Monday 10 March 2014

சாதிக்க வேண்டும், சாதனையின் சிகரத்தைத் தொட வேண்டும் என்றால் வயது ஒரு தடை இல்லை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


சாதிக்க வேண்டும், சாதனையின் சிகரத்தைத் தொட வேண்டும் என்றால் வயது ஒரு தடை இல்லை.

உலகின் சிறு வயது பேராசிரியர் என்ற பட்டத்தை வென்று கின்னஸில் இடம் பிடித்த இந்தியாவை சேர்ந்த 13 வயது முஸ்லீம் சிறுவன்.

உலகின் மிகவும் வயது குறைந்த பேராசிரியராக இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.



இவர் தன்னைவிட இருமடங்கு வயது உடையவர்களுக்கு அனிமேஷன் குறித்த பாடங்களை சொல்லி கொடுக்கின்றார்.

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டோராடூன் என்ற நகரை சேர்ந்த அமன் ரஹ்மான் தான் இந்த சாதனையாளர்.

இவர் தனது எட்டாவது வயதிலேயே பேராசிரியராக அதிகாரபூர்வமற்ற முறையில் பணிபுரிந்துள்ளாராம். தற்போது 13 வயதாகும் இவருக்கு பேராசிரியர் பதவி சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் இவர் கரும்பலகையின் உயரம் கூட இல்லாத நிலையில் நாற்காலியின் மீது ஏறி கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக்கொடுத்துள்ளார்.



கம்ப்யூட்டர் அனிமேஷன் குறித்த வகுப்புகளுக்கு ஆசிரியராக இருக்கும் இவர் அனிமேஷனில் பல புதிய யுக்திகளை மாணவர்களுக்கு விளங்கும் வண்ணம் கற்றுத்தருகிறார்.

இவருக்கு டேராடூன் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

இவர் தனது 18 வயதை பூர்த்தி செய்தவுடன் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் கல்லூரியில் சேர்ந்து தனது அனிமேஷன் அறிவை மேலும் வளர்த்துக்கொண்டு பின்னர் இந்தியா வந்து சொந்தமாக அனிமேஷன் கல்வி நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கள்.

மாணவர்களே, படிப்பில் கவனம் செலுத்துங்கள் அல்லாஹ் நாடினால் உங்கள் ஒவ்வொருவரையும் இதுபோன்ற சாதனையாளராக ஆக்குவான்.

No comments:

Post a Comment