Sunday, 16 February 2014

இரண்டாம் வகுப்பு மாணவி ஆஷிமா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
பொது அறிவுப் போட்டியில் 2 ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் சிறுமி சாதனை....!! 

மதுரையைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி ஆஷிமா அதிவேகத்தில் பல தகவல்களை தெரிவித்து அறிவுப்போட்டியில் சாதனை படைத்துள்ளார்.

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் முகம்மது இஸ்மத்துல்லா. இவரது மகள் ஆஷிமா பர்ஜிஸ் (7). இவர் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே பொது அறிவில் மாணவி ஆஷிமா சாதனை படைத்தவர்.

இவரது திறமையை வெளிப்படுத்தும் வகையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ரோட்டரி கிளப் சார்பில் நேற்று சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவி ஆஷிமா 196 நாடுகள், அதன் தலைநகரங்கள், இந்தியாவின் 26 மாநிலங்கள், அதன் தலைநகரங்கள் போன்றவற்றை நொடிப் பொழுதில் தெரிவித்து அசத்தினார்.

இதேபோல் 1947ம் ஆண்டு முதல் இந்தியாவில் பதவி வகித்த ஜனாதிபதிகள், பிரதமர்கள், மாநில கவர்னர்கள், முதல்வர்கள் ஆகியோரையும் அவர் 6 நிமிடத்தில் பட்டியலிட்டு சாதனை படைத்தார்.

பொது அறிவு தொடர்பாக பலர் கேட்ட கேள்விகளுக்கும், உடனுக்குடன் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

எல்லாம் வல்ல இறைவன் இக்குழந்தைக்கு பல்வேறு திறமைகளை வழங்கி சமுதாயத்தின் உயரிய அந்தஸ்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அருள் புரிவானாக...

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.

No comments:

Post a Comment