பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
*🌸السلام عليكم و رحمة الله و بركاته🌸*
♥️••*´¨`*•.☆••☆.•*´¨`*••♥️
*சொர்க்கம் செல்ல சுலபமான வழி❗* •────•──────────•────•
அல்லாஹ் சொல்கிறான்:
ஒரு மனிதன் பிறருக்கு செய்த தீங்கை, பாதிப்புக்குள்ளானவர் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிப்பதில்லை'. அதே நேரத்தில், 'சக மனிதர்கள் செய்த தீமையை மன்னித்து விட்டால் அதற்கு பிரதியாக இரட்டிப்பாக கூலியைத் தருகிறேன்' என்று இறைவன் கூறுகின்றான்.
பிறரின் குறைகளை மறைப்பதும், பிறரின் தீமைகளை மன்னிப்பதும் சொர்க்கம் செல்ல சுலபமான வழி என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.
அதுபோல, 'பிறரை உயர்வாக கருதும் எண்ணம் சொர்க்கத்தை பெற்றுத் தரும்'. இதற்கு உதாரணமாய் ஒரு நிகழ்வு:
ஒருமுறை நபிகள் (ஸல்) தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, 'நான் இப்போது உங்களுக்கு இறைவனால் சொர்க்கவாதி என்று அறிவிக்கப்பட்டவரை அடையாளம் காட்டவா?' என்று வினவினார்கள். தோழர்கள் ஆவலுடன் தொடர்ந்து கேட்டனர்.
'இப்போது ஒருவர் நம்மை கடந்து செல்வார், அவர்தான் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒருவர் இடது கையில் தன் காலணிகளை பிடித்தவராக 'ஒளு' (அங்க சுத்தம்) செய்த தண்ணீர் தாடியிலிருந்து வழிந்தோடிய வண்ணம் அந்த கூட்டத்தை கடந்து சென்றார்.
நபித்தோழர்களில் ஒருவருக்கு, 'எந்த நல்ல செயலின் காரணமாக இத்தகைய உயர்ந்த அந்தஸ்த்தை அவர் பெற்றார்' என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
அவரிடம் சென்று, 'உங்களுடன் இரண்டொரு நாட்கள் தங்க வேண்டும் அனுமதி தருவீர்களா?' என்று கேட்டார். அவர் சம்மதம் தெரிவித்த பின்னர் அவருடன் தங்கி அவரது அன்றாட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார்.
அப்போது அவரிடம் எந்த விதமான சிறப்பான நற்செயல்களையும் அவரால் கண்டுகொள்ள முடியவில்லை.
எனவே அவரிடமே கேட்டார், 'நாங்கள் செய்வது போன்று தான் தொழுகை மற்றும் அன்றாட கடமைகளைத்தான் நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீங்கள் சொர்க்கவாதி' என்பதாக சொன்னார்கள். அத்தகைய உயர்ந்த அந்தஸ்த்தை பெறுவதற்கு நீங்கள் என்ன நற்செயல்களைச் செய்கிறீர்கள்? என்று அறிந்துகொள்ளவே உங்களுடன் தங்கினேன்' என்றார்.
அதற்கு அவர், 'நான் எல்லோரையும் போலத்தான் எனது கடமைகளைச் செய்கிறேன். ஆனால் என்னிடம் ஒரு குணம் உண்டு. எந்த சகோதர மனிதனையும் என் மனதளவில்கூட தாழ்வாக என்றுமே எண்ணுவதில்லை. ஒருவேளை அது தான் எனக்கு சிறப்பை பெற்றுதந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்' என்று பதில் கூறினார்.
No comments:
Post a Comment