அஸ்ஸாமில், இஸ்லாமியர்களுக்கு அடுத்த அச்சுறுத்தல்
➖➖➖➖
சட்டமன்றத்தில் தொழுகை இடைவேளை ரத்து - 87 வருட பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பாஜக அரசு!
➖➖➖➖
அஸ்ஸாம் சட்டமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் நமாஸ் செய்வதற்காக வெள்ளிக்கிழமைகளில் விடப்படும் 2 மணிநேர இடைவேளையை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா.
காலனித்துவ கால நடைமுறைகளை கைவிடுவதாகவும், நாடாளுமன்றத்தின் திறனை (Productivity) அதிகரிப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக, விளக்கமளித்துள்ளார்.
அஸ்ஸாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமிய உறுப்பினர்கள் நமாஸ் செய்வதற்காக காலை 11 மணிக்கு இடைவேளை விட்டு, பின்னர் மதிய உணவுக்குப் பிறகு விவாதங்களைத் தொடங்குவது நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமாகும். இந்த நடைமுறை 1937-ல் முஸ்லிம் லீக் கட்சியின் சையது சாதுல்லாவால் ( பிரிட்டிஷ் இந்தியாவின் அஸ்ஸாம் மாகாண பிரதமராக இருந்தவர்) அறிமுகப்படுத்தப்பட்டது.
தொழுகை இடைவேளையை ரத்து செய்ததை 'வரலாற்று சிறப்புமிக்க முடிவு' எனப் பெருமைகொள்ளும் அஸ்ஸாம் முதல்வர், இதற்கு உறுதுணையாக இருந்ததற்காக சபாநாயகர் பிஸ்வஜித் டைமேரி மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டமன்றம் எந்தவித மதரீதியான சலுகைகளும் இல்லாமல் இயங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அஸ்ஸாம் சட்டமன்றத்தில் நேற்று, `அஸ்ஸாம் ரத்து மசோதா, 2024' நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்ததுள்ளது.
➖➖➖➖
30.08.2024
https://www.vikatan.com/government-and-politics/assam-assembly-ends-87-year-old-practice-of-2-hour-jumma-break