Tuesday 21 April 2020

பலரும் அதிகம் கவனம் செலுத்தாத ஊடகம் இந்த Twitter.

நம் சகோதரர்கள் பலரும் அதிகம் கவனம் செலுத்தாத ஊடகம் இந்த Twitter.

இதனுடைய வலிமை நமக்கு தெரியாததாலும் இதனைப் பயன்படுத்துவது புரியாததினாலும் பலர் அந்த பக்கமே தலை வைத்து படுப்பதில்லை.

ஆனால் உலகின் அத்தனை அதிகாரமிக்கவர்களும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மீடியா டிவிட்டர்.

உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த அரசியல்வாதியோ, கவர்னர் முதல் நாட்டு அதிபர் வரை அத்தனைபேரின் கவனத்துக்கும் எந்த விசயத்தையும் கொண்டு செல்ல முடியும். அது போன்று எத்தனையோ தீர்வுகள் டிவிட்டர் மூலம் நடந்தும் இருக்கின்றன.

தற்போது சங்கிகளுக்கு எதிரான எழுச்சியில் டிவிட்டரின் பங்கு மிக அதிகம்.நம்ம அரபி பாய்கள் Twitteril ரொம்ப உக்கிரமாக இருக்கின்றார்கள். அதனால் பல சாவர்க்கர் வாரிசுகள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டவண்ணம் இருக்கின்றார்கள். பிரதமரின் வாயையே திறக்க வைத்தது சமீபத்திய அரபுகளின் Twitter பதிவுகள்.

குறிப்பாக அரபு நாடுகளின் காவல்துறை,உள்துறை போன்ற அலுவலகங்களின் பார்வைக்கு ஒரு விசயத்தை கொண்டு செல்லவேண்டுமானால் Twitter தான் சிறந்தது.

Youtube ல் டிவிட்டரை எப்படி உபயோப்படுத்த வேண்டும் என்று பல வீடியோக்கள் உள்ளன பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் முதலிம் ஒரு Twitter அக்கவுண்ட் உருவாக்குங்கள். ஒரு வாரம் என்ன நடக்கிறது என்று மட்டும் கவனியுங்கள் பின்பு உங்களுக்கே புரியும்.

பேஸ்புக்கும் முதலில் யாருக்குமே புரியவில்லைதானே..

ஆக்கம்
அசார்.


உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment