Tuesday 12 November 2019

அஸ்திவாரம் போடும் போது பூஜை பொருட்களை புதைக்க அனுமதிக்காதீர்!

அஸ்திவாரம் போடும் போது பூஜை பொருட்களை புதைக்க அனுமதிக்காதீர்!

தமிழகத்தில் வீடோ? அல்லது வேறு கட்டிடங்களோ கட்டும் போது அஸ்திவாரம் என்னும் வானப்படை போடுவது வழக்கம்!

இவ்வாறு அஸ்திவாரம் போடும் போது முதலில் மேஸ்திரி,கொத்தனார் போன்றவர்கள் தேங்காய்,பழம்,ஊதுபத்தி,குங்குமம்,சந்தனம் வைத்து பூமி பூஜை செய்வார்கள்.

பூஜை முடிந்ததும் ஐம்பொன் என்னும் பொருட்களை ஒரு பேப்பரில் மடித்து பூமிக்குள் வைப்பார்கள்.அதை சுற்றியும் சந்தனம் குங்குமம் தடவிய செங்கலை எடுத்து ஒவ்வொருவரிடமும் கொடுத்து அதை பூமிக்குள் வைக்க சொல்வார்கள்.

இதுபோன்ற நிகழ்வுகள் முஸ்லிம்களிடமும் உள்ளது என்பதும் இணை வைத்தலுக்கு எதிரான அல்லாஹ்வின் பள்ளிகள் கட்டப்படும் போதும் பூமி பூஜை நடப்பது அதிர்ச்சி மட்டுமல்ல, இதனை கண்டும் காணாதது போல் உள்ளனர் என்பது தான் பேரதிர்ச்சியாகும்.

தற்போதைய சிவில் வழக்கு முறைப்படி நமது கட்டிடத்தின் மீது யாராவது ஒருவர் வழக்கு தொடுத்து இந்த கட்டிடம் எங்கள் முன்னோர்கள் வணங்கிய இடமென்று கூறினால்....

அந்த கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஆராய்ச்சி செய்து அதனடிப்படையில் தீர்ப்பு கொடுக்க வாய்ப்புள்ளதால்...நாம் கட்டிடம் கட்டுவதற்கு முன்பு அனுமதித்த பூமி பூஜையின் அடையாளங்கள் நமது கட்டிடத்தை இன்னொரு புறம்போக்கு நபருக்கு மாற்றி கொடுத்து விடக்கூடும்?

நம்பிக்கை மற்றும் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தீர்ப்பு சொல்லப்படும் நமது நாட்டில் நமது சொந்த நிலத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் பூமிக்கடியில் புதைக்கப்படும் பூஜை பொருட்களே நாளை நமக்கு எதிராக மாறும் வாய்ப்புள்ளது.

எதிர்கால அரசியல் சூழ்ச்சிகள் புரியாத மங்குனி சமூகமாய் நாம் பயணிப்பதால் தான், நமது நிலத்திலேயே மற்றவர்களின் மத நம்பிக்கையின் அடையாள பொருட்களை புதைக்க விட்டு நாம் வேடிக்கை பார்க்கிறோம்.

நமது நிலம்,கட்டிடம் நமக்கும் நமது சந்ததிகளுக்கும் உரிமையாக வேண்டுமானால்...நாம் கட்டும் எந்த கட்டிடத்தின் அஸ்திவாரத்தின் போதும் பூஜை பொருட்களை புதைக்க அனுமதிக்காதீர்.

No comments:

Post a Comment