Tuesday, 19 March 2024

தோழர்.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சி - MP

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத்  தொகுதியில் போட்டியிடும் #CPIM  வேட்பாளர்

தோழர்.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பழனி பாரூக் அவர்களை ஆயக்குடி மமக அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாவட்ட துணை செயலாளர் ர.சா.காதர் மைதீன்,பேரூர் தலைவர் சையது சேக் அப்துல்லாஹ் மற்றும் கிளை பேரூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வெற்றி வேட்பாளர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் தோழர் சு.வெங்கடேசன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் 
இன்று 19:3:24 மனிதநேய மக்கள் கட்சி மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வந்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார் 

தோழர் சு.வெங்கடேசன் அவர்களின்வெற்றிக்கு மனிதநேய மக்கள் கட்சி தோளோடு தோல் நின்று களப்பணி ஆற்றி தமிழகத்தில் அதிகப்படியான ஓட்டு வித்தியாசத்தில் தோழரை வெற்றி பெற செய்ய களப்பணியாற்றுவோம்..







நோன்பிருப்போம், உணவளிப்போம் - புளியங்குடியில் தமுமுக அறக்கட்டளையின்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


புளியங்குடியில் தமுமுக அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹித் பள்ளிவாசல் சார்பாக நோன்பு காலங்களில் ஏழை குடும்பங்களுக்கு உணவு தயார் செய்வதற்காக உணவுப் பொருட்களை நோன்பிருப்போம், உணவளிப்போம் திட்டத்தின் கீழ் கடந்த ஏழு ஆண்டுகளைத் தொடர்ந்து 8 வது ஆண்டாக இந்த வருடம் சுமார் 65 குடும்பங்களுக்கு 1,50,000 ரூபாய் மதிப்புள்ள பல சரக்கு சாமான்கள் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் மஸ்‌ஜிதுர் ரஹ்மான் தலைவர் எம்.எஸ்.அப்துர் ரஹ்மான், செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் சதாம் உசேன், துணைத் தலைவர் சமதானியா சாகுல், துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது, முகம்மது ரபீக், எம்.எஸ்.ஹமீது, இமாம் இப்னு தைமியா இஸ்லாமிய கல்லூரி தாளாளர் பொறியாளர் காஜா முஹைதீன் செயற்குழு உறுப்பினர் ஜாஹிர் தீன், மத்ரஸா பொறுப்பாளர் பஷீர் ஒலிEx.mc, தமுமுக நகர செயலாளர் அசன், பள்ளிவாசல் இமாம் மவுலவி அப்துல் மஜீத் பைஜி அட்மின் சுலைமான் உள்ளிட்டோர் இந்த பணியினை சிறப்பாக செய்தனர்.

ஸ்ரீ YOUTUBE CHANNEL தடை செய்ய கோரியும் , வீடியோவை பேசி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பத்ரி நாராயணன் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது

சென்னை மாம்பழம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ Tv என்கிற YOUTUBE CHANNEL கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து , இந்து மற்றும் முஸ்லீம் மக்களிடையே மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பொய் பிரச்சாரத்தை இந்த சேனல் வெளியிட்டுள்ளது . 

இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தி பேசிய ஸ்ரீ YOUTUBE CHANNEL தடை செய்ய கோரியும் , வீடியோவை பேசி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை  எடுக்குமாறு புகார் மனு அளிக்கப்பட்டது . 

 மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்..!!

இந்நிகழ்வில் ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஷெரீப் ஹாஜியார் , செயலாளர் அக்பர் அலி , தமுமுக மமக மாவட்ட தலைவர் M. அப்துல் ஹக்கீம் , IUML மாவட்டத் தலைவர் SM. அய்யூப் ஆகியோர் கலந்து கொண்டனர் . 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மேட்டுப்பாளையம்
கோவை வடக்கு மாவட்டம்

இது விளம்பரத்திற்காக அல்ல விழிப்புணர்வுக்காக

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,.

ரத்த தானம் செய்வோம் 
மனித நேயம் காப்போம்

இது விளம்பரத்திற்காக அல்ல விழிப்புணர்வுக்காக

குடியாத்தம் ஒன்றிய தமுமுகவின் சார்பில் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண்மணிக்கு ஒரு யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டது


ஒன்றிய ஊடக அணி செயலாளர் 
J.அப்துல் ரஹ்மான் ஒரு யூனிட் ரத்ததானம் செய்தார்..

என்றும் மனிதநேய பணியில் 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
வேலூர் மேற்கு மாவட்டம்

புளியங்குடியில் அதிகாலையில் விபத்து!களத்தில் தமுமுக!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,






புளியங்குடியில் அதிகாலையில் விபத்து!களத்தில் தமுமுக!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த தங்கத்துரை என்பவரின் மகன் முத்துகுமார் (வயது 31) இன்று அதிகாலையில் எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே விபத்துக்குள்ளாகி  மரணமடைந்தார். அவருடைய உடலை வாகன இடைப்பாட்டில் சிக்கியதால் தீயணைப்பு படை மற்றும் காவல்துறை உதவியுடன் உடலைக் கைப்பற்றி  தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

களப்பணியில்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மருத்துவ சேவை அணி
புளியங்குடி நகரம்

ஏன் குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் அல்லாஹ்வின் இல்லங்கள் இந்த பூமியில் உருவாக்க பட வேண்டும்???

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மூன்று நிமிடங்கள் மட்டுமே உள்ள இந்த காணொளியை பாருங்கள்:-
https://youtu.be/-Do1Y0Br4BI?feature=shared

ஏன் குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் அல்லாஹ்வின் இல்லங்கள் இந்த பூமியில் உருவாக்க பட வேண்டும்???

அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ அடிப்படையில் உருவாக்குவதால் இந்த சமூகத்திற்கு ஏற்படும் நலவுகள் என்ன???

ஏன் மீண்டும் மீண்டும் அல்லாஹ்வின் இல்லத்திற்காக கொடுங்கள் கொடுங்கள் என கேட்டு கொண்டே இருக்கிறோம்

முஹம்மது நபி ﷺ அவர்கள் மக்காவை விட்டு மதினாவிற்கு வந்து உடன் செய்த முதல் பணி எது

இதை உணர்ந்த சமூகம் எப்போதும் அல்லாஹ்வின் இல்லங்கள் இந்த பூமியில் உருவாக்க போட்டி போடுவார்கள்

நாளை மறுமையில் கிடைக்கும் கூலியை உறுதியாக ஈமான் கொண்டால் அதிகம் அதிகம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வார்கள்

அப்படி அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ் வழங்கிய பொருளாதாரத்தை அல்லாஹ்வின் இல்லம் கட்டுவதற்காக இதுவரை 3100 சதுர அடிக்கான பொருளாதார உதவியை அல்லாஹ்வின் நல்லடியார்கள் நமது காரைக்கால் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிக்கு கொடுத்து உதவி உள்ளார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக

இன்னும் 500 சதுர அடிக்கான பொருளாதார உதவ மட்டுமே தேவைப்படுகிறது.

ஒரு சதுர அடி 2500₹ மட்டுமே

இந்த ரமலான் காலங்களில் அதிகம் அதிகம் கொடுத்து உதவுங்கள்

அதிகம் அதிகம் பிறருக்காவது அனுப்பி விடுங்கள்

20.03.2024 பாஜகவும் பாமகவும் சேர்ந்ததில் வியப்பொன்றுமில்லை..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

20.03.2024 பாஜகவும் பாமகவும் சேர்ந்ததில் வியப்பொன்றுமில்லை.. வியாபாரி நல்ல விலைக்கு விற்பதை தான் விரும்புவான் .. வெற்றி பெற முடியாது என தெளிவாகத் தெரிந்தும் மகனுக்கு குறைந்தபட்சம் மாநிலங்களவை உறுப்பினராக ஏற்பாடு செய்து விட்டு நல்லாட்சி என உளறுவதும் எப்போதும் போல் திராவிடக் கட்சிகளை குறைகூற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. 
..
ராமதாஸ் எப்போதும் தன் நலம் மட்டுமே பேசும் அரசியல்வாதி.. தன் சாதியினரை தவறான பாதையில் வழிநடத்தும் பேராசைக்காரர்.. ஒவ்வொருமுறையும் சத்தியம் செய்வதும் அதை மீறுவதும் வாடிக்கையானதுதான் .. ஆரம்பகாலக் கட்டத்தில் சமூகநீதி பேசி தன் இருப்பை நிலை நிறுத்தியவர்.. உள்ளில் இருந்த சாதிய நிலைபாடு அவரையும் பாமகவையும் கரைக்க வைத்தது.. 
..
கடைசியில் மகனுக்கு மகுடம் சூட்ட முடியாமல் போனாலும் தலைப்பாகையாவது கிடைக்காதா என பிற  கட்சிகளிடத்தில் ஏறி இறங்கி நாடகம் நடத்த வேண்டிய சூழல் .. 
வட மாவட்டங்களில் பெரிதாய் வரவேண்டிய கட்சியை சுய நலத்திற்காக விலை பேசும் வியாபாரியாகிப்போனார்..  பாமக இருக்குமிடம் தான் வெல்லும் என்ற மமதையை வீழ்த்தி காட்டுகிறேன் என சொல்லியடித்து வீழ்ச்சிக்கு வித்திட்டவர் தளபதியார் ..அன்று தொடங்கி இன்றுவரை விரக்தியில் தங்களை காத்துக் கொள்ள நல்ல வியாபாரியாய் அரசியல் செய்கிறார்.. பாஐக மூன்றாமிடத்திற்கு வர உதவலாமே தவிர அதனால் பாமகவிற்கோ வன்னிய சமூகத்திற்கோ பலனில்லை/பயனில்லை..
..
வரும் காலங்களில் பாமக லெட்டர்பேட் கட்சியாக மாறும்.. 
விதைத்தது தானே கிடைக்கும்..
..
-ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

கோயம்புத்தூர் மாவட்டக் கல்வி அதிகாரியின் நடவடிக்கைகள் / மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார நிகழ்வில்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் மாணவர்களை பங்கேற்க வைத்த தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்..

நடவடிக்கை எடுத்து அதன் மீது 24 மணிநேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க தனியார் பள்ளிக்கு உத்தரவு..

தனியார் பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை!


கோயம்புத்தூர் மாவட்டக் கல்வி அதிகாரியின் நடவடிக்கைகள்

 ஆர்சி எண்:1043/2024, தேதி 19.3.2024

 குறிப்பு: 1. 19.03.204 தேதியிட்ட தி இந்து செய்தித்தாள்

 2. 19.03.2024 தேதியிட்ட எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ்

 3. இந்திய தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பு எண்: EC1/PN/11/2024 dt.  பிப்ரவரி 5,2024

 மேற்குறிப்பிட்ட பேப்பர் செய்தியின் அடிப்படையில், கோயம்புத்தூர் சாய்பாபா காலனி போஸ்ட், ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் உதவிபெறும் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த உங்கள் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகளை உங்கள் பள்ளி ஊழியர்கள் 18ஆம் தேதி நடைபெற்ற அரசியல் பிரச்சாரத்தில் பங்கேற்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.  3.2024.  இது சம்பந்தமாக, குறிப்பு 1 மற்றும் 2-ல் கொடுக்கப்பட்டுள்ள விரிவான விளக்கத்திற்கு பள்ளி நிர்வாகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாதாரண சூழ்நிலையில் கூட பள்ளிக் கல்வித் துறை, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி அரசியல் பிரச்சாரங்கள், பேரணிகள் போன்றவற்றில் பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது.  தேர்தல் செயல்பாட்டின் போது, ​​சுவரொட்டிகள்/துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் அல்லது முழக்கங்கள் எழுப்புதல், பிரச்சாரப் பேரணிகள், தேர்தல் கூட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்பது போன்ற எந்த வகையிலும் குழந்தைகளைப் பயன்படுத்துவதை சகிப்புத்தன்மையற்றதாகக் கூறும் இந்தியா. குழந்தைகளைப் பயன்படுத்துவது குழந்தைகளின் மொத்த மீறலாகக் கருதப்படுகிறது.  இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட உரிமைகள் மற்றும் மாதிரி நடத்தை விதிகள்.  18.3.2024 அன்று நடந்த ரோட் ஷோ பிரச்சாரத்தில் சம்பந்தப்பட்ட உங்கள் பள்ளியின் குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டது ஊடகங்கள் மூலம் தெரிய வந்தது.

 மேலும், குழந்தைகளுடன் சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இந்த கடிதம் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கவும் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 என்சி: 1. 19.03.204 தேதியிட்ட தி இந்து செய்தித்தாள்

 2. 19.03.2024 தேதியிட்ட எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ்

 3. இந்திய தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பு எண்: EC1/PN/11/2024 dt.  பிப்ரவரி 5,2024

 செய்ய: செயலாளர், ஸ்ரீ சாய்பாபா விதாயாலயம் நடுநிலைப்பள்ளி, கோவை.

 நகலெடு:

 கோயம்புத்தூர் மாவட்ட கல்வி அதிகாரி

 1. மாவட்ட ஆட்சியர், கோவை

 2. தொடக்கக் கல்வி இயக்குநர், டிபிஐ வளாகம், சென்னை

 3. முதன்மைக் கல்வி அலுவலர், கோவை

2,299 கிராம உதவியாளர் நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

19.03.2024 

2,299 கிராம உதவியாளர் நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும், 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறித்தியுள்ளது.

கிராம உதவியாளர் பணி என்றால் என்ன?


தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கிராம உதவியாளர் பதவிக்கான அடிப்படைத் தகுதிகள்


குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அறிவிக்கப்பட்ட பதவிக்கான வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்

வண்டி ஓட்டும் திறன் இருக்க வேண்டும்

இருதாரமணம் இருக்கக் கூடாது

கிராம உதவியாளர் பதவிக்கு வயது வரம்பு


ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.


குறைந்தபட்ச வயது அனைத்து பிரிவினருக்கு 21க்கு மேல் இருக்க வேண்டும்.

காலியிடங்கள் விவரங்கள்:


அரியலூர் - 21, சென்னை 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் - 66, திண்டுக்கல் - 29, தருமபுரி - 39, ஈரோடு - 141, காஞ்சிபுரம் - 109, கரூர் - 27, கிருஷ்ணகிரி -33, மதுரை - 155, மயிலாடுதுறை - 13, நாகப்பட்டினம் - 68, நாமக்கல் - 68,பெரம்பலூர் - 21, புதுக்கோட்டை - 27, ராமநாதபுரம் - 29, ராணிபேட்டை 43, சேலம் - 105,சிவகங்கை - 46, தஞ்சாவூர் - 305, தேனி-25, திருவண்ணாமலை - 103, திருநெல்வேலி - 45, திருப்பூர் - 102, திருவாரூர் - 139, திருவள்ளூர் - 151, திருச்சி - 104. தூத்துக்குடி - 77, தென்காசி - 18, திருப்பத்தூர் -32, விருதுநகர் - 38, வேலூர் - 30, விழுப்புரம் - 31 ஆகும்.

சம்பளம்: Special Time Scales of pay Matrix Level 6 (குறைந்தபட்சம் ரூ.11;100- அதிகபட்சம் Rs.35,100)

எதனடிப்படையில் தேர்வு முறை இருக்கும்?


திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சாண்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.


திறனறிதல் தேர்வுவாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இருக்கும். எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு தமிழக அரசின் https://www.tn.gov.in , வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளத்தை அவ்வப்போது பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.