய்திகளைப் பரப்பிக் கொண்டார்கள்.

வணிகர்கள், துறவிகள், முனிவர்கள், நாட்டுக்கு நாடு செல்லும் போது பெண்கள், ஆற்றில் குளத்தில், கிணற்றில் நீர் எடுக்கச் செல்லும் போதும் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.

கவிதைகள்:

சீனாவில் நெடுங்காலமாக கவிதை களினாலேயே செய்திகளைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

பறை அடித்தல்:

தசரதன், தனக்கு குழந்தை பிறந்த செய்தியை பறை அடித்து அறிவிக்குமாறு சொன்ன செய்தி கம்பராமாயணத்தில் உள்ளது.

‘வள்ளுவர் யானை மீகிசை நன்பறை அறைந்தனர்’ என்று கூறுகிறது கம்பராமாயா ணம். (294)

முதுகுடிப் பிறந்தோனாகிய வள்ளுவன் யானை மீதேறி ஊரையும் மன்னனையும் வாழ்த்தி முரசறைந்து செய்திகளை அறிவித் தான் என்று மணிமேகலை கூறுகிறது. (விழா 27-31)

கண்ணகி சிலைக்குக் கல் எடுக்கச் சென்றதை வள்ளுவர் பட்டத்து யானையின் மீதேறிப் பறை அறிவித்தான் என்று சிலம்பு கூறுகிறது.

‘இறையிக யானை யொருத்தத்தே லிற்றி. அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கென்’ (சிலம்பு – காட்சி 263-264)

 

ஆப்ரிக்கக் காடுகளில் வசித்துக் கொண்டிருந்த நீக்ரோ மக்களிடையே முர சறைந்து அக்குறிப்பினாலே பல கல்களுக்கும் அப்பாலிருக்கும் தங்கள் இனத்தவர்களுக்குச் செய்தி அனுப்புகிற முறை நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அமெரிக்க நாட்டு காட்டு மக்களிடையே புகை, நெருப்பு ஆகியவற்றை மூட்டி அவற்றின் மூலம் சில செய்திகளைக் குறிப்பிடுகின்ற முறையும் இருந்திருக்கிறது.

அரசர், ஒருவருக்கு ஒரு இடத்தை அல்லது ஒரு பகுதியைப் பரிசாக கொடுத்ததை ஊராருக்குத் தெரிவிப்பதற்காக அந்த செய்தியை கல்லில் செதுக்கி வைப்பார்.

சங்க இலக்கியத்தில் நடுகல் பற்றிய செய்தி காணப்படுகிறது. போரில் வீரமரணம் எய்தியவர்களுக்கு நடுகல் நடுவர். அதில் வீரனின் பெயர் அவன் ஆற்றிய வீரச் செயல், பெருமை மடிந்ததற்குக் காரணம் போன்ற செய்திகள் எழுதப்பட்டிருக்கும்.

‘நடுகல்லில் வீரரது பெயரையும் சிறப்பு களையும் பொறித்து வைப்பர் என்று அகநானூறு (67:8-11) கூறுகிறது.

மகளிர் சுவரில் நாளைக் குறித்து வைக்கும் செய்தியைச் சங்க இலக்கியத்தில் (பதி:68:17-19 அகம் 61:45, 289:9-10) காணலாம்.

கொடிகள்:

ஜஹாங்கீர் மன்னர் தனக்குப் பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிவ தற்காக தில்லியிலிருந்து ஆக்ரா வரை வீரர் களை நிறுத்தி ஆண் குழந்தை பிறந்தால் சிவப்புக் கொடியும், பெண் குழந்தை பிறந்தால் பச்சைக் கொடியையும் காட்டும்படி உத்தர விட்டார்.

கிளிகள்:

அசோகர் காலத்தில் அரசக் கட்டளை களும், அறச் செயல்களும் புத்த சமயக் கொள்கைகளும் தூண்களிலும் கற்பாறைக ளிலும் செதுக்கி வைக்கப்பட்டன. ஒரிசா மாநிலத்தில் (மன்னர்கள் காலத்தில்) கிளிகள் மூலம் செய்திகள் கடிதப் போக்குவரத்துக்கள் நடைபெற்றன.

இறைத் தூதர் சுலைமான் நபி அவர் களின் ஹுத்ஹுத் எனும் பறவையின் மூலம் செய்திகள் பரிமாறப்பட்டன என அல்குர்ஆன் கூறுகின்றது.

இறை தூதர் முஹம்மது நபி(ச) அவர் களின் காலத்தில் இறைச் செய்தி (அல்லாஹ் வின் கட்டளையான அல்குர்ஆன்) ஈத்த மட்டைகளில், தோல்களில் எழுதி பரப்பப் பட்டன பாதுகாக்கப்பட்டன.

 

எழுதும் முறை கி.மு. 300 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த சுமேத்தியர் என்பவர்களால் எழுதும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இன்று உலகம் பூராகவும் நடைமுறையிலுள்ள உரோம எழுத்துக்கள் கி.மு. 4ம் நூற்றாண்டில் ஆரம்ப மானது.

கி.மு. 2400 ஆண்டளவில் பபிலோனி யாவில் களிமண் புத்தகங்கள் ஆப்பு போன்ற உருவிலமைந்த எழுத்துக்களில் பொறிக்கப் பட்டன. அந்த எழுத்து முறை அஸ்ஸிரியர்க ளின் எழுத்துமுறை எனப்படுகின்றது. அவற்றில் நீதித் தீர்ப்புக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

வரவு செலவுக் கணக்குகள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. களிமண் பலகைகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு, பின்பு சுடப் பட்டிருந்தன. களிமண் புத்தகங்கள் முட்டிகளில் போடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன.

மத்திய கிழக்கிலுள்ள நினேவா என்னுமிடத்தில் கி.மு. 700ஆம் ஆண்டளவில் களிமண் பலகைகளைக் கொண்ட நூலகம் ஒன்று இருந்ததாக சான்றுகள் கிடைத்துள்ளன.

கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த இறைத் தூதர் மோஸேவுக்கு ‘போதனைகள் அடங்கிய மரப்பலகை’ ஒன்று இறைவனால் வழங்கப் பட்டது என அல்குர்ஆன் கூறுகிறது.

அதன் பின்பு ஓலைச் சுவடிகள் வழக்கிலிருந்தன. இந்தியா, இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் ஓலைச் சுவடிகள் வழக்கிலிருந்தன.

கடதாசி கண்டு பிடிப்பு அச்சுக் கலைக்கு வழிவகுத்தது. எகிப்தில் வளரும் ஒருவித களையிலிருந்து தான் கடதாசி ஆரம்பத்தில் செய்யப்பட்டது. ‘பப்பிரஸ்’ என்று அந்த கடதாசியை எகிப்தியர் அழைத்தனர்.

கி.மு. 4000 ஆண்டளவில் பப்பிரஸ் உபயோகிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

அன்று முதல் இன்று வரை பல்வேறு பெயர்களில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வார மாத இதழ்கள் வெளிவந்து கொண்டிருக் கின்றன.

No comments:

Post a Comment