Tuesday 11 February 2014

இறை நம்பிக்கை (ஈமான்) - Buhary

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


(1)    தமது நம்பிக்கையுடன் அவர்கள் (மேலும்) நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான். (48:4)

(2)    யார் (ஈமான் மூலம்) நேர்வழியைக் கடைப்பிடிக்கின்றாரோ அவருக்கு (அல்லாஹ் மேலும்) நேர்வழியை அதிகமாக்குகின்றான். மேலும், அவருக்கு இறையச்சத்தையும் வழங்குகிறான். (47:17)

(3)     இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காக (நரகத்தின் காவலர்களான வானவர்களின் எண்ணிக்கையை நாம் ஒரு சோதனையாக ஆக்கினோம்). (74:31)

(4)    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


(5)    16. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது. இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment