#இழந்தோம்_ஒரு_பாபரி_பள்ளிவாசலை
#வென்றோம்_பல_இந்துக்களின்_இதயங்களை
🎯👆👌💐💐💐👏🏻#மதத்தினுள் #அடங்கா #மாந்தர்
வாழ்த்துக்கள் #பத்மாவதி பாட்டி. தங்களது செயலை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்.
சேலம் முதல் அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் பத்மாவதி பாட்டி, அங்குள்ள ஜாமியா பள்ளிவாசலின் புனரமைப்பிற்கு நன்கொடையாக ரூ.10,000 தானம் கொடுத்துள்ளார். அதற்கான ரசீதில் அவர் கைரேகையை ஒப்பிட்டுக்கொடுத்துள்ளார். பாராட்டுவோம் வாழ்த்துவோம்.
கடந்த வாரம் லக்னோ பகுதியில் ஒரு கேன்டிட் வீடியோ நிகழ்ச்சியை நடத்திய ஒரு சமூக ஊடக சேனல் வெளியிட்ட தரவுகளின்படி....லக்னோவிலிருக்கும் பிரபல மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் முஸ்லிம்களிடமும், தலையில் தொப்பி,தாடி ,ஜுப்பாவுடன் முஸ்லிம் அடையாளங்களோடு வலம்வந்தவரிடையேயும் அருகிலிருக்கும் ஒரு கோவில் புனரமைப்பிற்காக நன்கொடை கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மறுப்பேதும் செல்லாமல் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினி நீட்டிய உண்டியலில் தங்களால் இயன்ற தொகையை போட்டுவிட்டனர்.
பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கின் ,இஸ்லாமிய விரோதப்போக்கு தீர்ப்பிற்கு பிறகு இந்தியாவில் குறிப்பாக உபியில் முஸ்லிம்களின் மனநிலை எப்படியுள்ளது என்பதை கண்டறிவதற்காக நடத்தப்பட்ட நாடக நிகழ்ச்சி அது. அதில் 100% முஸ்லிம்கள் எங்களது மனங்களை வென்றுவிட்டார்கள், அவர்களிடம் விரோதம், காழ்ப்புணர்ச்சி, குரோதம் என எந்தவித ஆவேசங்களும் இல்லை என ஊடகத்தினர் சார்பில் தரவுகள் பகிரப்பட்டது. அவர்கள் செய்த செயலைவிட நமது பத்மாவதி பாட்டி செய்த தானம் தான் போற்றுதலுக்குறியதாகப்படுகிறது.
#நன்றி #பாட்டி.
No comments:
Post a Comment