'ஒருவர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது *அவருக்குக் கடும் தாகம் ஏற்பட்டது.*
வழியில் அவர் ஒரு கிணற்றைக் கண்டு அதில் இறங்கினார். *அதிலிருந்து தண்ணீர் குடித்தார்.* பிறகு வெளியே வந்தார்.
அப்போது, தன் எதிரே *நாய் ஒன்று தாகத்தால் தவித்து ஈரமண்ணை "நக்கி உண்டு கொண்டிருப்பதைப் பார்த்தார்.*
'எனக்கு ஏற்பட்டது போன்ற (கடும்) தாகம் *இந்த நாய்க்கும் ஏற்பட்டுள்ளது போலும்'* என்று தன் மனத்திற்குள் கூறினார்.
பிறகு கிணற்றில் இறங்கி, *தன் காலுறையைத் தண்ணீரால் நிரப்பி மேலே கொண்டு வந்து அந்த நாய்க்குப் புகட்டினார்.*
*அல்லாஹ், அவரின் இந்த நற்செயலை அங்கீகரித்து அவருக்கு மன்னிப்பளித்தான்'* என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற மக்கள், *'இறைத்தூதர் அவர்களே!*
*கால்நடைகள் மற்றுமுள்ள பிராணிகள் விஷயத்திலுமா எங்களுக்குப் பிரதிபலன் உண்டு?'* என்று கேட்டார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், *'உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்குக் கருணை காட்டினால் உங்களுக்குப் பிரதிபலன் உண்டு'* என்று பதிலளித்தார்கள்.
*நூல் - புகாரி : 2466*
No comments:
Post a Comment