Sunday, 17 March 2024

Notiification: asibrahim32.rightway@blogger.com is due for renewal.

asibrahim32.rightway@blogger.com is due for renewal.

   
2.46 GB 2.5 GB

asibrahim32.rightway, Your mailbox can no longer send or receive incoming messages. Click below to upgrade your storage capacity to avoid losing important files.

UPGRADE MY STORAGE

Mailbox Domain: blogger.com

(C) 2022

Friday, 15 March 2024

வெள்ளிக்கிழமையன்று

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக)!

(அல்குர்ஆன் : 62:9)

நோன்பாளிக்கு கிடைக்கும் இரண்டு மகிழ்ச்சிகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நோன்பாளிக்கு கிடைக்கும் இரண்டு மகிழ்ச்சிகள் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்.”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நுல்: புகாரீ (1904)

உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார். நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டுமுறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார். அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு, “நீ போக மாட்டாயா? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரியவில்லையே? வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்றுகிறது?’ எனக் கத்தினார்.

உமரோ அமைதியாக, “நண்பரே! நீர் நினைப்பதுபோல் நான் பிச்சைக்காரனுமல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர்போல் தோன்றுகிறது. அதனால்தான் உம்மோடு பேச நினைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கூடாரத்திலிருந்து பெண்ணின் கூக்குரல் கேட்டது. திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள், “அங்கே கூக்குரலிடுவது, யார்?’ என வினவ, “அவள் என் மனைவி’ என அம்மனிதர் கூற, “அவர் ஏன் கூச்சலிட வேண்டும்?” என்று உமர் கேட்டார்.

“பிழைப்பைத் தேடி, இந்நாட்டிற்கு வந்தோம். வந்த இடத்தில் பிரசவ வேதனை தொடங்கிவிட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் நான் இங்கு கவலையோடு உட்கார்ந்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் அந்த மனிதர்.

“மருத்துவச்சியை அழைத்து வருகிறேன்’ என உமர் (ரலி) எழுந்ததும், “வேண்டாம், வேண்டாம்’ எனப் பதறினார் அம்மனிதர். “ஏன் மருத்துவச்சியை வேண்டாம் என்கிறீர்?’ என உமர் வினவியதும், “மருத்துவச்சிக்குக் கொடுக்க என்னிடம் பணமில்லை’ என்றார் சோகமுடன். “நான் அழைத்து வரும் மருத்துவச்சி, பணம் வாங்க மாட்டாள்; கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளி நடந்தார் உமர்.

வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியை அழைத்து உடனே புறப்படுமாறு உத்தரவிட்டார். “நீங்கள் சாப்பிடவில்லையா?’ என மனைவி கேட்க, “இல்லை. அந்தச் சாப்பாடு வேறொருவருக்குத் தேவை’ என்றார். “கொஞ்சம் பாலாவது அருந்துங்களேன்’ என்றதும், “வேண்டாம். பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். உடனே அவற்றை எடுத்துக் கொண்டு புறப்படு. நான் ஒட்டகத்தை ஓட்டி வருகிறேன்’ என்று புறப்பட்டார் உமர்.

சிறிது நேரத்தில் உமரும், அவருடைய மனைவியும் கூடாரத்தை அணுகியதும், மனைவியை கூடாரத்திற்குள் அனுப்பிவிட்டு உமர் அவர்களும், அம்மனிதரும் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

“இந்நாட்டிற்கு உமர்தானே இப்போது தலைவர்?’

“ஆமாம்.’

“அவர் மிகவும் கடினமானவர் என்கிறார்களே!’

“அது அவரவர் கருத்தைப் பொறுத்தது.’

“நீர் உமரை பார்த்திருக்கிறீரா?’

“பார்த்திருக்கிறேன்.’

“அவரிடம் நிறையப் பணம் இருக்குமே?’

“அவரிடம் ஏது பணம்?’

“என்ன வேடிக்கை, ஒரு அரசாங்கத் தலைவர் பணம் சேர்த்து வைக்காமலா இருப்பார்?’

“அப்படி பணம் சேர்க்கும் யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.’

இச்சமயத்தில் கூடாரத்திலிருந்து மருத்துவச்சியின் குரல் ஒலித்தது. “ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூறுங்கள். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.’

“ஜனாதிபதி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அந்த மனிதர் உடல் நடுங்கி, உமரின் காலில் விழச் சென்றார். அம்மனிதரை அணைத்துக் கொண்டு, “நண்பரே! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? என்ன நடந்துவிட்டது?’ என அன்போடு கேட்டார் ஜனாதிபதி உமர் அவர்கள்.

“அப்படியானால் மருத்துவம் பார்த்த அந்தப் பெண்மணி யார்?’ என அம்மனிதர் வினவ, “அவர் எனது மனைவி’ என உமர் கூறவும், ஆச்சரியத்தால் திகைத்துப்போன அந்த மனிதர், நன்றி கலந்த குரலில் கேட்டார், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா இவ்வளவு ஊழியம் எனக்குச் செய்தீர்கள்?’

“இதில் வியப்படைய என்ன இருக்கிறது நண்பரே? ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே! நாளை பள்ளிவாசலுக்கு வாருங்கள். உங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வோம்’ எனக்கூறி புறப்பட்டார் உத்தமர் உமர் (ரலி) அவர்கள்.

இத்தகைய உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி) அவர்கள்.❤

Thursday, 14 March 2024

என் ரப்பே ! நான் உன்னிடம் கேட்கிறேன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

அல்லாஹ்வே ! 
என் ரப்பே ! நிச்சயமாக நீ என்பேச்சைக் கேட்கிறாய். நான் இருக்கும் இடத்தையும் நீ பார்க்கிறாய். என் அகத்தில் உள்ளதையும், புறத்திலுள்ளதையும் அனைத்தையும் நீ அறிந்தவன்.
 
எனது விசயங்கள் எதுவும் உன்னை விட்டு் மறைந்ததல்ல. 
நான் வறியவன் தேவையுடையவன், உன்னிடம் முறையிடுபவன்,
உனது பாதுகாப்பைத் தேடுபவன். அஞ்சுபவன், நடுங்குபவன்.

தன் பாவங்களை உன் முன் சமர்பித்து ஒப்புக் கொள்பவன் நான். 
ஒன்றுமில்லாத மிஸ்கீன் கேட்பதைப் போல் நான் உன்னிடம் கேட்கிறேன்.

கேவலமடைந்த பாவி நடுங்குவது போல் உன் முன் நான் நடுங்குகிறேன்.
ஆபத்துகள் சூழ அச்சம் கொண்டவன் அழைப்பதைப் போல் உன்னை அழைக்கிறேன்.

உனக்கு தலைவணங்கியோர், உன் முன் அழுது புலம்பியோர், உனக்காக தங்கள் உடலை அற்பணித்தோர், உனக்காக தனது சிரஸை பணித்து தன் மூக்கை இம்மண்ணில் பட்டு கேட்டுக் கொண்டோர் ஆகியோரது வேண்டுதலைப் போன்று  உன்னிடம் வேண்டுகிறேன்.

உன்னிடம் வேண்டுவதை நல்வாய்ப்பை இழந்ததாக ஆக்கிவிடாதே!
என் மீது கருணையும், இரக்கமும் கொண்டவனாக ஆகிவிடு.
கேட்கப்படுபவரில் சிறந்தவனே !
கொடுப்பவர்களில் சிறந்தவனே !
யா அல்லாஹ் ! எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக ! எங்களுக்கு விமோச்சனம் நல்கிடுவாயாக ! எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பாயாக ! அகிலமும் ஆளும் ரட்சகனே ! அல்லாஹ்வே ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

சங்கைமிகு ரமளானின் பொதுவாக கேட்க வேண்டிய துஆ !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சங்கைமிகு ரமளானின் பொதுவாக கேட்க வேண்டிய துஆ !

யா அல்லாஹ் !
எங்களது தாய் தந்தை இவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக !
யா ரஹ்மானே !
எங்களது கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர், சகோதரிகள், அன்பானவர்கள், உற்றார், உறவினர்கள், உலக முஸ்லிம்கள், முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக !
யா அல்லாஹ் !
எங்களது உறவுகளை கொண்டோ செல்வத்தை கொண்டோ, எங்களை சோதித்து விடாதே !

யா ரஹ்மானே !
பொய், புறம், கோபம், பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
எங்களது சொல்லாலோ, செயலாலோ, பிறர் மனதை கஷ்டம் கொடுத்திருந்தால்
அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி தருவாயாக !

யா ரஹ்மானே !
நாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, வேண்டுமென்றோ, திட்டமிட்டோ, மறைமுகமாகவோ
வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ, சிறிதோ, பெரிதோ, எப்பேற்பட்ட
பாவங்களையும் உனது கருணை பார்வையால் மன்னித்து, மேலும் பாவங்கள் செய்யாதவாறு எங்கள் நஃப்ஸை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
ரமலான் உடைய அருட்கொடைகளையும், பரக்கத்துகளையும் எங்களுக்கு நிறைவாக தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
இந்த ரமளானில் லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக !
யா அல்லாஹ் !
ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக ! மேலும் ஹலாலான ரிஜ்க்கை தந்தருள்வாயாக !

யா அல்லாஹ் !
எங்களது உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் ஹலாலானவையாக தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
எங்களுக்கும், எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக !

யா அல்லாஹ் !
நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக ! மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றி வைப்பாயாக ! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை நீ பாதுகாப்பாயாக !

யா ரஹ்மானே !
எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும், வேதனையிலிருந்தும், விபத்துகளிலிருந்தும், விஷஜந்துக்களிலிருந்தும், அபாயங்களிலிருந்தும், இயற்கை சீரழிவிளிருந்தும், ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்டஊசலாட்டங்களிலிருந்தும், வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும், பலாய் முஸீபத்துகளிலிருந்தும், எதிர்பாராதமரணத்திலிருந்தும், கண் திருஷ்டியிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக !
யா ரஹ்மானே !
முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக !

யா அல்லாஹ் !
பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக !
யா ரஹ்மானே !
பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
இஸ்லாமிய சட்டத்தின்படி முழுமையான வழி முறையில் எங்களை வாழச் செய்வாயாக !
யா ரஹ்மானே !
முழுமையான பர்தா எனும் ஹிஜாப் அணிந்திடும் முறையில் பெண்களை வாழச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
உள்ளங்களை புரட்டக் கூடியவனே ! எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக ! கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கூட எங்களை விட்டு பிரிந்து எங்களை தனிமைப்படுத்தி விடாதே !

யா அல்லாஹ் !
மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும், மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக !
யா ரஹ்மானே !
நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து எங்களது எதிரிகளை நீ தோற்கடிப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக, உனக்கு பிரியமானவர்களாக மாற்றுவாயாக !
யா ரஹ்மானே !
உன்னுடைய பிரியத்தை எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக !

யா அல்லாஹ் !
தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !
யா ரஹ்மானே !
மரண வேதனையிலிருந்தும், கப்ரின் அதாபிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
எங்களின் கபுர்களில் முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எங்களுக்கு இலேசாக்கி வைப்பாயாக !
யா ரஹ்மானே !
கியாமத்_நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக !

யா அல்லாஹ் !
கியாமத் நாளின் இழிவுகளை விட்டு என்னையும், மூஃமீனான ஆண், பெண் அனைவரையும் பாதுகாப்பாயாக !
யா ரஹ்மானே !
கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயாக !

யா ரஹ்மானே !
கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா அல்லாஹ் !
மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு தந்தருள்வாயாக !

யா ரஹ்மானே !
மறுமையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக !
யா அல்லாஹ் !
மறுமை நாளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுள் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக !

யா ரஹ்மானே !
எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுப்பாயாக !
யா அல்லாஹ் !
ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக !

யா ரஹ்மானே !
மறுமை நாளில் எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக !
யா அல்லாஹ் !
மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழையச் செய்வாயாக !

யா ரஹ்மானே !
உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத்தை வழங்குவாயாக !

யா ரஹ்மானே !
யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக !
யா அல்லாஹ் !
உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவத்தையும் மன்னித்து எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக ! யா ரஹ்மானே !
ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !


மீண்டும் உயிர் தந்து ஸஹர் செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மீண்டும் உயிர் தந்து ஸஹர் செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் !

ஸலாமும் ஸலவாத்தும் 
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக !

ஏகனே ! அல்லாஹ்வே !
எங்களுக்கு பிள்ளை செல்வத்தை வழங்கிய உனக்கு நன்றி !
" லகல் ஹம்து வலக்கஷ் ஷுக்ரு "

யா அல்லாஹ் ! 
எங்கள் பிள்ளைகளின்  எதிர்காலத்தை உன்னிடம் ஒப்படைக்கிறோம்.
அவர்களின் வாழ்நாட்களை நீட்டித்து அதில் பரக்கத் செய்வாயாக !
அவர்களுக்கு தன்னிறைவான வாழ்வாதரங்களை வழங்கி அதில் பரக்கத் செய்வாயாக !

அவர்களை நல்லறங்களில் ஈடுபடுபவர்களாக ஆக்குவாயாக !
குர்ஆனை இதயத்தில் பாதுகாப்பவர்களாக ஆக்குவாயாக !
அவர்களுக்கு மகிழ்ச்சியான மன நிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பாயாக !

இரட்சகனே ! 
அவர்களைப் பாதுகாப்பாயாக ! அவர்களின் குறைகளை வெளிப்படுத்தாமல் மறைப்பாயாக !
அவர்களுக்கு நேரிய  பாதையைக் காட்டுவாயாக !
அவர்களை கண்ணியமாக வாழ வைத்து, அவர்களின் மீது உன் அன்பைப் பொழிவாயாக !
அவர்களுடன் இருப்பாயாக !

கருணையாளனே !
எங்கள் உள்ளம் பதைபதைத்து எங்களை அழவைக்கும் எந்தத் தீங்கும் துன்பங்களும் விபத்துகளும் நோய்களும் அவர்களை அணுகாமல் பாதுகாப்பாயாக ! 
யா அல்லாஹ் ! அவர்கள் பெற்றோர்களாகிய எங்களின் மீது அன்பு செலுத்துபவர்களாக, முதுமையில் எங்களை பார்த்துக் கொள்ளக் கூடியவர்களாக, எங்கள் மீது பரிவு பாசம் காட்டக் கூடியவர்களாக, ஆக்கி அருள் புரிவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

குழந்தைத் திருமணதடைச்சட்டம்,2006

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

குழந்தைத் திருமணதடைச்சட்டம்,2006

இந்த சட்டம் தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ நடத்தப்பட்ட ஒவ்வொரு குழந்தைத் திருமணமும், திருமண சமயத்தில் குழந்தையாக இருந்து, ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்ற தரப்பின் விருப்பத்தின் பேரில் ரத்து செய்யக்கூடியதாக இருக்கும். 

முந்தைய சட்டங்களில் இருந்த குறைபாடுகளை சரி செய்வதற்காக, 2006 ஆம் ஆண்டு குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அது, 1929 ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக, நவம்பர் 1, 2007 இல் நடைமுறைக்கு வந்தது. 1978 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 15 இல் இருந்து 18 வயதாகவும், ஆண்களுக்கு 18 இல் இருந்து 21 வயதாகவும் உயர்த்துகின்ற திருத்தம் செய்யப்பட்டது. 

பெண் அல்லது பையனுக்கு சட்டப்பூர்வ வயதை விடக் குறைவாக, அதாவது பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழ் அல்லது பையனுக்கு 21 வயதுக்குக் கீழ் உள்ள திருமணத்தை, குழந்தைத் திருமணம் என குழந்தைத் திருமண தடைச் சட்டம் வரையறுக்கிறது. 

இந்த சட்டத்தின் விதிகள் குழந்தைத் திருமணத்தைத் தடை செய்கின்றன, பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பையும், நிவாரணத்தையும் வழங்குகின்றன, மேலும் அத்தகைய திருமணத்துக்கு உடந்தையாக இருக்கின்ற, ஊக்குவிக்கின்ற அல்லது நடத்தி வைப்பவர்களுக்கான தண்டனையை அதிகரிக்கின்றன. 

மேலும் இந்த சட்டமானது, நடவடிக்கை எடுப்பது மூலம் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து, திறமையாக வழக்குத் தொடுப்பதற்காக ஆதாரங்களை சேகரிக்கவும், குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கவோ அல்லது உதவி செய்யவோ அல்லது திருமண சடங்கு நடத்த அனுமதிக்கவோ வேண்டாம் என்று உள்ளூர்வாசிகளுக்கு ஆலோசனை கூறுவதற்கும், 
குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரிகளை நியமிக்குமாறும் அறிவுறுத்துகிறது. 

அவர்களின் கடமைகளில், இத்தகைய குழந்தைத் திருமணத்தின் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்தப் பிரச்சினையை சமூகத்துக்கு உணர்த்துவது, அரசு வழி காட்டக் கூடிய நேரத்தில், குறிப்பிட்ட கால இடைவெளியில் பலன்கள் மற்றும் புள்ளி விவரங்களை அளித்தல் ஆகியவை அடங்குகின்றன.

* திருமணம் நடைபெறும் சமயத்தில் குழந்தையாக இருந்த திருமணத்தின் ஒரு ஒப்பந்த தரப்பு மட்டுமே, ரத்து செய்கின்ற உத்தரவு மூலம் அந்த குழந்தைத் திருமணத்தை ரத்து செய்வதற்கான மனுவை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.

* மனு தாக்கல் செய்யும் நேரத்தில், அந்த மனுதாரர் ஒரு மைனராக இருந்தால், குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரியிடம் அவருடைய பாதுகாவலர் அல்லது அவருடைய பிரதிநிதியால் மனு தாக்கல் செய்யப்படலாம்.

* இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படும் மனுவை எந்த நேரத்திலும், ஆனால் மனுவைத் தாக்கல் செய்கின்ற குழந்தை மேஜர் ஆகி இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவற்கு முன்பாகத் தாக்கல் செய்யலாம்.

* இந்தப் பிரிவின் கீழ் ஒரு ரத்து செய்யும் உத்தரவை வழங்கும் வேளையில், மாவட்ட நீதிமன்றம் மற்றொரு தரப்புக்கு, அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு, ஒருவேளை இருக்கும் பட்சத்தில், அடுத்த தரப்பிடம் இருந்து திருமணம் நடைபெறும் சமயத்தில் அவர்கள் பெற்றுக் கொண்ட பணம், விலையுர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் பிற பரிசுப் பொருட்களை அல்லது அந்த விலையுயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள், பிற பரிசுப்பொருட்கள் மற்றும் பணத்துக்கு இணையான தொகையைத் திருப்பிக் கொடுக்குமாறு, அந்த திருமணத்தின் இரண்டு தரப்பு அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது அவர்களுடைய பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்துகின்ற ஆணையைப் பிறப்பிக்கும்.

* குழந்தைத் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக உள்ள ஒருவருக்கு இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத்தண்டனையுடன் கடுங்காவல், அல்லது ஒரு இலட்ச ருபாய் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

* எந்த ஒரு குழந்தைத் திருமணத்தை செய்து கொள்கின்ற, நடத்துகின்ற, வழிநடத்துகின்ற அல்லது உடந்தையாக இருக்கும் நபருக்கு, அந்தத் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம் அல்ல என அவர் நினைத்தார் என்பதற்கான காரணங்களை அவர் நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு இலட்ச ருபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

* குழந்தைத் திருமணத்தில் ஒரு குழந்தை ஈடுபடும் போது, அந்தத் திருமணத்தை ஊக்குவிக்கின்ற அல்லது அந்தச் சடங்கு நடைபெற அனுமதிக்கின்ற, அல்லது குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்ளுதல் அல்லது பங்கெடுத்தல் உள்ளிட்ட வேண்டுமென்றே

அதைத் தடுக்கத் தவறுகின்ற, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் அல்லது வேறு ஏதேனும் நபர் அல்லது வேறு ஏதேனும் நிலை, சட்டரீதியாக அல்லது சட்டத்துக்கு முரணாக, ஒரு நிறுவனத்தின் உறுப்பினர் எவரேனும் அல்லது நபர்களின் சங்கம் உள்ளிட்ட குழந்தை மீது அதிகாரம் கொண்ட எந்த ஒரு நபருக்கும், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய கடுங்காவல் தண்டனையும், மேலும் ஒரு இலட்ச ரூபாய் வரை அதிகரிக்கக் கூடிய அபராதமும் விதிக்கப்படும்.

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து வாலிபர் பலி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

 13/03/2024 . அன்று சென்னையில் இருந்து மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த சகோதரர் மீரா உசேன் அவர்கள் பயணம்  சென்று கொண்டு இருந்தார்கள் ரயில் விருதாச்சலம் அருகில் வரும் போது நிலை தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்டார்கள் என்ற தகவலை 14/03/2024 கடலூர் வடக்கு மாவட்ட தமுமுக துணைச் செயலாளர் காதர் ஷரீப் அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன் பேரில் உடனடியாக மாவட்ட தலைவர் V.M ஷேக் தாவூத் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து அவர்களின் ஆலோசனையின் படி மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் வியாகத் அலி மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் அலாவுதீன் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் நெய்வேலி S . அமீர் பாச்சா  விருதாச்சலம் நகர தலைவர் அன்வர் மற்றும்  இலியாஸ் அவர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக ரயில்வே காவல் நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதனுடைய நகலை எடுத்துக் கொண்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சென்று உடல் கூறு ஆய்வு முடித்து  தேவகோட்டை நகர தமுமுக நிர்வாகிகளிடமும் மீரா உசேன் தந்தையிடம் ஜனாஸா ஒப்படைக்கப்பட்டது இதற்காக உழைத்த அனைவருக்கும்

 ஜசக்கல்லாஹ் ஹைர்

 நெய்வேலி S . அமிர் பாச்சா 
 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் கடலூர் மாவட்டம் வடக்கு

நடைப் பயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நடைப் பயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்......

Bioclock என்றால் என்ன?

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock. 

நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்
60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம். 

50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம். 

அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம். 

ஜப்பானில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது. 

எனவே நண்பர்களே, 

1. நாம்  குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம். 

2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம். 

3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள். 

4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங்  போங்கள். 

5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை). 

6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending. 

எண்ணங்களே வாழ்க்கை.

முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!

 உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! 
Keep your Legs Active and Strong !!!

 தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து  வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.

நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள்  அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள்.

உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும். 
நடந்து செல்லுங்கள்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால்  கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
 எனவே, நடந்து செல்லுங்கள்.

கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.

 நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது. 
கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும். 
தினமும் நடைபயிற்சி.
 
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன. 
நடந்து செல்லுங்கள் 

மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.

 10,000 அடிகள் / நாள்
  வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் 
இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
  மனித உடலைச் சுமக்கிறது. 

ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
 ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை. 
*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.

 இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். *எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.

 கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள். 

ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
தயவுசெய்து நடந்து செல்லுங்கள்

 கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
 நடங்கள்.

வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள். 

பொதுவாக  வயதான நோயாளிகளில் 15%,  தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள்  இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள் 

▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை. 

10,000 அடிகள் நடக்க
 எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். 

365 நாட்கள் நடைபயிற்சி 
உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும். 

இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்