Monday 11 November 2019

பாபர் மசூதி

டிசம்பர் ஆறு அன்று
#கறுப்பு_தினம் கொண்டாடி
கொண்டாடி சோர்ந்து விட்டோம்.

இனிமேல்
#பொறுப்பு_தினம் கொண்டாடுவோம்.

ஐந்து ஏக்கர் புதிய இடத்தில்
அதே பாபர் மசூதி தோற்றத்தில்
கம்பீரமாக ஒரு பள்ளியை
#பாபர்_மசூதி என்ற பெயரிலேயே
கட்டி எழுப்புவோம்.

தொழுகைக்காக
மக்கள் கூடும் கூட்டத்தால்
பள்ளியை அலங்காரம் செய்வோம்.

உலகில் உள்ள
பள்ளிகளை விட எழிலான ஒரு
பள்ளிவாசலை அங்கே கட்டி முடிப்போம்.

பெரும்பான்மை இந்து சகோதரர்களோடு
இணக்கத்தை அனுசரிப்போம்.
இப்தார் வேளைகளில்
இன்முகத்தோடு அவர்களிடம்
நல்லிணக்கம் பேசுவோம்.

பகை படிந்த உள்ளங்களை
பொறுமையைக் கொண்டு
சுத்தம் செய்து விடுவோம்.

என்றாவது ஒருநாள் ..

இஸ்லாமியர்களின்
இணங்கி வாழும் பண்பில்
அவர்களும் இணங்கி வருவார்கள் .

அரபு குலத்தின்
அதிகார மையத்தில் இருந்தவர்களே
இறங்கி வந்து
அண்ணல் நபிகளின்
அடியொற்றி நடந்த வரலாறுகள்
நம்மிடம் உண்டு .

நிச்சயமாக
பொறுமையாளர்களுடன்
இறைவனே இருக்கிறான்.

இறைவனே
நம்மோடு இருக்கும்போது
இடம் ஒன்றும் பெரிதில்லை.!

.

No comments:

Post a Comment