Tuesday 4 March 2014

இஸ்லாம் உலகை ஆளும் என்பதற்கு அன்று அது உதாரணம். இன்று - இது உதாரணம் .

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வரலாறு திரும்புகிறது ...குஜராத்தில், 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூரமான இனப்படுகொலையில் கையில் இரும்புத் தடியுடன் வெறிபிடித்துக் கத்திய, பஜ்ரங் தள் என்ற இந்து மத வெறி அமைப்பைச் சேர்ந்த அஷோக் மோச்சி என்பவரும்,
” எங்களை விட்டுவிடுங்கள் “ என்று கெஞ்சிக் கதறும் குதுபுதின் அன்சாரியும்,
கேரளாவில் நேற்றுச் சந்தித்துக் கைகுலுக்கிக் கொண்டார்கள் !

இதுபோன்ற சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம் உண்டு. தாயிப் மலைவாசிகள் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் அண்ணல் நபிகளாரை படு பயங்கரமாக துன்புறுத்தினார்கள். நபிகள் பிரார்த்தனை செய்திருந்தால் இறைவன் தாயிப் மலையை புரட்டி இருப்பான். அந்த மக்கள் அழிந்து போயிருப்பார்கள். ஆனால் நபிகளோ ... இன்றில்லாவிட்டால் நாளை.. இவர்களில்லாவிட்டால் இவர்களின் பிள்ளைகள் நேர்வழி பெறுவார்கள் என்றார்கள். அண்ணலாரின் கூற்றுப்படியே அந்த மக்கள் திருந்தி தங்கள் தவறுக்கு வருந்தினார்கள்.
அண்ணலாரின் கரம பிடித்து முஸ்லிம்களானார்கள் !
அதுபோல் இஸ்லாத்தின் பரம எதிரியான அபுசுப்யானின் மனைவி ஹிந்தா , உஹதுப் போர்க் களத்தில் அண்ணலாரின் சிறிய தந்தை ஹம்சாவைக் கொல்வதற்குக் காரணமாக இருந்தார். பின்னாளில் அபுசுப்யானின் குடும்பமே இஸ்லாத்தில் இணைந்தது.
இஸ்லாம் உலகை ஆளும் என்பதற்கு அன்று அது உதாரணம்.
இன்று - இது உதாரணம் .

No comments:

Post a Comment