Sunday, 24 March 2024

மீண்டும் உயிர் கொடுத்து நோன்பை நோற்க வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழனைத்தும்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மீண்டும் உயிர் கொடுத்து நோன்பை நோற்க  வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழனைத்தும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருளைப் பொழிவாயாக !

அல்லாஹ் ! உள்ளங்களை மாற்றுபவனே ! எங்கள்  உள்ளத்தை
உன்னுடைய ஈமானின்பால் உறுதியாக்கி வைப்பாயாக !

நாங்கள் எதன் பால் ஆர்வமாக இருக்கிறேமோ அதிலிருந்து எங்களை  மீட்டெடுப்பாயாக !
நீ எதனை செய்வதின் பால் ஆர்வப்படுவாயோ அதன் பால் எங்களை  ஆர்வமடையச் செய்திடுவாயாக !

யா அல்லாஹ் ! இப்பூமி விசாலமாக இருந்தாலும் எனக்கு நெருக்கடி யாக மாறினால் மீன் வயிற்றில் இருந்த யூனுஸ் நபிக்கு உதவியது போல் எனக்கு உதவுவாயாக !
 
எங்கள் இறைவனே ! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை அதிலிருந்து தவறுமாறு செய்து விடாதே ! 
நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு ரஹ்மத் என்னும் நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாக இருக்கிறாய்.

பித்னாவும் ஃபஸாதும் நிறைந்த இந்த காலகட்டத்தில் எங்களுக்கு சத்தியத்தை சத்தியம் எனவும் அசத்தியத்தை அசாத்தியம் எனவும் தெளிவுறக் காட்டுவாயாக !

அதில் குழப்பமடையச் செய்துவிடாதே ! நாங்கள் வழி தவறிவிடுவோம்.
நேர்வழியிலேயே எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

எங்களை பரிபூரணமான ஈமான் கொண்டவர்களாக !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மத் !

யா அல்லாஹ் ! 
எங்களை பரிபூரணமான ஈமான் கொண்டவர்களாக !
நீ விதித்த கடமைமைகளை நிறைவேற்றுபவர்களாக !
தொழுகைகளை பேணுபவர்களாக !
ஜகாத்தை கொடுப்பவர்களாக !
உன்னிடம் இருப்பவைகளைத்  தேடுபவர்களாக !
உன்னுடைய மன்னிப்பை ஆதரவு வைத்தவர்களாக !
நேர்வழியைப் பற்றிப்பிடித்தவர்களாக !
கேளிக்கைகளைப் புறக்கணித்தவர்களாக !
இவ்வுலகின் மீது பற்றற்றவர்களாக !
மறுமையின் மீது ஆர்வமுடையவர்களாக !
உன் விதியின் மீது திருப்தியுடையவர்களாக !

அருட்கொடைகளின் மீது நன்றி செலுத்துபவர்களாக !
துன்பங்களின் மீது பொருமையாளர்களாக !
மறுமை நாளில் உன்னுடைய நபியும், தூதரும்,
தூய்மையான நண்பரும், நேசத்துக்குறிய வருமான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கொடியின் கீழ் வலம் வருபவர்களாக !
ஹவ்ளுல் கவ்ஸருக்கு நீர் அருந்த வருபவர்களாக !
மென்மையான மற்றும் கனமான பட்டாடைகளை அணிந்தவர்களாக !
சொர்கத்தின் உணவுகளை உண்பவர்களாக !
பாலையும், சுத்தமான தேனையும் அருந்துபவர்களாக,
உன் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்திக்கீன்கள் சத்தியவான்கள் ஷுஹதாக்கள் உயிர்த்தியாகிகள் ஸாலிஹீன்கள் நற்கருமங்கள் செய்தவர்கள் ஆகியோருடன் உடன் இருப்பவர்களாக ஆக்குவாயாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

எங்களுக்கு உயிர் தந்து தொழவும் ஸஹர் செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மீண்டும் எங்களுக்கு உயிர் தந்து தொழவும் ஸஹர் செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !

தன்னுடைய சொல்லாலும் செயலாலும் எங்களுக்கு வழிகாட்டிய ரஹ்மத்துல் ஆலமீன் அண்ணல் நபிமீது உன் ஸலவாத்தைப் பொழிவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லங்களை மகிழ்ச்சி, குதூகலம் அன்பு, மனநிறைவு, மனநிம்மதி, அமைதி,  பாதுகாப்பு, மற்றும் உன் அருட்கொடைகளால்
நிரப்புவாயாக !
பொருளாதாரம் குடும்பம் மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கையில் 
பரக்கத் செய்வாயாக !

அருளாளனே ! எங்கள் இதயங்களை அன்பால் ஒன்றிணைப்பாயாக !
எங்களுக்கிடையே சமரசம் நிலவச்செய்வாயாக ! அமைதியின் பாதையில் எங்களை வழி நடத்துவாயாக !
ரஹ்மானே ! எங்கள் தவறுகளை மறைத்து, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக !

எங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் மீது கருணை காட்டுவாயாக ! அவர்களின் பிழை பாவங்களை மன்னித்தருள்வாயாக !
எங்களில் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவாயாக !
நேர்வழியில் செல்லாமல் இருப்பவரை இன்னும் வழிதவறியவர்களை
நேர்வழியின் பால்
இழுத்து வருவாயாக !

தயாளனே ! நாங்கள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து எங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் ரிஜ்கை வழங்குவாயாக !
ரப்புல் ஆலமீனே ! நாங்கள் உன்னை சந்திக்கும் வரை, நீ எங்கள் மீது திருப்தி அடைந்தவனாக எங்களை ஆக்குவாயாக !ஆமீன் ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !

அமீரகத்தில் பல பகுதிகளிலிருந்து அய்மான் சங்கத்திற்கு கோரிக்கை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பதிவு நாள் : 23-03-2024.

அபுதாபி :

 கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக

அமீரகத்தில் பல பகுதிகளிலிருந்து  அய்மான் சங்கத்திற்கு  கோரிக்கைகள் வைத்தார்கள். .

 என்னவென்றால் அபுதாபி முஸ்ஸபா பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் உணவில்லாமல் தங்க இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார் அவரை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள் 

 அதன் அடிப்படையில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்கள் அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அந்த நபருக்கு  உடனடியாக  தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு கேட்டுக்  கொண்டார்கள் 

 நான்கு நாட்களாக தேடுதல்  பணியில் இருந்த அய்மான் சங்கத்தின்  நிர்வாகிகளுக்கு இன்று காலை ஒரு தொலைபேசியின் மூலம் கடையநல்லூர் அருகே உள்ள சுரண்டை என்கின்ற ஊரைச் சேர்ந்த  சகோதரர் வின்சென்ட் அவர்கள் தொடர்பு கொண்டு  நீங்கள் தேடிக் கொண்டிருக்க கூடிய நபர்  இங்கு இருக்கிறார் என்று சொன்னதும் அவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி விரைவில் இந்திய தூதரகத்தின் மூலமாக  தமிழகத்திற்கு அனுப்பி வைக்கலாம்  என்று சொன்னோம்.

 தற்காலிகமாக  சகோதரர் வின்சென்ட் அவர்களின்  பராமரிப்பில் அவரைத் தங்க வைத்துள்ளோம்.

அய்மான் சங்கத்தின் சார்பாக  நன்றிகளை  சகோதரர் வின்சென்ட். அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டோம் 

 விரைவில் இந்திய தூதரகத்தின் உதவியுடன் தமிழகம் திரும்ப அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் அனைத்து உதவிகளும் செய்து கொண்டு இருக்கின்றார்கள் இறைவனை பிரார்த்திப்போம்.

அய்மான் சங்கம்
அபுதாபி

 மேலும் விவரங்களுக்கு அய்மான் MAK - 00971553038066.

பொறுமை_ஒரு_இபாதத்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பொறுமை_ஒரு_இபாதத்!

اِنِّىْ جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوْۤا ۙ اَنَّهُمْ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏

(உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்" (என்றும் இறைவன் கூறுவான்).

(அல்குர்ஆன் : 23:111)

அல்லாஹ் அவர்கள் தொழுததினால், நோன்பு நோற்றதினால் தர்மம் வழங்கினதினால் என்று கூறவில்லை பொறுமையாக இருந்து சகித்துக் கொண்டதினால் என்றுதான் குறிப்பிடுகிறான்.

பொறுமை என்பது ஒருவர் வலி வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதை அவர் சகித்துக் கொண்டு பொறுமையுடன் இருப்பது என்பது ஒரு இபாதத்தாக மாறுகிறது (வணக்க வழிபாடாக ஆகும்)

📚ததப்ருல் குர்ஆன் : 2021

காசநோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் 32 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.20-03-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உணவு பொருட்கள் 32 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.20-03-2024

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காசநோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல் 

 பிளாசம் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு மு

ஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூலம் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் 32 பேருக்கு வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காலை 11 மணி அளவில் இராமநாதபுரம் தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் துணை இயக்குனர் மருத்துவர் 
ரமேஷ் அவர்கள் 
தமுமுக  மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாகான் அவர்களும் 32 குடும்பஙகளுக்கு ஒரு குடும்பத்திற்க்கு 700 ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகிம் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் கிழக்கு மாவட்ட பொருளாளர் பனைக்குளம் பரகத்துல்லா மாவட்ட துணை செயலாளர் சுலைமான் ஜாஹிர் பாபு பனைக்குளம் தமுமுக நிர்வாகிள் ஹாஜா  நஜிமுதீன் பாலகிருஷ்ணன் அர்ஜீனா குமார் பிளாசம் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே...

தகவல்/ செய்தி
தமுமுக இராமநாதபுரம்

அபூ மூஸா அல் அஷ்அரி ரழி and அபூதர் அல் கிஃபாரீ ரழி அவர்கள் வாழ்கை வரலாறு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

 https://youtu.be/c4oVKFAz5S8 
அபூதர் அல் கிஃபாரீ ரழி அவர்கள் வாழ்கை வரலாறு 24-03-2024 

https://youtu.be/G_GMIKHf34M
அபூ மூஸா அல் அஷ்அரி ரழி அவர்கள் வாழ்கை வரலாறு 23-03-2024



இராமநாதபுரம் & பரமக்குடியில் நான்கு ஈமானிய அமர்வு 23-3-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இராமநாதபுரம் & பரமக்குடியில் 
 நான்கு ஈமானிய அமர்வு 23-3-2024

1)பரமக்குடி மேலப்பள்ளிவாசலில் 
லுஹர் தொழுகைக்கு பின் கோடை வெப்பமும் நரகமும்  என்ற தலைப்பிலும், 

2)பரமக்குடி பாரதிநகரில் உள்ள தமுமுகவின் மஸ்ஜித் தஃக்வா பள்ளிவாசலில் மாலை 5 மணிக்கு நோன்பாளிகள் பேண வேண்டிய பண்புகள் என்ற தலைப்பிலும்

3)இராமநாதபுரம் மஸ்ஜித் தக்வா பள்ளியில் அபூதர் அல் கிஃபாரீ ரழி 
அவர்கள் வாழ்கை வரலாறு 
 
மெளலவி தாஹா புகாரி அவர்கள் மார்க்க விளக்க உரை வழங்கினார்கள்.

4)பரமக்குடி மஸ்ஜித் தஃக்வா பள்ளிவாசலில் மாலை 3 மணிக்கு பெண்களுக்கு குர்ஆன் வசனத்தை பொருள் உணர்ந்து ஓதுவது எப்படி என்ற தலைப்பில் முபல்லிகா மர்யம் புஸ்ரா வகுப்பெடுத்தார்கள்.

இந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட சகோதரர்கள்  சகோதரிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.....

தகவல்/செய்தி
இஸ்லாமிய பிரச்சார பேரவை
இராமநாதபுரம் & பரமக்குடி

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது :-

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது :-

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ

'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்' 

என்று ஓதுவார்கள். 

பொருள்:

கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.) 
ஸஹீஹ் புகாரி : 6346

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து ஏன் வெளியேறினார்..?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


#சமுதாயமா..?
#சச்சிதானந்தமா..?

எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து  ஏன் வெளியேறினார்..?

தமிழக நலனுக்கு எதிராக மோடி அரசு செயல் படுவதாலா..?

சிறுபான்மையினர் மீது  மோடி அரசு செய்துவரும்  வெறுப்பு நடவடிக்கைகளை கண்டித்தா..?

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தா..?

முத்தாலக் தடை சட்டத்தை எதிர்த்தா..?

பொது சிவில் சட்டத்தை எதிர்த்தா..?

அவருக்கும் ,பாஜக விற்கும் என்ன கருத்து வேறுபாடு...?

2026 முதல்வர் வேட்பாளர் யார் என்பதே எடப்பாடிக்கும், பாஜக விற்குமான  மோதல்..

ஏதோ மோடியை கொள்கை ரீதியாக எடப்பாடி எதிர்தார் என இஸ்லாமிய  சமூகத்தை  நம்பவைக்க முயற்சி நடக்கிறது 

இஸ்லாமிய சமூக மக்கள் ஏமாந்து விடக்கூடாது...

இந்தியா கூட்டணியை 40/40 என்றவகையில் வெற்றிபெற செய்ய வேண்டும்...

இந்த சமூகம் குடியுரிமையை காப்பாற்ற வீதியில் நின்றபோது  நம்முடன் நின்றவர்கள் யார் என சிந்தித்து வாக்களிக்க வேண்டும்..

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் நாடுமுழுவதும் போராட்டம் நடத்திக்கொண்டு இருந்த நேரத்தில் சட்டம் இயற்றும் அதிகார அவையில் கேரள சட்டமன்றத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள் என்பதை மறந்து விடக்கூடாது..

உங்கள் வாக்கு யாருக்கு..?

குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு எந்த நிர்பந்தமும் இல்லாமல் வாக்களித்து  முஸ்லிம்கள் வாழ்வுரிமையை கேள்விக்குறி  ஆக்கிய இரட்டை இலைக்கா..?

குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கா..? 

எடப்பாடியால் நிறைவேறிய சட்டம் எடப்பாடியின் கூட்டணி முறிவால் ரத்தாகுமா..? 

சமுதாயமா..?
சச்சிதானந்தமா..? என பார்ப்பதற்கு இது சட்டமன்ற தேர்தல் அல்ல ...

பாசிசத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் இணைத்து நடத்துகின்ற இரண்டாவது விடுதலை யுத்தம்..

இது வாக்குசதவிகிதம் காட்டும் தேர்தல் அல்ல 
 வாழ்வுரிமையை மீட்கும் தேர்தல் 
என்பதை புரிந்து,அனைத்து தரப்பு மக்களும் தோழர் #சச்சிதானந்தம் அவர்களுக்கு  அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்....

                  பழனி M.I. பாருக் 
       மாநில அமைப்பு செயலாளர்,
           மனிதநேய மக்கள் கட்சி