*✍முஹம்மது இப்ராஹீம் யூஸுஃபி*
*மஸ்ஜிதுகளை நிர்வாகம் செய்ய தகுதியுடையோர் யார்?*
*அல்லாஹ்வுடைய பள்ளிகளை பரிபாலணம் செய்பவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசித்து தொழுகையையும் நிறைவேற்றி, ஸகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வையன்றி மற்ற எவருக்கும் பயப்படாமலும் இருப்பவர்களே. இத்தகையோர் நேர்வழிப்பெற்றவர்களாக இருக்கத்தக்கவர்களே'' (அல்குர்ஆன் 9:18)*
*இன்று நாம் பணம்,அரசியல்,செல்வாக்கு,குடும்பம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பள்ளிவாசலின் நிர்வாகிகளை தேர்வு செய்கிறோம்.*
*ஆனால் குர்ஆன் கூறும் பண்புகள் எவர்களிடம் உள்ளதோ அவர்களை மஸ்ஜிதின் நிர்வாகப் பொறுப்புக்கு மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.*
*தேர்ந்தடுக்கப்பட்ட நிர்வாகிககள் முஹல்லா மஸ்ஜிதை மஸ்ஜிதுந் நபவியைப் போல உருவாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.*
*பள்ளிவாசலை மைய்யமாகக் கொண்டு மேற்கொள்ளக் கூடிய சில முக்கிய பணிகள்:*
1.பள்ளிவாசலை சார்ந்து நடைபெறும் மத்ரஸாவில் அல்குர்ஆன்,
சன்மார்க்க போதனைகளுடன் நடைமுறைக் கல்வியுடன் தொடர்பான வகுப்புகளையும் நடத்த ஒழுங்கு செய்தல்.
*2. நூல் நிலையம் அமைத்தல்.*
*3. சமூகத்தில் உருவாகும் பிணக்குகளையும் சர்ச்சைகளையும் பள்ளியில் தீர்த்து வைக்க வழிசெய்தல்.*
*4. நிவாரண உதவிகள், சமூக சேவைகளுக்கான மையமாக இயங்குதல்.*
*5. வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துதல்.*
*6. சமூக நலத் திட்டங்களை வகுத்து செயற்படுத்துதல்.*
*7. ஸகாத், ஸதகதுல் பித்ர் முதலானவற்றை கூட்டாக சேர்த்து விநியோகிக்க வழிசெய்தல்.*
*8. இமாம்கள், கதீப்மார்களைப் பயிற்றுவிக்க ஒழுங்கு செய்தல்.*
*9. குத்பாக்களை செயல்திறன்மிக்கதாக அமைத்துக் கொள்ள ஆவனம் செய்தல்.*
*10. முஸ்லிமல்லாதோர் பள்ளிவாசலை வந்து பார்வையிடவும் தேவையான விளக்கங்களைப் பெறவும் உரிய ஏற்பாடுகளை செய்தல்.*
*11. ஊரில் வசிக்கும் ஏழை, எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பள்ளிவாசல் பங்கெடுத்துக் கொள்ளல்.*
*12. ஊரில் நடக்கும் சமூகத் தீமைகளைக் களைய பாடுபட வேண்டும்.*(சீதனம்,
வட்டி, மணமுறிவு, இளைஞர்களின் ஒழுக்கச் சீர்கேடு ஆகியவற்றை இயன்றவரை தடுக்க முயலவேண்டும்)
*13. சொத்து மற்றும் குடும்பப் பிரச்சினைகளை மார்க்க அடிப்படையில் தீர்த்துவைக்க ஷரீஆ மையங்களை உருவாக்க வேண்டும்.*
*14. மாணவ மாணவியரின் கல்விக்கு முன்னுரிமை அளித்து உதவிடவும் வட்டியில்லா கடன் அளிக்கவும் பைத்துல் மால் அமைப்பை உருவாக்க வேண்டும்.*
No comments:
Post a Comment