அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக பி.ஜெயினுலாப்தீன் அவர்கள் முதல்வரை சந்தித்து கூறியதாக தினமணியில் செய்தி இருக்கிறது.
அவர் எந்த அடிப்படையில் அதிமுகவை ஆதரிக்கிறார் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இடஒதுக்கீடு வழங்கிய கட்சி திமுக. அதை எதிர்த்த கட்சி அதிமுக. இப்போது உயர்த்திக் கேட்டதைக்கூட இவ்வளவு நாள் ஆறப்போட்டு தேர்தல் நேரத்தில் அதை சிறுபான்மைக் கமிஷன் ஆய்வுக்கு ஜெயலலிதா அனுப்பியதிலிருந்தே ரெட்டைவேஷத்தை புரிந்து கொள்ள வேண்டாமா?
கலைஞர் மோடியை நண்பர் என்று சொன்னாரே என்று கேட்கிறார்கள். அரசியலில் ஒருவரை நாகரிகத்தோடு நண்பர் என்று சொல்ல்யிருக்கிறார். சவூதி அரேபியாவுக்கு நட்பு நாடாக இந்தியா இருக்கிறது. ஒரு பள்ளிவாச்லை இடித்த நாடு என்பதற்காக எதிரி நாடு என்றா சொல்லிவிட்டது? அது அரசியல்.
செயல்பாட்டைப்பாருங்கள். கரசேவைக்கு ஆளனுப்பியது ஜெயலலிதா அல்லவா... செங்கல் அனுப்பியது ஜெயலலிதா அல்லவா... முஸ்லீமகளுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் எல்லா சாதியினரும் கேட்பார்கள் என்று எதிர்த்தது ஜெயலலிதா அல்லவா... சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு அடங்கித்தான் நடக்க வேன்டும் என்று சொன்னது ஜெயலலிதா அல்லவா... மதமாற்ற தடைச்சட்டம் என்ற பெயரில் சிறுபான்மையினரை அச்சுறுத்தியது ஜெயலலிதா அல்லவா... சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை மமக வைச்சேர்த்துக்கொண்டு பாஜக எதிர்ப்பு வேஷம் போட்டுக்கொண்டு, முடிந்தவுடன் பதவி ஏற்பு விழாவிற்கு மோடியை அழைத்தது ஜெயலலிதா அல்லவா...
இதில் எதிலிருந்து ஜெயலலிதா மாறியிருக்கிறார், நீங்கள் ஆதரவு கொடுக்க. குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டை தேர்தலுக்கு முன்பே அதிகப்படுத்திக் கொடுத்திருந்தாலாவது உங்கள் செயலில் ஒரு நியாயம் இருக்கும்.
மமக எங்கிருக்கிறதோ அதற்கு எதிரான நிலை என்கிற எண்ணத்தை விட்டுவிட்டு சமுதாயத்திற்கு எது பலனளிக்கும் என்று பாருங்கள். மமக ஒன்றும் எதிரிகளல்ல. கொளகையை யார் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது என்கிற கருத்து வேறுபாடுதான் உங்கள் இருவருக்குமே..
ததஜ ஆதரவாளர்களிடம் ஒரு கேள்வி. உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், அதிமுகவுக்கு வாக்களித்தால் இந்த சமுதாயத்திற்கு நல்லதா? பிஜே சொன்னதற்காக வாக்களிக்காதீர்கள், உங்கள் மனசாட்சியைக் கேட்டு வாக்களியுங்கள். நீங்கள் அதிமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளுமே மோடிக்கு அளிக்கும் வாக்குகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
தவறான முடிவெடுத்து எதிரிக்கு பலம் சேர்த்துவிடாதீர்கள்.....

No comments:
Post a Comment