Sunday 16 February 2014

சீர்யலில் விதைக்கப்படும் வக்கிரங்களால் சிதைக்கப்படும் குடும்ப உறவுகள்,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பருவ வயதை அடைவதற்குள் 16000 பாலியல் காட்சிகளையும் 20000 வன்முறைக் காட்சிகளையும் பார்த்து உருவாகும் சமுதாயத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த, ஒளிந்து சென்று பார்க்க வேண்டி இருந்த ஆபாச திரைப்படங்களை ஓட்டும் தியேட்டர்கள், ஊரைத் தாண்டி, தெருவைத் தாண்டி, உங்கள் வீட்டு வரவேற்பறைக்கே வந்து விட்டது! 

சீர்யலில் விதைக்கப்படும் வக்கிரங்களால் சிதைக்கப்படும் குடும்ப உறவுகள், 

விளம்பரங்களில் விரிக்கப்படும் ஆபாச வலை!

விளையாட்டுக்களில் புகுத்தப்படும் ஆபாச உடை!

நடன நிகழ்ச்சிகளில் புகுத்தப்படும் வக்கிர அசைவுகள்!

செய்திகளைக்கூட ஆபாசமாக்கிய சாமியார்களின் சேட்டைகள்!

என நம் குழந்தைகள் பருவ வயதை அடைவதற்குள் 16000 பாலியல் காட்சிகளையும் 20000 வன்முறைக் காட்சிகளையும் பார்த்து உருவாகின்றார்கள் என ஆய்வு சொல்கிறது!

பருவ வயதை அடைவதற்குள் 16000 பாலியல் காட்சிகளையும் 20000 வன்முறைக் காட்சிகளையும் பார்த்து உருவாகும் சமுதாயத்திடம் பாலியல் வன்முறைகளைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

அதைத்தான் இன்றைக்கு நாடு சந்தித்துக் கொண்டுள்ளது!இந்தக் காரணங்களைக் கண்டறிந்து களையாத வரை இந்தக் காரியங்களை தடுக்க முடியாது!

இதற்கு இஸ்லாம் மட்டுமே தீர்வு சொல்கிறது!

’முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்’ என பெண்களின் ஆபாச உடைக்கு மட்டும் தடை போடவில்லை! ’பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்’ என ஆண்களின் கண்களுக்கும் திரை போடுகிறது!

தவறான பார்வை கண்கள் செய்யும் விபச்சாரம் என தடுப்பதோடு, அந்நிய ஆண் பெண்ணோடு தனித்திருக்கும் சந்தர்ப்பங்களை தவிர்க்க சொல்கிறது! ஆண் பெண் உறவுகளை நெறிப்படுத்துகிறது! காமத்தை தூண்டும் கள் வெறி தவிர்க்க சொல்கிறது!


Sengis Khan

No comments:

Post a Comment