Sunday, 16 February 2014

இது தான் மதச்சார்பற்ற நாடா ?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இந்தியா என்பது மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று உலக மக்களுக்கு பறைசாற்றி கொண்டிருக்கிறது.

மதச்சார்பற்ற நாடு என்பது எந்த மதத்தையும் சாராத நாடு என்று உலக நாடுகளுக்கு அறிவித்து விட்டு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையில் கோவிலின் படத்தை போட்டு நாட்டின் கொள்கைக்கு மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு.

தமிழக அரசின் அதே முத்திரையில் கோவில், மசூதி, கிறித்தவ ஆலயம் ஆகிய மூன்று மதத்தின் படங்களை போட்டாலும் அது நாட்டின் கொள்கைக்கு எதிரானது தான்.

ஆகையால் தமிழக அரசு கோவில் படத்தை நீக்கி விட்டு எந்த மதத்தையும் சாராத பொதுவான முத்திரையை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையாக அறிவிக்க வேண்டும்.

ரூபாய் நோட்டுக்களில் இருந்த அசோக சக்கரத்தை நீக்கிவிட்டு காந்தியின் புகைப்படத்தை காவிகள் போட்டனர்.

காவிகளுக்கு காந்தியின் மீது பற்றோ பாசமோ கிடையாது. அசோக சக்கரம் என்பது புத்த மதத்தின் அடையாளம் என்பதால் காவிகள் கங்கணம் கட்டிக்கொண்டு அசோக சக்கரத்தை நீக்கி விட்டு காந்தியின் படத்தை வைத்தார்கள்.

காவிகளை போல் மத ரீதியாக தமிழக அரசின் முத்திரையை நாம் நீக்க சொல்லவில்லை. நம் நாட்டின் கொள்கைக்கு எதிராக இருக்க வேண்டாம் என்ற தேசப்பற்றின் காரணமாக தான் கூறுகிறோம்.



அதேபோல ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மதம் சம்பந்தப்பட்ட வழிபாடு நடத்தப்பட கூடாது என்று சட்டம் இருக்கும் நிலையில்...

நிறைய அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மதம் சம்பந்தப்பட்ட வழிபாடுகளை நடத்தி நாட்டின் கொள்கைக்கு எதிராக நாம் போய்விடாமல் தேசத்தின் கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் நாம் வாழ வேண்டும்.

மேலும் இக்கோரிக்கையை நாம் மட்டும் கூறாமல், கிறித்தவர்கள், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள், தமிழ் உணர்வாளர்கள், தேச உணர்வாளர்கள் என ஒட்டு மொத்த இந்தியர்களும் தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடு என்பதை உலகுக்கு நிரூபிக்க வேண்டும்.

No comments:

Post a Comment