Tuesday 2 April 2024

தேர்தல் ஆணையமே இருக்காது..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தேர்தல் ஆணையமே இருக்காது...

தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.

 இப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர் நியமனம் செய்யும் ஓர் ஒன்றிய அமைச்சர், குழுவில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த தேர்தல் நடந்தபோது தேர்தல் ஆணையராக இருந்தவர் அசோக் லவாசா. அவர் திடீரென ராஜினாமா செய்தார். 

இவர் 2019 தேர்தலின்போது மோடியும், அமித்ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெரிவித்தார். 

மற்ற இரண்டு ஆணையர்கள் மோடியும் அமித்ஷாவும் குற்றவாளிகள் இல்லை என்று எழுதினர்.  

அந்த பின்னணியில் லவாசா ராஜினாமா செய்தார். 

வேறு வழியில்லாமல் தான் ராஜினாமா செய்ததாக பின்னர் அவர் கூறினார். 

லவாசா ராஜினாமா செய்த பிறகு அவரை மோடி அரசு வேட்டையாடத் தொடங்கியது. 

அவர் மனைவி நடத்தி வந்த நிறுவனத்தை வருமான வரித்துறை சோதனை செய்தது.

 மகளது நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை.

 அவரது சகோதரி வேலை செய்த நிறுவனத்தை சோதனையிட்டனர்.

 ஐஏஎஸ் அதிகாரியான அவரது மகனை பழிவாங்கும் வகையில் இடமாற்றம் செய்தனர்.

 சமீபத்தில் அருண் கோயல் என்கிற தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்தார். 

ஐஏஎஸ் அதிகாரியான அவரது நியமனத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

 ஆனால் அவர் நேர்மையானவர் என்று கூறி நியமனம் செய்யப்பட்டவர். 

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறபோதே புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்கிறார்கள். 

மோடி மீண்டும் வெற்றி  பெற்றுவிட்டால் தேர்தல் என்பதே இருக்காது.

தேர்தல் ஆணையமே இருக்காது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடந்த சிபிஎம் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில்  சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேசியதில் இருந்து...

நன்றி தீக்கதிர் நாளிதழ்

No comments:

Post a Comment