Monday, 1 April 2024

தோழர் ஆர்.சச்சிதானந்தம் & நெல்லை முபாரக் - வெல்வது யார்.?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


தோழர் ஆர்.சச்சிதானந்தம் & நெல்லை முபாரக் - வெல்வது யார்.?

பத்தாண்டுக்கால மத்திய பாஜகவின் உணவு அரசியல், உடை அரசியல், கல்வி அரசியல், பாரபட்ச அரசியல் என சிறுபான்மை சமூகத்தை சிறுகசிறுக சிதைக்கும் செயல்பாட்டில் முழு ஒத்துழைப்பு வழங்கியது மாநிலத்தில் ஆண்ட அதிமுக அரசு.

தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் பற்றிய வெறுப்பு பேச்சினால் தான் வெளியே வந்தார்களே தவிர, பாஜகவின் கொள்கையை கண்டித்து வரவில்லை.

அண்ணாமலை என்ற நபரின் மீதுள்ள வெறுப்பினால் பாஜகவில் இருந்த இரத்ததில் ஊறி போன சங்பரிவார சிந்தனை தலைவர்கள் பலர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

இவர்கள் எல்லாம் கட்சிதான் மாறியுள்ளனரே தவிர, கொள்கை மாறவில்லை. 

காங்கிரஸிலும், பாஜகவிலும் இல்லாமல் தனித்து விடப்பட்ட அதிமுக குறைந்த 5 சீட்டு வென்றாலும் (வாய்ப்பேயில்லை) நாளை பாஜக ஆட்சி அமைக்க இந்த 5 சீட்டுடன் 'மோடி எங்கள் டாடி' என கோஷமிட்டவாறு பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பார்கள்.

இதுவெல்லாம் இஸ்லாமிய சமூகம் நன்கு அறிந்ததே

முஸ்லிம்கள் ஓட்டு பொதுவாகவே அதிமுகவிற்கு விழவே விழாது, 

இதில் CAA NRC NPR சட்டம் இயற்ற காரணமான அதிமுகவை முஸ்லிம்கள் ஒரு போதும் ஆதரிக்கமாட்டார்கள்..

கூட்டணி என்ற பெயரில் தோற்கும் தொகுதியை SDPI க்கு வழங்கி, அதுவும் அதிமுகவின் சின்னத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முபாரக்கை நிறுத்தியுள்ளது.

ஒருவேளை நெல்லை முபாரக் வென்றால் அவர் sdpi எம்பி அல்ல, அதிமுக எம்பி... அதிமுகவின் கொறடாவின் உத்திரவுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். 

தனித்து sdpi நின்றால் இஸ்லாமிய ஓட்டுகள் மொத்தமாக கிடைத்திருக்கும்.

எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிட்டு பாஜக ஆதரவு நிலை எடுக்கும் அதிமுகவை நம்பவே நம்பாது இஸ்லாமிய சமூகம்.

Spdi கட்சியும் நெல்லை முபாரக்கும் எப்படி குட்டிகரணம் அடித்தாலும், இஸ்லாமிய மக்களின் ஓட்டை வாங்கிட முடியாது. 

நேற்று வரை 'பாசிசத்தை எதிர்ப்போம்' என்று கோஷமிட்ட sdpi கட்சி.. 

உண்மையாக பாசித்தை நேரடியாகவும், கொள்கைரீதியாகவும் எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியை எதிர்த்து நிற்கிறது.

நாளைக்கு திமுகவும் பாஜக ஆதரவு நிலை எடுக்கலாம் என்று sdpi கருதினால் திமுக வேட்பாளர்கள் நிற்கும் தொகுதியை அதிமுகவிடம் கேட்டு வாங்கி நின்றிருக்க வேண்டும்..

பாசிச எதிர்ப்பு கட்சியான இடது சாரி கட்சிகள் நிற்கும் தொகுதியை sdpi தேர்ந்தெடுத்திருக்க கூடாது.

ஆனால் sdpi க்கு நோக்கம் பாசிச எதிர்ப்பு அல்ல, ஒரே ஒரு MP யாவது வேண்டும் அதற்கு எந்த நிலையில் கீழறங்கி போகலாம் என்ற பேராசை தான்.. 

இந்த பேராசைக்கு இஸ்லாமிய சமுதாயம் இணங்காது.

சிறுபாண்மையினரின் காவலர் எடப்பாடியார், அம்மா வழியில் உயிரை அர்ப்பணம் செய்வேன் என உணர்ச்சி பொங்க முபாரக் பேசினாலும்..

அதிமுக கட்சியினர் உட்பட மாற்று மதமக்களின் ஓட்டு கூட திண்டுக்கல் மண்ணின் மைந்தன் இல்லை என்பதால் நெல்லை முபாரக்கிற்கு கிடைக்காது.

எனவே நெல்லை முபாரக்கிற்கு தோல்வி உறுதி...

* திண்டுக்கலில் நன்மதிப்போடு வலம் வரும் தோழர் ஆர்.சச்சிதானந்தம் 37 வருட முழு நேர அரசியல் வாழ்க்கை.

26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவராக 1996 - 2006 வரை இரண்டு முறை மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்.

திண்டுக்கல் என்றாலே கம்னியூஸ்ட் கட்சிக்கு என தனி செல்வாக்கு உண்டு. 

முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர்களும் ஆர்.சச்சிதானந்தம் பக்கபலமாக இருப்பவர்கள்.

பாசிசத்தை கொள்கை ரீதியாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் திண்டுக்கல் வேட்பாளர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் 

குறைந்த பட்சம் 5 லட்சத்திற்கு அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெருவார்.

2 வது இடம் பாமக..
3 வது இடம் நெல்லை முபாரக்...

✍ தக்கலை ஆட்டோ கபீர்

No comments:

Post a Comment