யாருக்கு வேண்டும் இந்த 5 ஏக்கர்..
=============================
இந்திய சுதந்திரத்திற்காக
தங்களையே கொடுத்தவர்கள் முஸ்லீம்கள்.
ஜதராபாத் நிஜாம் கொடுத்தாரே
5000கிலோ தங்கம், அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?
.
கப்பல்வாங்க வா உ சி க்கு பல கோடி
கொடுத்துஉதவினார்களே...முஸ்லீம்கள்
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?
சுதந்திரம் வாங்க வீர மரணம்
அடைந்த அதிகமானோர் முஸ்லீம்கள்,
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?
டெல்லியில் உள்ள
இந்தியா கேட் முகப்பில் 69500 பேர் முஸ்லீம்கள் என பொறிக்கப்பட்டுள்ளது
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?
நீதி சொன்ன நீதி மன்றம் ...
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
டெல்லி ஜனாதிபதி மாளிகை
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
நாடாளுமன்றம்...
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
தாஜ்மகால், குதுப்மினார்,ரேட் போர்ட்..
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
டெல்லி செங்கோட்டை
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?
முஸ்லீம்களின்
ஆயிரமாயிரம் தியாக
வரலாறுகள் இந்தியாவின் வழியெங்கும்
கொட்டிக்கிடக்கிறது சங்கிகளே!
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?
இந்தியாவின் சுதந்திரத்திற்காக
தங்களின் சக்திக்கு மீறி
தியாகம் செய்த பரம்பரையினர்
முஸ்லீம்கள் என்று வரலாறு எழுதி
வைத்துள்ளதை அறிவீரா சங்கிகளே?
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?
இன்னும் ஆயிரமாயிரம் தியாகத்திற்கும்,
உழைப்புக்கும், நீதிக்கும், நேர்மைக்கும்
பெருமைக்கும் உரியவர்கள் முஸ்லீம்கள்...
குருவாயூரில் உள்ள கோவிலுக்கு
669 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த
நன்கொடை நாயகன்
மாவீரன் திப்பு சுல்தான்...
இன்னும் இதுபோல கோயில்களுக்கு
நஞ்சைகளையும், புஞ்சைகளையும் வாரி வாரி தானமாக கொடுத்தவர்கள் முகலாய மன்னர்கள் என்று வரலாறு சொல்லும்.
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?
திருவல்லிக்கேணி திரு வெற்றீசுவரன் கோவில் கட்ட ஆற்காடு நவாப்தான் இடம் கொடுத்துள்ளார். கோவிலின் பராமரிப்புக்காக பல்வேறு மானியங்களும் கொடுத்துள்ளார்கள்.
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?
ஆற்காடு நவாப்புகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளை 16 நூற்றாண்டில் இருந்து 19 நூற்றாண்டு தொடக்கம் வரை ஆட்சி செய்தனர். அப்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலுள்ள கோவில்களுக்கு பல தானதர்மங்களை செய்துள்ளனர்.
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?
உலகத்தின் வரலாற்றை புரட்டிப்பார்.
இஸ்லாமியர்களின் வீரதீர தியாகங்கள் புரியும்.
முஸ்லீம்கள்...
விட்டு கொடுப்பவர்கள். அதனால் என்றுமே கெட்டு போகமாட்டார்கள்...
கெட்டு போகிறவன் விட்டு
கொடுக்க மாட்டான்....
1947ல் நாடு விடுதலை பெற்றபோது, முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்கப்பட்டது. பெரும்பான்மையான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு சென்றபோதிலும், லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்தியா தங்கள் தாயகம் என்ற எண்ணத்திலும், இந்துக்களின் மேல் இருந்த நம்பிக்கையாலும் பிறந்த இடத்திலேயே இருந்துவிட்டார்கள்.
சம்ராஜ்யங்கள் சரியலாம்....
சரித்திரங்கள் சரியாது.....
சங்கிளுக்கு இந்திய முஸ்லீம்களை
பிடிக்காது. ஆனால்
அரபுநாட்டு ஷேக்களும்,
அவர்களின் முதலீடுகளும்
அவர்களின் விருந்தும்,
அவர்களின் பெட்ரோல் ஊற்றும் பிடிக்கும்.
அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட
50 ஏக்கர் நிலம் வாங்கித் தாருங்கள் என்று முஸ்லீம்களிடம் கேட்டிருந்தால், முஸ்லீம் என்றோ வாங்கித் தந்திருப்பார்களே.
ராமருக்கு ஆலயம் கட்ட
எங்கள் இறை ஆலயத்தையே
வார்த்து தந்திருக்கிறோம்.
இதுதான் உண்மை.
யாருக்கு வேண்டும் இந்த 5 ஏக்கர்..
ஹாபிழ்
M,S, முஹம்மது ரபீக், மிஸ்பாஹி.
No comments:
Post a Comment