Monday 11 November 2019

இல்யாஸும்

وَاِنَّ اِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏ 
மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
(அல்குர்ஆன்: 37:123)

اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَلَا تَتَّقُوْنَ‏ 
அவர் தம் சமூகத்தவரிடம்: "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
(அல்குர்ஆன்: 37:124)

اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخٰلِقِيْنَۙ‏ 
"நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு "பஃலு" (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
(அல்குர்ஆன்: 37:125)

اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَآٮِٕكُمُ الْاَوَّلِيْنَ‏ 
"அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்."
(அல்குர்ஆன்: 37:126)

فَكَذَّبُوْهُ فَاِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ‏ 
ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.
(அல்குர்ஆன்: 37:127)

اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏ 
அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)
(அல்குர்ஆன்: 37:128)

وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَۙ‏ 
மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
(அல்குர்ஆன்: 37:129)

سَلٰمٌ عَلٰٓى اِلْ يَاسِيْنَ‏ 
"ஸலாமுன் அலா இல்யாஸீன்" இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.
(அல்குர்ஆன்: 37:130)

اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
(அல்குர்ஆன்: 37:131)

No comments:

Post a Comment