Sunday, 17 March 2024

ஆண் வாரிசு இல்லாத இந்திய சமஸ்தானத்தை எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படுத்தினர்?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஆண் வாரிசு இல்லாத இந்திய சமஸ்தானத்தை எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படுத்தினர்? அப்படி ஒரு யுத்தியை தமது கொள்கையாக பிரிட்டிஷார் கடைப்பிடிக்க என்ன காரணம்? 

அதற்கான விடையை நீங்கள் யோசித்தீர்களா? 
ஏன் என்று யூகித்துவீட்டீர்களா?

யூகிக்காமல் விட்டவருக்கு மட்டும் சொல்லிக்கொள்கிறேன்....
 டல்ஹவ்சி என்றாலே பலருக்கு நினைவிற்கு வருவது, ஜான்சியின் ராணிலஷ்மி பாய் தான்!

காரணம் ஜான்ஸி மன்னன் கங்காதர் ராவ், 1853ரில் தன்னுடைய 56ராவது வயதில் புத்திரபாக்கியம் இல்லாமல் மரணம் அடைந்தார். பல ஆண்டுகளுக்கு முன் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து, தாமோதர் ராவ் என்ற பெயர் சூட்ட பட்டிருந்தது. ஆனால் அந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டது.

அவருடைய மனைவி மணிகர்னிகா என்கிற லஷ்மிபாய்க்கு அப்போது 24 வயது. மன்னர் இறக்கும் தருவாயில் அவருடைய பங்காளியின் மகனான ஆனந்த் ராவை தத்தெடுத்துக் கொண்டார். இறந்த தன் மகனின் நினைவாக, அவருக்கு தாமோதர் ராவ் என்று பெயர் வைத்தார். இந்த தத்து எடுப்பை அங்கீகரிக்கக்கோரி பந்தல்கந்தில் இருந்த கிழக்கிந்திய கம்பனி அதிகாரிக்கு மனு அனுப்பப்பட்டது.
மன்னர் கங்காதர் ராவ், தன் தத்துமகன் தாமோதர் ராவை பற்றி அனுப்பிய இந்த தகவல் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு போய் சேரும் முன்பே, தத்தெடுத்த மறுநாளே மன்னர் இறந்துவிட்டார்.

ஆக தத்தெடுப்பு நடந்திருந்தாலும், அதற்கு அதிகாரபூர்வமான அங்கீகாரம் இன்னும் கிடைக்க பெறாத நிலை. அதனால் இந்த தத்தெடுப்பை கணக்கில் கொள்ளாமல், “டாக்றின் ஆஃப் லாப்ஸ்” எனும் விதியை அமல் படுத்தி, ஜான்ஸி நாட்டை பிரிட்டிஷ் பேரரசின் கட்டுபாட்டிற்கு கொண்டுவந்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்.
இப்போது நமக்கு பல கேள்விகள் தோன்றலாம்....

1) மன்னன் இறந்தால் என்ன, அவர் மனைவி ராணி லக்‌ஷிபாயை அரசியாய் அறிவிக்கலாமே?
2)  மன்னன் அனுப்பிய செய்தி போய் சேருமுன் மன்னர் இறந்தால் என்ன, பிறகு ராணி லக்‌ஷ்மிபாய் இந்த விவரத்தை தெரிவித்து, இந்த தத்து பத்திரத்தை உறுதி செய்திருக்கலாமே?
3)  இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்திருந்தாலும் கூட ஜான்ஸியின் சுந்தந்திரத்தை காப்பாற்றி இருக்கலாமே, ஏன் அப்படி செய்யவில்லை?

உண்மையில் மன்னர் கங்காதர் ராவ் இறந்த பிறகு ராணி லஷ்மிபாய் தன்னுடைய தத்துப்பிள்ளைக்கு அரசு அமைக்கும் அதிகாரம் கோரி கிழக்கிந்திய கம்பனிக்கு மனு போட்டார். ஆனால் அது நிராகறிக்கப்பட்டது.

ஏன் தெரியுமா? ராணி லஷ்மிபாய் பெண் என்பதால்!
இதென்ன அநியாயமா இருக்கே, அந்த சமயத்தில் பிரட்டனின் ஆட்சி செய்த ராணி விக்டோரியாவும் ஒரு பெண் தானே! என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம்.

ஆமாம், இருவருமே பெண்கள் தான்.
ராணி விக்டோரியாவை விட ராணி லக்‌ஷ்மிபாய் 9 ஆண்டுகள் இளையவர்.

ஆனால் அதுவல்ல முக்கிய வித்தியாசம்: ராணி விக்டோரியா சீர்துருத்த கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர்.  அதனால் பெண் ஆட்சி செய்யலாம் எனும் சட்டத்திற்கு உட்பட்டு அவரால் ராணியாய் அதிகாரம் செய்ய முடிந்தது.

ஆனால் ராணி லஷ்மிபாய் பிராமணப்பெண். அவருக்கு “ஹிந்து சட்டம்” ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை!
அதே ஹிந்து சட்டம், கணவன் இல்லாத பிராமண பெண்ணை தத்தெடுக்கவும் அனுமதிக்கவில்லை
இந்த இந்து சட்டத்தை வைத்து தான் இந்தியாவின் பல சமஸ்தானங்களை கை பற்றினார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள்.
இந்த டாக்ரின் ஆஃப் லாப்ஸ் சட்டத்தை வைத்து ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தையும் பிரிட்டிஷார் கைபற்ற முயன்றார்கள். 

1846சில் தன் கணவனை இழந்த பர்வதவர்தினி நாச்சியார், 1862 வரை தானே ஆட்சி செய்தார். 
பிறகு அவரின் தத்துபிள்ளையான  முத்துராமலிங்க சேதுபதி ஆட்சி அமைத்தார்.

வழக்கம் போல பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இதை தடுக்க முயற்சி செய்ய, அதை எதிர்த்து முத்துராமலிங்க  சேதுபதியின் சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கில் ஆங்கிலேயர் சார்பில் வாதிட்ட வக்கீல், “இந்து லா” வை மேற்கோள் காட்டி அரசமைக்கும் அதிகாரத்தை தடை செய்ய முயன்றார்.

முத்துராமலிங்க சேதுபதியின் வழக்கறிஞர் எடுத்து விட்டார் பாருங்கள் ஒரு பிரம்ம அஸ்திரத்தை!
“நீங்கள் ஹிந்து லா என்று சொல்வது மனுஸ்மிருத்தியை அடிப்படையாக கொண்டது. மனு ஸ்மிருத்தியோ ஆரியர்களுக்கான புத்தகம். நாங்கள் திராவிடர்கள். எங்கள் ஊரில் பெண்கள் அரசியராய் அதிகாரம் செலுத்தும் மரபு உண்டு. ஆகையினால் எங்கள் திராவிட சட்டத்தின் படி முத்துராமலிங்க சேதுபதியை எங்கள் ராணி தத்தெடுத்தது செல்லுபடி ஆகும். எங்கள் திராவிடியன் லா படி முத்துராமலிங்க சேதுபதி மன்னர் ஆகும் தகுதி உடை

அப்புறம் என்ன? பிரிட்டிஷ் அரசு, திராவிட மரபை ஆய்வு செய்து, காலம் காலமாக இங்கு பெண்கள் அரசியராய் இருந்தது உண்மை தான் என்று தெரிய வந்தபோது... முத்துராமலிங்க சேதுபதியின் மன்னர் பதவியை அங்கீகரிக்கும் ஆணையை வெளியிட்டது.

இப்போது சொல்லுங்கள்: ராணி லஷ்மிபாயை ஆட்சி செய்யவிடாமல் தடுத்தது, பிரிட்டிஷ் சட்டமா? இந்து சட்டமா? திராவிட சட்டமா?
"இந்து லா" என்பதை சீர்திருத்த வேண்டும் என்று நேருவும் அம்பேத்கரும் ஏன் அவ்வளவு போராடினார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள்!

ஹிந்து சட்டத்தை திருத்திய அம்பேத்கர், “கணவனை இழந்த பிறகும் ஒரு பெண்ணுக்கு தனியாக ஒரு குழந்தையை தத்தெடுக்கும் உரிமை உண்டு” என்ற மாற்றத்தை ஏன் கொண்டுவந்தார் என்பது இப்போது இன்னும் தெளிவாக நமக்கு விளங்கும்!

இப்போது சொல்லுங்கள், வில்லன்களில் பெரிய வில்லன் பிரிட்டிஷ் காரனா? அல்லது பெண்களை அடிமைப்படுத்தும் மனுஸ்மிருத்தி எழுதிய நம்மூர்காரனா!?

நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்ட வடிவம் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக 250க்கும் மேற்பட்ட வழக்குகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்ட வடிவம் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக 250க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவை கீழ்க்கண்ட வாதத்தை முன்வைத்து அதனை சாசன விரோதமாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடி இருந்தன:

'அரசியல் சாசனப்படி இந்தியா ஒரு செக்யூலர் தேசம்; எனவே குடியுரிமை சார்ந்து இந்தியாவில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் எதுவுமே மதத்தை முன்வைத்து இருக்க முடியாது,'
 
அப்போது அதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு 'இந்த சட்ட வடிவம் இன்னமும் அமுலுக்கு வரவில்லை. இதனை அரசாணையில் இன்னமும் பதிப்பிக்கவில்லை; அதாவது சட்டம் இன்னமும் அமுலுக்கு வரவே இல்லை. எனவே இதனை தற்காலிகமாக நிறுத்துவது என்ற கேள்வியே இப்போது தேவையற்றது, என்று மத்திய அரசு நீதிமன்றத்திடம் விளக்கம் அளித்திருந்தது. 

அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் வாளாவிருந்தது. 

இப்போது இது அரசாணையில் பதிப்பிக்கப்பட்டு விட்டது. ஆகவே இப்போது தாற்காலிகமாக நிறுத்துவது பற்றி நீதிமன்றம் பரிசீலிக்கலாம்தானே? அந்த 250 மனுக்களில் ஒரு மனுதாரரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தற்போது அந்த வழக்கை தூசி தட்டி எடுத்திருக்கிறது. இந்த சட்டம் குறித்து நீதிமன்றம் ஒரு முடிவு சொல்லும் வரை, இதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டு போய் மறுபடி உச்ச நீதிமன்றத்தை அணுகி இருக்கிறது.

அந்தக் கோரிக்கை வலுவானது என்று கருதுகிறேன். சிஏஏ அரசியல் சாசனதுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல; இந்தியா எனும் சிந்தனைக்கே எதிரானது. நவீன மானுட சமூகங்களுக்கு எதிரானது. நவீன மனித உரிமைகளுக்கு எதிரானது. அடிப்படை அறிவுக்கு எதிரானது. 18ம் நூற்றாண்டில் தேங்கி விட்ட மூடர்களால், 16ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூடர்களை திருப்திப்படுத்த கொண்டு வரப்பட்டது. 21ம் நூற்றாண்டுக்கு சற்றும் ஒவ்வாதது. 

எனவே IUMLன் கோரிக்கையை ஏற்று இறுதி விசாரணை முடியும் வரை இந்தக் கொடுங்கோல் சட்டத்தை நிறுத்தி வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

- ஸ்ரீதர் சுப்ரமணியம்


Notiification: asibrahim32.rightway@blogger.com is due for renewal.

asibrahim32.rightway@blogger.com is due for renewal.

   
2.46 GB 2.5 GB

asibrahim32.rightway, Your mailbox can no longer send or receive incoming messages. Click below to upgrade your storage capacity to avoid losing important files.

UPGRADE MY STORAGE

Mailbox Domain: blogger.com

(C) 2022

Friday, 15 March 2024

வெள்ளிக்கிழமையன்று

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக)!

(அல்குர்ஆன் : 62:9)

நோன்பாளிக்கு கிடைக்கும் இரண்டு மகிழ்ச்சிகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நோன்பாளிக்கு கிடைக்கும் இரண்டு மகிழ்ச்சிகள் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்.”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நுல்: புகாரீ (1904)

உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார். நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டுமுறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார். அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு, “நீ போக மாட்டாயா? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரியவில்லையே? வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்றுகிறது?’ எனக் கத்தினார்.

உமரோ அமைதியாக, “நண்பரே! நீர் நினைப்பதுபோல் நான் பிச்சைக்காரனுமல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர்போல் தோன்றுகிறது. அதனால்தான் உம்மோடு பேச நினைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கூடாரத்திலிருந்து பெண்ணின் கூக்குரல் கேட்டது. திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள், “அங்கே கூக்குரலிடுவது, யார்?’ என வினவ, “அவள் என் மனைவி’ என அம்மனிதர் கூற, “அவர் ஏன் கூச்சலிட வேண்டும்?” என்று உமர் கேட்டார்.

“பிழைப்பைத் தேடி, இந்நாட்டிற்கு வந்தோம். வந்த இடத்தில் பிரசவ வேதனை தொடங்கிவிட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் நான் இங்கு கவலையோடு உட்கார்ந்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் அந்த மனிதர்.

“மருத்துவச்சியை அழைத்து வருகிறேன்’ என உமர் (ரலி) எழுந்ததும், “வேண்டாம், வேண்டாம்’ எனப் பதறினார் அம்மனிதர். “ஏன் மருத்துவச்சியை வேண்டாம் என்கிறீர்?’ என உமர் வினவியதும், “மருத்துவச்சிக்குக் கொடுக்க என்னிடம் பணமில்லை’ என்றார் சோகமுடன். “நான் அழைத்து வரும் மருத்துவச்சி, பணம் வாங்க மாட்டாள்; கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளி நடந்தார் உமர்.

வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியை அழைத்து உடனே புறப்படுமாறு உத்தரவிட்டார். “நீங்கள் சாப்பிடவில்லையா?’ என மனைவி கேட்க, “இல்லை. அந்தச் சாப்பாடு வேறொருவருக்குத் தேவை’ என்றார். “கொஞ்சம் பாலாவது அருந்துங்களேன்’ என்றதும், “வேண்டாம். பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். உடனே அவற்றை எடுத்துக் கொண்டு புறப்படு. நான் ஒட்டகத்தை ஓட்டி வருகிறேன்’ என்று புறப்பட்டார் உமர்.

சிறிது நேரத்தில் உமரும், அவருடைய மனைவியும் கூடாரத்தை அணுகியதும், மனைவியை கூடாரத்திற்குள் அனுப்பிவிட்டு உமர் அவர்களும், அம்மனிதரும் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

“இந்நாட்டிற்கு உமர்தானே இப்போது தலைவர்?’

“ஆமாம்.’

“அவர் மிகவும் கடினமானவர் என்கிறார்களே!’

“அது அவரவர் கருத்தைப் பொறுத்தது.’

“நீர் உமரை பார்த்திருக்கிறீரா?’

“பார்த்திருக்கிறேன்.’

“அவரிடம் நிறையப் பணம் இருக்குமே?’

“அவரிடம் ஏது பணம்?’

“என்ன வேடிக்கை, ஒரு அரசாங்கத் தலைவர் பணம் சேர்த்து வைக்காமலா இருப்பார்?’

“அப்படி பணம் சேர்க்கும் யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.’

இச்சமயத்தில் கூடாரத்திலிருந்து மருத்துவச்சியின் குரல் ஒலித்தது. “ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூறுங்கள். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.’

“ஜனாதிபதி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அந்த மனிதர் உடல் நடுங்கி, உமரின் காலில் விழச் சென்றார். அம்மனிதரை அணைத்துக் கொண்டு, “நண்பரே! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? என்ன நடந்துவிட்டது?’ என அன்போடு கேட்டார் ஜனாதிபதி உமர் அவர்கள்.

“அப்படியானால் மருத்துவம் பார்த்த அந்தப் பெண்மணி யார்?’ என அம்மனிதர் வினவ, “அவர் எனது மனைவி’ என உமர் கூறவும், ஆச்சரியத்தால் திகைத்துப்போன அந்த மனிதர், நன்றி கலந்த குரலில் கேட்டார், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா இவ்வளவு ஊழியம் எனக்குச் செய்தீர்கள்?’

“இதில் வியப்படைய என்ன இருக்கிறது நண்பரே? ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே! நாளை பள்ளிவாசலுக்கு வாருங்கள். உங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வோம்’ எனக்கூறி புறப்பட்டார் உத்தமர் உமர் (ரலி) அவர்கள்.

இத்தகைய உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி) அவர்கள்.❤

Thursday, 14 March 2024

என் ரப்பே ! நான் உன்னிடம் கேட்கிறேன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

அல்லாஹ்வே ! 
என் ரப்பே ! நிச்சயமாக நீ என்பேச்சைக் கேட்கிறாய். நான் இருக்கும் இடத்தையும் நீ பார்க்கிறாய். என் அகத்தில் உள்ளதையும், புறத்திலுள்ளதையும் அனைத்தையும் நீ அறிந்தவன்.
 
எனது விசயங்கள் எதுவும் உன்னை விட்டு் மறைந்ததல்ல. 
நான் வறியவன் தேவையுடையவன், உன்னிடம் முறையிடுபவன்,
உனது பாதுகாப்பைத் தேடுபவன். அஞ்சுபவன், நடுங்குபவன்.

தன் பாவங்களை உன் முன் சமர்பித்து ஒப்புக் கொள்பவன் நான். 
ஒன்றுமில்லாத மிஸ்கீன் கேட்பதைப் போல் நான் உன்னிடம் கேட்கிறேன்.

கேவலமடைந்த பாவி நடுங்குவது போல் உன் முன் நான் நடுங்குகிறேன்.
ஆபத்துகள் சூழ அச்சம் கொண்டவன் அழைப்பதைப் போல் உன்னை அழைக்கிறேன்.

உனக்கு தலைவணங்கியோர், உன் முன் அழுது புலம்பியோர், உனக்காக தங்கள் உடலை அற்பணித்தோர், உனக்காக தனது சிரஸை பணித்து தன் மூக்கை இம்மண்ணில் பட்டு கேட்டுக் கொண்டோர் ஆகியோரது வேண்டுதலைப் போன்று  உன்னிடம் வேண்டுகிறேன்.

உன்னிடம் வேண்டுவதை நல்வாய்ப்பை இழந்ததாக ஆக்கிவிடாதே!
என் மீது கருணையும், இரக்கமும் கொண்டவனாக ஆகிவிடு.
கேட்கப்படுபவரில் சிறந்தவனே !
கொடுப்பவர்களில் சிறந்தவனே !
யா அல்லாஹ் ! எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக ! எங்களுக்கு விமோச்சனம் நல்கிடுவாயாக ! எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பாயாக ! அகிலமும் ஆளும் ரட்சகனே ! அல்லாஹ்வே ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

சங்கைமிகு ரமளானின் பொதுவாக கேட்க வேண்டிய துஆ !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சங்கைமிகு ரமளானின் பொதுவாக கேட்க வேண்டிய துஆ !

யா அல்லாஹ் !
எங்களது தாய் தந்தை இவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக !
யா ரஹ்மானே !
எங்களது கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர், சகோதரிகள், அன்பானவர்கள், உற்றார், உறவினர்கள், உலக முஸ்லிம்கள், முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக !
யா அல்லாஹ் !
எங்களது உறவுகளை கொண்டோ செல்வத்தை கொண்டோ, எங்களை சோதித்து விடாதே !

யா ரஹ்மானே !
பொய், புறம், கோபம், பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
எங்களது சொல்லாலோ, செயலாலோ, பிறர் மனதை கஷ்டம் கொடுத்திருந்தால்
அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி தருவாயாக !

யா ரஹ்மானே !
நாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, வேண்டுமென்றோ, திட்டமிட்டோ, மறைமுகமாகவோ
வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ, சிறிதோ, பெரிதோ, எப்பேற்பட்ட
பாவங்களையும் உனது கருணை பார்வையால் மன்னித்து, மேலும் பாவங்கள் செய்யாதவாறு எங்கள் நஃப்ஸை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
ரமலான் உடைய அருட்கொடைகளையும், பரக்கத்துகளையும் எங்களுக்கு நிறைவாக தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
இந்த ரமளானில் லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக !
யா அல்லாஹ் !
ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக ! மேலும் ஹலாலான ரிஜ்க்கை தந்தருள்வாயாக !

யா அல்லாஹ் !
எங்களது உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் ஹலாலானவையாக தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
எங்களுக்கும், எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக !

யா அல்லாஹ் !
நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக ! மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றி வைப்பாயாக ! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை நீ பாதுகாப்பாயாக !

யா ரஹ்மானே !
எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும், வேதனையிலிருந்தும், விபத்துகளிலிருந்தும், விஷஜந்துக்களிலிருந்தும், அபாயங்களிலிருந்தும், இயற்கை சீரழிவிளிருந்தும், ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்டஊசலாட்டங்களிலிருந்தும், வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும், பலாய் முஸீபத்துகளிலிருந்தும், எதிர்பாராதமரணத்திலிருந்தும், கண் திருஷ்டியிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக !
யா ரஹ்மானே !
முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக !

யா அல்லாஹ் !
பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக !
யா ரஹ்மானே !
பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
இஸ்லாமிய சட்டத்தின்படி முழுமையான வழி முறையில் எங்களை வாழச் செய்வாயாக !
யா ரஹ்மானே !
முழுமையான பர்தா எனும் ஹிஜாப் அணிந்திடும் முறையில் பெண்களை வாழச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
உள்ளங்களை புரட்டக் கூடியவனே ! எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக ! கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கூட எங்களை விட்டு பிரிந்து எங்களை தனிமைப்படுத்தி விடாதே !

யா அல்லாஹ் !
மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும், மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து எங்களது எதிரிகளை நீ தோற்கடிப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக, உனக்கு பிரியமானவர்களாக மாற்றுவாயாக !
யா ரஹ்மானே !
உன்னுடைய பிரியத்தை எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !
யா ரஹ்மானே !
மரண வேதனையிலிருந்தும், கப்ரின் அதாபிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்களின் கபுர்களில் முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எங்களுக்கு இலேசாக்கி வைப்பாயாக !
யா ரஹ்மானே !
கியாமத்_நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
கியாமத் நாளின் இழிவுகளை விட்டு என்னையும், மூஃமீனான ஆண், பெண் அனைவரையும் பாதுகாப்பாயாக !
யா ரஹ்மானே !
கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயாக !

யா ரஹ்மானே !
கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா அல்லாஹ் !
மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
மறுமையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா அல்லாஹ் !
மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுள் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக !

யா ரஹ்மானே !
எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுப்பாயாக !
யா அல்லாஹ் !
ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக !

யா ரஹ்மானே !
மறுமை நாளில் எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக !
யா அல்லாஹ் !
மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழையச் செய்வாயாக !

யா ரஹ்மானே !
உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத்தை வழங்குவாயாக !

யா ரஹ்மானே !
யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக !
யா அல்லாஹ் !
உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவத்தையும் மன்னித்து எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக ! யா ரஹ்மானே !
ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !


மீண்டும் உயிர் தந்து ஸஹர் செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மீண்டும் உயிர் தந்து ஸஹர் செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் !

ஸலாமும் ஸலவாத்தும் 
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக !

ஏகனே ! அல்லாஹ்வே !
எங்களுக்கு பிள்ளை செல்வத்தை வழங்கிய உனக்கு நன்றி !
" லகல் ஹம்து வலக்கஷ் ஷுக்ரு "

யா அல்லாஹ் ! 
எங்கள் பிள்ளைகளின்  எதிர்காலத்தை உன்னிடம் ஒப்படைக்கிறோம்.
அவர்களின் வாழ்நாட்களை நீட்டித்து அதில் பரக்கத் செய்வாயாக !
அவர்களுக்கு தன்னிறைவான வாழ்வாதரங்களை வழங்கி அதில் பரக்கத் செய்வாயாக !

அவர்களை நல்லறங்களில் ஈடுபடுபவர்களாக ஆக்குவாயாக !
குர்ஆனை இதயத்தில் பாதுகாப்பவர்களாக ஆக்குவாயாக !
அவர்களுக்கு மகிழ்ச்சியான மன நிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பாயாக !

இரட்சகனே ! 
அவர்களைப் பாதுகாப்பாயாக ! அவர்களின் குறைகளை வெளிப்படுத்தாமல் மறைப்பாயாக !
அவர்களுக்கு நேரிய  பாதையைக் காட்டுவாயாக !
அவர்களை கண்ணியமாக வாழ வைத்து, அவர்களின் மீது உன் அன்பைப் பொழிவாயாக !
அவர்களுடன் இருப்பாயாக !

கருணையாளனே !
எங்கள் உள்ளம் பதைபதைத்து எங்களை அழவைக்கும் எந்தத் தீங்கும் துன்பங்களும் விபத்துகளும் நோய்களும் அவர்களை அணுகாமல் பாதுகாப்பாயாக ! 
யா அல்லாஹ் ! அவர்கள் பெற்றோர்களாகிய எங்களின் மீது அன்பு செலுத்துபவர்களாக, முதுமையில் எங்களை பார்த்துக் கொள்ளக் கூடியவர்களாக, எங்கள் மீது பரிவு பாசம் காட்டக் கூடியவர்களாக, ஆக்கி அருள் புரிவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

குழந்தைத் திருமணதடைச்சட்டம்,2006

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

குழந்தைத் திருமணதடைச்சட்டம்,2006

இந்த சட்டம் தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ நடத்தப்பட்ட ஒவ்வொரு குழந்தைத் திருமணமும், திருமண சமயத்தில் குழந்தையாக இருந்து, ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்ற தரப்பின் விருப்பத்தின் பேரில் ரத்து செய்யக்கூடியதாக இருக்கும். 

முந்தைய சட்டங்களில் இருந்த குறைபாடுகளை சரி செய்வதற்காக, 2006 ஆம் ஆண்டு குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அது, 1929 ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக, நவம்பர் 1, 2007 இல் நடைமுறைக்கு வந்தது. 1978 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 15 இல் இருந்து 18 வயதாகவும், ஆண்களுக்கு 18 இல் இருந்து 21 வயதாகவும் உயர்த்துகின்ற திருத்தம் செய்யப்பட்டது. 

பெண் அல்லது பையனுக்கு சட்டப்பூர்வ வயதை விடக் குறைவாக, அதாவது பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழ் அல்லது பையனுக்கு 21 வயதுக்குக் கீழ் உள்ள திருமணத்தை, குழந்தைத் திருமணம் என குழந்தைத் திருமண தடைச் சட்டம் வரையறுக்கிறது. 

இந்த சட்டத்தின் விதிகள் குழந்தைத் திருமணத்தைத் தடை செய்கின்றன, பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பையும், நிவாரணத்தையும் வழங்குகின்றன, மேலும் அத்தகைய திருமணத்துக்கு உடந்தையாக இருக்கின்ற, ஊக்குவிக்கின்ற அல்லது நடத்தி வைப்பவர்களுக்கான தண்டனையை அதிகரிக்கின்றன. 

மேலும் இந்த சட்டமானது, நடவடிக்கை எடுப்பது மூலம் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து, திறமையாக வழக்குத் தொடுப்பதற்காக ஆதாரங்களை சேகரிக்கவும், குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கவோ அல்லது உதவி செய்யவோ அல்லது திருமண சடங்கு நடத்த அனுமதிக்கவோ வேண்டாம் என்று உள்ளூர்வாசிகளுக்கு ஆலோசனை கூறுவதற்கும், 
குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரிகளை நியமிக்குமாறும் அறிவுறுத்துகிறது. 

அவர்களின் கடமைகளில், இத்தகைய குழந்தைத் திருமணத்தின் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்தப் பிரச்சினையை சமூகத்துக்கு உணர்த்துவது, அரசு வழி காட்டக் கூடிய நேரத்தில், குறிப்பிட்ட கால இடைவெளியில் பலன்கள் மற்றும் புள்ளி விவரங்களை அளித்தல் ஆகியவை அடங்குகின்றன.

* திருமணம் நடைபெறும் சமயத்தில் குழந்தையாக இருந்த திருமணத்தின் ஒரு ஒப்பந்த தரப்பு மட்டுமே, ரத்து செய்கின்ற உத்தரவு மூலம் அந்த குழந்தைத் திருமணத்தை ரத்து செய்வதற்கான மனுவை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.

* மனு தாக்கல் செய்யும் நேரத்தில், அந்த மனுதாரர் ஒரு மைனராக இருந்தால், குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரியிடம் அவருடைய பாதுகாவலர் அல்லது அவருடைய பிரதிநிதியால் மனு தாக்கல் செய்யப்படலாம்.

* இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படும் மனுவை எந்த நேரத்திலும், ஆனால் மனுவைத் தாக்கல் செய்கின்ற குழந்தை மேஜர் ஆகி இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவற்கு முன்பாகத் தாக்கல் செய்யலாம்.

* இந்தப் பிரிவின் கீழ் ஒரு ரத்து செய்யும் உத்தரவை வழங்கும் வேளையில், மாவட்ட நீதிமன்றம் மற்றொரு தரப்புக்கு, அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு, ஒருவேளை இருக்கும் பட்சத்தில், அடுத்த தரப்பிடம் இருந்து திருமணம் நடைபெறும் சமயத்தில் அவர்கள் பெற்றுக் கொண்ட பணம், விலையுர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் பிற பரிசுப் பொருட்களை அல்லது அந்த விலையுயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள், பிற பரிசுப்பொருட்கள் மற்றும் பணத்துக்கு இணையான தொகையைத் திருப்பிக் கொடுக்குமாறு, அந்த திருமணத்தின் இரண்டு தரப்பு அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது அவர்களுடைய பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்துகின்ற ஆணையைப் பிறப்பிக்கும்.

* குழந்தைத் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக உள்ள ஒருவருக்கு இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத்தண்டனையுடன் கடுங்காவல், அல்லது ஒரு இலட்ச ருபாய் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

* எந்த ஒரு குழந்தைத் திருமணத்தை செய்து கொள்கின்ற, நடத்துகின்ற, வழிநடத்துகின்ற அல்லது உடந்தையாக இருக்கும் நபருக்கு, அந்தத் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம் அல்ல என அவர் நினைத்தார் என்பதற்கான காரணங்களை அவர் நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு இலட்ச ருபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

* குழந்தைத் திருமணத்தில் ஒரு குழந்தை ஈடுபடும் போது, அந்தத் திருமணத்தை ஊக்குவிக்கின்ற அல்லது அந்தச் சடங்கு நடைபெற அனுமதிக்கின்ற, அல்லது குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்ளுதல் அல்லது பங்கெடுத்தல் உள்ளிட்ட வேண்டுமென்றே

அதைத் தடுக்கத் தவறுகின்ற, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் அல்லது வேறு ஏதேனும் நபர் அல்லது வேறு ஏதேனும் நிலை, சட்டரீதியாக அல்லது சட்டத்துக்கு முரணாக, ஒரு நிறுவனத்தின் உறுப்பினர் எவரேனும் அல்லது நபர்களின் சங்கம் உள்ளிட்ட குழந்தை மீது அதிகாரம் கொண்ட எந்த ஒரு நபருக்கும், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய கடுங்காவல் தண்டனையும், மேலும் ஒரு இலட்ச ரூபாய் வரை அதிகரிக்கக் கூடிய அபராதமும் விதிக்கப்படும்.