இவர்தான் ராஜதந்திரி
கடந்த வாரம் சிவசேனா கட்சி தாங்கள் ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் ஆதரவு கேட்ட போது, காங்கிரஸ் தலைவர் சோனியா சிவசேனாவிற்கு ஆதரவளிக்காமல் காலம் தாழ்த்தினார். காரணம், பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்களும், எம்,எல். ஏக்களும் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. அவசரமாக செயற்குழு கூட்டப்பட்ட பின்பும் முடிவு எடுக்கப்படவில்லை. பின்னர் சரத்பவரின் ஆலோசனைப்படி குறைந்த பட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் சிவசேனாவிற்கு ஆதரவளிக்க முன்வந்தார். இந்த காலகட்டத்தில் தான் ஆளுநர் ஆட்சி, பாஜக இரவோடு இரவாக பதவியேற்றது போன்ற கூத்தெல்லாம்..
கடந்த வாரம் மட்டும் சோனியா காந்தி அவசரமாக எதாவது முடிவெடுத்திருந்து சிவசேனாவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவளித்திருந்தால், மகாராஷ்ட்ரியாவில் காங்கிரசில் அதிருப்தி எம்எல்ஏகள் உருவாகியிருப்பார்கள்.காங்கிரஸ் கட்சி உடைந்திருக்கும் அவர்களுக்கு தூண்டில் போட்டிருக்கும் பாஜக. ஆனால் அதற்கான வாய்ப்பை சோனியாதான் தடுத்தெறிந்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் ஆட்சிக்கு ஆசைப்பட்டு சிவசேனாவுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியையும் தேசியத்தை காங்கிரசையும் எல்லா தரப்பு மக்களும் தூற்றியிருப்பார்கள். எந்தவித பேச்சுக்கும் வழிவகுக்கும் அமைதியாக சாதித்திருக்கிறார் சோனியா. உண்மையிலேயே இவர்தான் ராஜதந்திரி
இப்படிப்பட்ட சூழலில் தான் , ஆட்சியை பிடிக்க ஆசைப்பட்டு தன்னுடைய ஒட்டு மொத்த இமேஜியையும் இழந்திருக்கிறது பாஜக. அதோடு மட்டுமில்லாமல் எதிர்கட்சிகளை தொங்கலில் விட்ட , பாஜகவை இனி ஒரு போதும் எவரும் ஆதரிக்க முன் வர மாட்டார்கள். 'நண்பனின் பகை மிகவும் ஆபத்தானது, என்று சொல்வார்கள் அதுபோல பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த சிவசேனாவும், பாஜகவும் இன்று எதிரெதிர் துருவத்தில்... பாஜகவின் அஸ்தமனம் மஹாராஷ்ட்ராவிலிருந்து ஆரம்பமாகப்போகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்னும் முயற்சித்தால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் கொண்டு வரமுடியும். அதற்காகத்தான் வரும் நவம்பர் 30ல் சோனியா தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இந்திய அரசியலில் பல மாற்றங்கள் உருவாகும்.
-ஏஜிஎம்
No comments:
Post a Comment