Friday, 10 April 2020

மோடி பக்தர்கள் இதை தயவுசெய்து படிக்க வேண்டாம்

*மோடி பக்தர்கள் இதை தயவுசெய்து படிக்க வேண்டாம்...*
*இது மூளை இருப்பவர்களுக்கான பதிவு*

Hydroxychloroquine ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (இனி HCQ என்றே படிப்போம்) எனும் மருந்தை வைத்து கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளை பார்க்கலாம்.

1. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் HCQ உடன் அசித்ரோமைசின் சேர்த்து பயன்படுத்தினால் கோவிட்-19 வியாதி குணமாகும் அது ஒரு Game changer என கருத்து தெரிவிக்கிறார்

2. ICMR (Indian Council of Medical Research) எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் HCQ எனும் மலேரியாவுக்கு பயன்படும் மருந்தை கோவிட்-19 நோய்க்கு பரிந்துரைக்கிறது

3.இந்திய மக்கள் எல்லா மருந்துகடைகளிலும் உள்ள HCQ வை வாங்கிக்குவிக்கிறார்கள். இந்தியாவில் HCQ தட்டுப்பாடு வருகிறது

4. அதைத்தொடர்ந்து இந்திய அரசு பிற நாடுகளுக்கு HCQ ஏற்றுமதி செய்ய தடை விதிக்கிறது

5. இந்தியாவிலிருந்து இறக்குமதி நின்றதால் அமெரிக்காவில் HCQ பற்றாக்குறை வரும் நிலை உருவாகிறது

6. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் HCQ மருந்தை அனுப்பாவிடில் இந்தியா கடும் விளைவுகளை சந்திக்கும் என பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார்.

7. ICMR எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் HCQ மருந்தால் கோவிட்-19 நோய்க்கு பெரியளவில் பயன் இல்லை என அறிவிக்கறது.

8. இன்று இந்திய அரசு அமெரிக்காவுக்கு HCQ ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை நீக்கி இப்போது மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளது.

எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களை பார்த்து நான் கேட்பது:

ICMR எது சொன்னாலும் தலையாட்டி அடிமை சேவகம் புரிவதை இனியாவது நிறுத்துவீர்களா..?

*இந்த நாட்டின் விளக்கு ஏற்றிய ஏற்றாத எல்லா மக்களுக்கும் நான் சொல்வது:*

*ஒரு அரசாங்கம் என்ன சொன்னாலும் அதை எதிர்த்து கேள்வியே கேட்கக்கூடாது- கேட்டால் நெகட்டிவ் மென்ட்டாலிட்டி அது இதுன்னு சொல்லி, கேட்பவனை தேச விரோதி போல காட்டுவதை நிறுத்துங்கள். உங்கள் அரசுகள் அப்படி ஒன்றும் யோக்கிய புனிதர்கள் அல்லர்.* *கொஞ்சமேனும் உங்களது ஆறாவது அறிவை பயன்படுத்தி எந்தவொரு விஷயத்தையும் அணுகுங்கள்..!*

நன்றி.

No comments:

Post a Comment