பச்சோந்தி சீமானும்............!
#பலியாகும் தம்பிகளும்.......!
✍️ S.M.S.மதார்.
05.08.2023.
எனது இருபதாண்டுகால அரசியல் அனுபவத்தில், அதுவும் வரலாற்று மாணவன் என்ற (கூடுதல்) அடிப்படையில்.., எத்தனையோ அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் & தொண்டர்களையும் முழுமையாகக் கள ஆய்வு செய்ததுண்டு.
அந்த அடிப்படையில், 100 சதவீதம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் எந்தக் கட்சியும் & தலைவனும் அரசியலுக்கு வரவில்லை என்றாலும்..., கொஞ்சமாவது கொள்கைகளும், உண்மைகளுமாவது கொண்டிருப்பார்கள்.
ஆனால்.....!
🎯 முழுக்க முழுக்கப் பொய்களாலும், போலி நம்பிக்கைகளாலும், சூழ்ச்சிகளாலும் (RSS செயல்திட்டத்தாலும்) கட்டமைக்கப்பட்ட "நாதக" கட்சியையும், அதன் அதிபரான சீமானையும்.., எதைச் சொன்னாலும் சிந்தித்துப் பார்க்காமல் கைத்தட்டி & விசிலடித்து ஏற்றுக் கொள்ளும் தொண்டர்களையும் பற்றி.., இந்தச் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதைப் பதிவு செய்கின்றேன்.
🚫 #நாத ஆரம்ப வரலாறும்.....!
🚫 #RSS பங்களிப்பும்......!
"நாம் தமிழர் கட்சி" என்றப் பெயரில் முதன்முதலில் உருவாக்கியவர் "தினத்தந்தி" அதிபர் (மறைந்த) ஐயா. சி.பா.ஆதித்தனார் அவர்கள்.
🎯 செயல்படாமல், அவர் பெயரில் இருந்து வந்த அந்தக் கட்சியை, ஐயா ஆதித்தனார் குடும்பத்தில் பேசி.., சீமானுக்குச் சிபாரிசு செய்து பெற்றுக் கொடுத்தவர் யாரென்றுச் சொன்னால் "RSS & பாஜக" வின் தமிழக திட்ட வடிவமைப்பாளர் "குருமூர்த்தி".
RSS..., சீமானுக்காக அந்தக் கட்சியைப் பெற்றுத் தர வேண்டிய அவசியம் என்ன..? இந்த ஒன்றைச் சிந்தித்தாலே நாம் தமிழர் கட்சி "எதற்காக & யாருக்காக உருவாக்கப்பட்டது" என்ற உண்மை வரலாறு தெளிவாக விளங்கும்.
இன்றைக்குச் சீமானுக்காகக் கொடி பிடிக்கும் சிறுபான்மைச் சமூகத்தவர்களும்.., தமிழ்ப் பற்றாளர்களும் முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "ஆரிய & பார்ப்பண குருமூர்த்திக்கும்", தமிழ் தேசியத்திற்கும் ஏதாவது சம்பந்தமுண்டா....? என்று.
🚫 #திமுக எதிர்ப்பே.....!
🚫 #நாதக நாடித் துடிப்பு....!
தென்னிந்தியாவில் கர்நாடகம் வரை காலூன்றியப் பாஜக, அடுத்த எல்லையான தமிழகத்திற்குள் அடியெடுத்து வைக்கக் கூட முடியாமல், அடித்து விரட்டப்படுவதற்கு என்ன காரணம்...?
🎯 இங்குப் பெரியாரியச் சிந்தனைகளும், திராவிடச் சித்தாந்தங்களும், இதை அடிப்படையாகக் கொண்ட "திமுக" வின் ஆழமான அடித்தளமும் ஆகும்.
🎯 இந்த அடிப்படைகளை விட்டும், தமிழக மக்களைத் திசை திருப்பினால்தான்.., பாஜக அடியெடுத்து வைக்க முடியும் & ஆட்சிக்கு வர முடியுமே தவிர...,
🎯 மோடியைப் புகழ்ந்தோ, இந்துத்துவக் கொள்கைகளைச் சொல்லியோ அல்லது மதக் கலவரத்தைத் தூண்டியோ.., ஒருபோதும் தமிழகத்தில் "பாஜக" ஆட்சிக்கு வரவே முடியாது என்ற உண்மையை உணர்ந்த RSS.., அதற்காகக் "குருமூர்த்தி" மூலம் புதிய செயல்திட்டத்தை வகுத்தது.
🎯 "திமுக" வை தூக்கிச் சுமக்கும் தமிழ்ப் பற்றாளர்களையும்.., சிறுபான்மைச் சமூகத்தவர்களையும் (முஸ்லீம் & கிறிஸ்தவர்களையும்) "திமுக" விலிருந்து அகற்றினால் மட்டுமே, "திமுக" வை பலவீனப்படுத்தினால் மட்டுமே.., தமிழகத்தில் "பாஜக" வினால் காலூன்ற முடியும் என்ற RSS செயல்திட்டத்தின் அடிப்படையில்..,
🎯 தமிழ் தேசியம், ஈழ விடுதலை, தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று சொல்லித் தமிழ்ப் பற்றாளர்களையும்...,
🎯 சிறைவாசிகள் விடுதலை, குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு என்று காட்டிக் கொண்டு முஸ்லீம்களையும் & கிறிஸ்தவர் நலனுக்காகப் பேசுவதாகக் காட்டிக் கொண்டு கிறிஸ்தவர்களையும்..,
🎯 "திமுக" வை விட்டு அகற்றித், தன் வலைக்குள் விழ வைக்க உருவாக்கப்பட்டதுதான் "நாம் தமிழர் கட்சி". அதற்காகக் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்தான் "செந்தமிழன் சீமானாக" மாற்றப்பட்டக் கிறிஸ்தவ சைமன்.
இந்த உண்மையை மறைத்து, பாஜக வை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்து, திமுக வெறுப்பை மக்கள் மனதில், குறிப்பாக இளைஞர்களிடம் விதைத்து வருகிறார் சீமான்.
🚫 #சீமானின் விரக்தியும்....!
🚫 #இன்றையப் பிரச்சினையும்....!
"நாதக" உருவாகி 13 ஆண்டுகளாகி விட்டப் போதிலும், தங்கள் கனவுகள் நனவாகிடவில்லையே என்ற "நாக்பூரின்" (RSS) கோபம், சீமான் மீது காட்டப்பட.., இனிமேல் "எழும்புத் துண்டுகள் விழுவது நிறுத்தப்படுமோ" என்ற விரக்தியின் வெளிப்பாடே "திமுக & காங்கிரசுக்கு ஓட்டுப் போடும் முஸ்லீம்களும் & கிறிஸ்தவர்களும் "சாத்தானின் பிள்ளைகள்" என்று "சைமனை" பேசத் தூண்டியுள்ளது.
அதனால்தான் திமுக வில் அதிகமமாக அங்கம் வகிக்கும் இந்துக்களைப் பற்றிப் பேசாமல், முஸ்லீம்களையும் & கிறிஸ்தவர்களையும் பற்றி மட்டுமே பேசி இருக்கின்றார். (அதிலும் குறிப்பாக "திமுக" வுக்கு தொடர்ந்து வாக்களிக்கும் குறிப்பிட்ட ஒரு ஜாதியைப் பற்றிப் பேசியிருந்தால், மறுபடியும் பேச சீமாண்டிக்கு நாக்கு இதுக்காது என்பது வேறு விஷயம்)
அது மட்டுமல்ல...,
🎯 தற்போது தொடர்ச்சியாக மணிப்பூர் பழங்குடியினப் படுகொலைகள், அரியானா முஸ்லீம் படுகொலைகள், இரண்டு நாள் முன்பு மோடியின் பெயரால் ரயிலில் 3 முஸ்லீம் படுகொலைகள் என்று, தொடர்சியாக நடந்து வரும் பாஜகவின் இனப்படுகொலைகளைப் பற்றி, அதிகம் விவாதிக்கப்படாமல் திசைதிருப்பவே, சீமான் (தேர்தல் அல்லாத) இந்த நேரத்தில் பேசியிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.
🎯 எப்பொழுதும் முதலில் மோடியை எதிர்ப்பது போன்று பேச்சை ஆரம்பித்து, திமுக & காங்கிரஸை மட்டுமே கடுமையாக எதிர்க்கும் சீமான்....,
🎯 கடந்த 10 ஆண்டுகளாக (2011 & 2016) தனக்கு ஓட்டுப் போடாமல் தொடர்ந்து தமிழக ஆட்சியில் அதிமுக வையும், மத்திய ஆட்சியில் (2014 & 2019) பாஜக வையும் மக்கள் தேர்ந்தெடுத்து, நாட்டைக் குட்டிச்சுவராக்கினார்களே.., அது பற்றி ஏன் சீமான் வாயே திறப்பதில்லை..?
🎯 ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுச் சிறைத் தண்டனைப் பெற்ற அதிமுக வுக்கும்..., 9 ஆண்டுகாலமாய் நாட்டைச் சுரண்டி, விலைவாசியை ஏற்றி, அதானி & அம்பானிகளை மட்டும் வளர்த்து, மதவெறியால் நாட்டைச் சீரழிக்கும் பாஜக வுக்கும்.., ஓட்டுப் போட்ட மக்களைப் பற்றி மட்டும் ஏன் கருத்துச் சொல்லத் தோன்றவில்லை..? அவர்கள் என்ன "தேவனின் பிள்ளைகளா"...?
இதிலிருந்தே சீமானின் உருவாக்கமும் & உள்நோக்கமும் மக்களுக்கு விளங்காதா...?. அதனால்தானே சீமானின் பேச்சிற்குக் கூட்டம் கூடுமளவிற்கு, ஓட்டுகள் விழுவதில்லை.
ஏன் என்று நாதக தொண்டர்களே..! நீங்கள் இப்பொழுதாவது சிந்திக்க மாட்டீர்களா....?
🚫 #சீமானும்.....!
🚫 #அதிமுக விசுவாசமும்.......!
விடுதலைப் புலிகளின் தலைவன் பிரபாகரனைக் கொள்கைத் தலைவனாக ஏற்று, ஈழ விடுதலைக்காக கட்சி நடத்துவதாகச் சொல்லி, காசு பார்க்கும் சீமான்.
🎯 விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஈழ விடுதலைக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஜெயலலிதாவை, 2011 தேர்தலில் ஆதரித்தது ஏன்...? "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று அதிமுக வுக்கு வாக்குகள் சேகரித்தது ஏன்..?
🎯 டான்ஸி நில வழக்கில் ஜெயலலிதாவை ஊழல்வாதியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தர்மபுரியில் 3 அப்பாவி தமிழக மாணவிகளை எரித்துக் கொன்ற கொலைகாரர்களை (அதிமுக வினரே ஆதரிக்க முன்வராதப்போது) அவர்கள் தவறே செய்யவில்லையென்று சீமான் ஆதரித்துப் பேசியது ஏன்...? (வீடியோ ஆதாரம் உள்ளது)
🎯 ஊழலைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டும் சீமான், ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுச் சிறை சென்று வந்த "சசிகலா"வை, யாருமே சென்று சந்திக்காதப் போது, முதன்முதலில் தேடிச் சென்று சந்தித்தது ஏன்...?
🎯 எடப்பாடி பழனிச்சாமி, முழுமையாக மாநில உரிமையையும் & தமிழக நலனையும்.., மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்து.., ஊழலுடன் கூடிய மிகவும் மோசமான ஆட்சி செய்தபோதும், அந்த ஆட்சியை..., அண்ணன் "எடப்பாடி பழனிச்சாமி" நன்றாகத்தான் ஆட்சி செய்து வருகின்றார் என்று தேர்தல் நெருங்கும் சமயத்தில் புகழ்ந்தது ஏன்...? நன்றாக ஆட்சி செய்தால் அவருடன் கூட்டுச் சேர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கலாமே..., தனித்து நின்றது ஏன்...?
🎯 எடப்பாடி பழனிச்சாமியையும், சசிகலாவையும் ஒன்று சேர்த்து, (அதிமுக வை மீண்டும் பலமாக்க) இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக, சீமானே ஒத்துக் கொண்டது ஏன்...? அதிமுக பலம் பெற்றால், அதிமுக வை எதிர்த்து, (தனித்து) நிற்கும் நம்மால் ஆட்சியைப் பிடிக்க முடியாதே என்ற எண்ணம் சீமானுக்கு வராதது ஏன்...?
🎯 இதிலிருந்தே தெளிவாகத் தெரியவில்லையா...? திமுகவைப் போன்றே அதிமுக வை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டு.., அதிமுக வை பலமாக்க முயற்சி செய்வதும்.., ஆனாலும் அதிமுக வுடன் கூட்டுச் சேர்ந்தால் திமுக ஓட்டுக்களைப் பிரிக்க முடியாது என்பதால்.., தனித்து நின்று ஓட்டுக்களைப் பிரிப்பதுந்தான், சீமானுக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்று. அதன்மூலம் பாஜக & அதிமுக கூட்டணியை ஆட்சியில் ஏற்றுவது. இதுதான் RSS, சீமானுக்கு கொடுத்த அசைன்மெண்ட். அதைக் கச்சிதமாக நிறைவேற்றி வருகிறார் சீமான்.
🚫 #சீமானும்....!
🚫 #பாஜக பற்றும்.......!
🎯குஜராத்தை ஆண்ட மோடி, அந்த மாநிலத்தை சிறப்பாக ஆட்சி செய்ததோடு, அந்த மாநிலத்தின் 1 லட்சம் கோடி கடனை அடைத்தார். மேலும் 1 லட்சம் கோடியை உலக வங்கியில் முதலீடு செய்தார் என்று முற்றிலும் "பொய்யானத் தகவலைச்" சொல்லி, மோடியை நேரடியாகப் புகழ்ந்தது.
🎯மஹாராஷ்டிராவில் பாஜக சார்பில் போட்டியிட்ட "தமிழ்ச் செல்வனை" ஆதரித்துப் பிரச்சாரம் செய்தது.., அவர் ஒரு தமிழன் என்றடிப்படையில் பிரச்சாரம் செய்ததாகச் சொன்னது. ஆனால் அவரை எதிர்த்துக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட "கணேஷ்குமாரும்" தமிழர் என்ற உண்மையை மறைத்தது.
🎯 பாஜகவின் குருமூர்த்தி, K.T.ராகவன், H. ராஜா, வானதி MLA, பொன்னார் என்று பாஜக நிர்வாகிகளைத் தேடித்தேடிப் போய்ச் சந்தித்தது. அவர்களுடன் தொடர்ந்து நட்புடன் இருந்து வருவது.
🎯 பாஜக ராகவன் , பெண் கட்சி நிர்வாகியோடு "பலான" செய்கையில் ஈடுபட்டதை, எல்லோரும் கண்டித்தப் போது (பாஜக வே அவரைக் கட்சியை விட்டு விலக்கிய போது) சீமான் அவருக்கு ஆதரவாக முட்டுக் கொடுத்தது.
இவை எல்லாம் தெளிவாகச் சொல்லும் சீமான், பாஜகவை அரியணை ஏற்ற வந்த RSS ன் அடியாள் என்று.
அடுத்த முக்கியமான ஒன்று..,
🚫 #தேர்தல் செலவும்....!
🚫 #வருகின்ற வழியும்......?
இதுவரை சீமான்.., இரு பாராளுமன்ற, இரண்டு சட்டமன்ற & இரு உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில், எந்தப் பெரியக் கட்சிகளின் தயவும் இன்றித், தனித்து நிற்பதாகப் பெருமை பேசும் "நாதக" தம்பிகளே....!
ஓட்டுக்கு நீங்கள் பணம் கொடுக்கவில்லையென்றாலும்.., பொதுக் கூட்ட மேடை, ஒலி & ஒளி செட்டிங், வண்டி வாடகை, நோட்டிஸ் & போஸ்டர், பிரச்சாரத்திற்கு அண்ணன் சீமான் வர & தங்க சொகுசு ஹோட்டல் என்று இதற்கெல்லாம் செலவு செய்ய எங்கிருந்து நிதி வருகின்றது...?
தொண்டர்கள் ஐம்பது, நூறு என்று போடும் மொத்தச் சில்லரைகளைக் கொண்டு ஒரு சட்டமன்றத் தொகுதிக்காவது செலவு செய்ய முடியுமா...?
ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஆகக் குறைந்த செலவு "ஒரு கோடி" என்று வைத்துக் கொண்டாலும், ஒரு தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிக்கும், 234 கோடி செலவாகுமே...? எங்கிருந்து இவ்வளவு கோடி, ஒவ்வொரு தேர்தலுக்கும் வருகின்றது என்று என்றாவது சிந்தித்தது உண்டா...?
🎯 நிதி வரும் வழியை யோசித்தாலே, சீமானை இயக்குவது யார்...? சீமான் தனித்து நின்று ஓட்டுக்களைப் பிரிப்பதால் யாருக்கு லாபம் என்ற "உண்மை" புலப்படுமே.
உதாரணத்திற்கு ஒன்று...,
🎯 கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் "கோவை தெற்கில்...,"
📌பாஜக - வானதி MLA வாங்கிய
ஓட்டு - 53,209.
📌மநீம - கமல்ஹாசன் வாங்கிய
ஓட்டு 51,481.
📌நாதக - அப்துல் வஹாப் வாங்கிய
ஓட்டு 4,300.
இப்பொழுதாவது புரிகிறதா...? முஸ்லீம்களைக் கொண்டே பாஜக வை வெற்றிப் பெற வைக்க வடக்கில் உவைசியும் & தமிழகத்தில் சீமானும்.., RSS & பாஜக வால் உருவாக்கப்பட்ட எட்டப்பர்கள் என்று.
🚫 #சீமானும்.....!
🚫 #கொள்கை முரண்பாடுகளும்.....!
🎯 ஈழவிடுதலைப் போரில் அதிகமாக ஆண்கள் கொல்லப்பட்டதால், ஈழப் பெண்கள் வாழ்க்கை கிடைக்காமல் இருக்கின்றனர். அவர்களுக்கு வாழ்வு கொடுக்க "நாதக" தம்பிகள் முன்வர வேண்டுமென்றால்.., நான் ஒரு ஈழப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமென்றுச் சொல்லி.., "யாழ்மதி" என்ற ஈழப் பெண்ணுடன் உலகம் முழுக்கச் சுற்றி, உலக நாடுகளில் உள்ள ஈழ ஆதரவாளர்களிடம் முடிந்தளவு சுருட்டி விட்டு, யாழ்மதியையும் கழட்டி விட்டு, கடைசியில் "தெலுங்கினத்தைச் சேர்ந்த (விடுதலைப் புலிகளுக்கு எதிராகத், தமிழக சட்டமன்றச் சபாநாயகராக இருந்து தீர்மானம் நிறைவேற்றியக்) காளிமுத்துவின் மகளைத் திருமணம் செய்தது ஏன்...? எதற்காக...?
(திருமணம் என்பது சீமானின் தனிப்பட்ட உரிமையாக இருந்தாலும், அதை தன் கட்சிக் கொள்கையாக முன்வைத்ததோடு, யாழ்மதி என்ற ஈழப் பெண்ணோடு சுற்றி, சுருட்டிக், கழட்டிவிட்டதோடு, தான் எதிர்க்கும் தெலுங்கினத்தைச் சேர்ந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து.., தெலுங்கு & தமிழ் கலப்பின வாரிசைப் பெற்றார் என்றால், சீமானுடைய கொள்கையில் சீமானுக்கே உறுதியில்லை எனும்பொழுது.., தம்பிகள் மட்டும் தலையில் தூக்கிக் கொண்டாடுவது ஏன்...?)
🎯 "தடுப்பூசி" என்பது கார்ப்பரேட்களின் உலகளாவிய சதி என்று மேடைதோறும் முழங்கியவர்.., தன் மகனுக்கு மட்டும் தடுப்பூசியை போட்டதோடு., செய்தியாளர்கள் இதுபற்றிக் கேட்டதும், அது தம்பிகள் வந்து "அண்ணே இந்த விஷயத்தில் தலையிடாதீங்கன்னு" சொல்லிப் போட்டுட்டு வந்துட்டாங்கன்னு, வெக்கமே இல்லாமல் சொல்லுகிறார் என்றால், அந்தப் புள்ளைக்கு சீமான் தகப்பனா..? இல்லை.....?
🎯 உள்நாட்டுக் காங்கேயம் காளை, ராஜபாளையம் நாய் இதையெல்லாமல் இல்லாமல் ஆக்கி, வெளிநாட்டு விலங்குகளை இறக்குமதி செய்வது கார்ப்பரேட் சதி என்று இன்றைக்கு வரைக்கும் கொதிக்கும் சீமான்.., தன் வீட்டில் மட்டும் ஜெர்மன் நாய், ஆஸ்திரேலியா கிளி என்று வளர்ப்பது ஏன்...?
🎯 தன் மனைவி வழியாகக் கிடைத்தச் சொத்துக்கள் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், பண்ணை வீடுகள் & தோப்புகள் என்று கோடி கோடியாகக் குவிந்திருந்தும்.., ECR பங்களாவில் பவிசாகக் குடித்தனம் & சொகுசு கார் என்று Luxury ஆக வாழ்வதை மறைத்து.., சுந்தர் C, கலைப்புலி தானு என்று பல நண்பர்களிடம் "பிச்சை" எடுத்துத்தான் வாழ்வதாகச் சொல்வது ஏன்..? இன்னும் யாரை ஏமாற்றிக் காசு பறிக்க....?
🎯 அலகு குத்துவது, தீ மிதிப்பதைக் காட்டுமிராண்டித்தனம் என்று சொன்னவர், தற்போது அது வீரத்தின் அடையாளம் என்று மாற்றிப் பேசுவது ஏன்..?
🚫 #செந்தமிழன் சீமானும்.....!
🚫 #கோமாளித்தனங்களும்....!
🎯தமிழ்நாட்டில், தான் ஆட்சிக்கு வந்தால் 50,000 பட்டாலியன்களை உருவாக்கி, இலங்கையை எதிர்த்துப் போரிட்டுக் "கச்சத் தீவை" மீட்பதாக மேடைதோறும் சொல்கிறார். தமிழக காவல்துறை, இன்னொரு மாநிலத்திற்குப் போகவே அங்குள்ள DGP யின் அனுமதி வாங்க வேண்டும். அப்படி இருக்க.., (இந்திய அரசு & ராணுவம் இல்லாமல்) இன்னொரு நாட்டுடன் போர் தொடுக்கும் அதிகாரம், "மாநில அரசுக்கு" இருக்கிறதா என்றக் குறைந்தப்பட்ச அறிவில்லாமல் உளருவதைக் கூட, நம்பிக் கைத்தட்டி ரசிக்கிறது தம்பிக் கூட்டம்.
🚫 தான் லெட்டர் கொடுத்தால், சுவிட்சர்லாந்து நாடு விசா கொடுப்பதாக அள்ளி விடுகிறார். இந்திய நாட்டின் பிரதமரே லட்டர் கொடுத்தால் கூட விசா வழங்க முடியாது, அதற்கென்று சில நடைமுறைகள் உள்ளது என்ற அறிவில்லாமல்...!
🚫 தான் ஆட்சிக்கு வந்தால், உலக வங்கியிடம், தமிழ்நாடு அரசு வாங்கியக் கடனுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை., நீ கொடுத்த ஸ்டாலின் கிட்ட, எடப்பாடி கிட்டப் போய் கேள் என்று சொல்லி விட்டு.., தனக்கு இப்போது 50 ஆயிரம் கோடி கொடு, அதற்கு நான் பொறுப்பு என்று சொல்வேன் என்கிறார். ஏண்டா உலக வங்கி என்ன, உங்க ஊரு சிட்பண்ட் கம்பெனின்னு நினைச்சியா..., நீ சொன்னவுடன் கேட்பதற்கு...? அவன் ஸ்டாலினை நம்பியா கடன் கொடுத்தான். தமிழக அரசை நம்பிக் கூட அவன் கடன் கொடுக்கவில்லை. இந்திய அரசின் கீழ் உள்ள மாநில அரசாங்கம் என்ற அடிப்படையிலேயே உலக வங்கிக் கடன் கொடுத்துள்ளது. கடனை அடைக்க வில்லை என்றால், தமிழக அரசின் சொத்துக்கள் ஐப்தி செய்யப்பட்டு, தமிழக அரசு திவாலானாதாக அறிவித்து, உன் (கனவு) ஆட்சியே கவிழ்ந்திடுமே கூமுட்டை..., அதுக் கூட தெரியாமல்...? என்னத்தச் சொல்ல..?
🚫 #சைமனும் (சீமானும்)....!
🚫 #சிந்தியப் பொய்களும்....!
ஈழத்திற்குச் சென்று, பிரபாகரனோடு கூட்டத்தோடு கூட்டமாக வெறும் 5 நிமிஷமே நின்று விட்டு வந்து..., பிரபாகரனும் & ஒட்டு மொத்தப் புலிகளும் கொல்லப்பட்டப் பிறகு.., பொதுவெளிக்கு வந்து சீமான் அள்ளி விடும் பொய்களுக்கு ஒரு அளவே கிடையாது.
🎯 இட்லிக்குள் கறி.., ஆமைக் கறி சமைத்துப் பிரபாகரன் பரிமாறியது.., AK 87 எடுத்து சாதாரணமாகச் சுட்டது & அதைப் பார்த்துப் புலிகளே வியந்தது.., ஈழத்துக் காட்டுக்குள் சிங்கள ராணுவ அச்சமின்றி சர்வ சாதாரணமாகச் சுற்றித் திரிந்தது & சீமானின் வீரத்தைக் கண்டு பிரபாகரன் வியந்தது.., சீமான் கோபித்துக் கொள்வார் என்று, சீமான் முன் வைத்து ஆங்கிலத்தில் பேச பிரபாகரன் அஞ்சியது.., சீமான் சாப்பிடுவதை இரண்டு பேர் குறிப்பெடுத்தது.., ஆமை ஓட்டைப் படகாகப் பயன்படுத்தியது...., இப்படி சீமான் தினந்தோறும் அள்ளிவிடும் கதைகள், தினத்தந்தியின் "கன்னீத்தீவு" எபிசோடையே மிஞ்சிவிடும்
🎯 சீன ராணுவத்தின் ஊடுருவலுக்கு எதிராக சீன செயலிகளான Tiktok ஐ மத்திய அரசு தடை செய்ததை.., ஏழரை கோடிப் பேர் Tiktok ல் தன்னைப் பாலோ பண்ணுவதால் மத்திய அரசாங்கம் தடை செய்தது என்று வெட்கமே இல்லாமல் புளுகியது.
🎯 Whatsapp பார்வேர்ட் ஆப்ஷனை 5 பேருக்கு மேல் அனுப்ப முடியாமல் தடை செய்ததும், தனக்காக என்று இன்டர்நேஷனல் அளவுக்குப் புளுகியது.
இப்படி கொஞ்சம்கூட கூச்சம், வெக்கம் இல்லாமல் "பொய்" பேசும் ஒருவனைத் தலைவனாக ஏற்று.., ஒரு கூட்டம் கொண்டாடுகிறது என்று சொன்னால், ஆச்சர்யமாக இருக்கிறது. அதேநேரத்தில் அவர்களின் அறிவீனத்தின் அபாயத்தை எண்ணிக் கவலை கொள்ளவும் வேண்டியிருக்கிறது.
🚫 #திராவிடத்தால் வீழ்ந்தோமா......?
🚫 #திராவிடத்தால் வாழ்ந்தோமா....?
இது பற்றி விரிவாகவே பல ஆதாரத்தைச் சுட்டிக்காட்டி எழுதலாம். ஆனால் மிக சுருக்கமாக...,
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, ஒப்பிட்டு பார்க்கவே முடியாத அளவுக்கு மிக வேகமாக, முன்னேறிய மாநிலமாக (கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், ஊட்டச்சத்து, தொழில் துறை, பெண்கள் முன்னேற்றம், சாலை வசதிகள், இன்னும் பல அடிப்படை வசதிகள் என்று எல்லவற்றிலும்....,) தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பதை விட, முதன்மை மாநிலமாக விளங்குதிறது என்பதே உண்மை. அதற்கு ஒரேயொரு உதாரணம்...,
🎯 இந்தியாவிலேயே அதிகமான (71) மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அதிலும் குறிப்பாக 38 அரசு மருத்துவக் கல்லூரிகள். அதிலும் Top 5 மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழகம்தான் முதலிடம். வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற வளர்ச்சி கிடையவே கிடையாது.
இந்த ஒன்றே போதும். "திராவிடத்தால் வாழ்ந்தோம்" என்று.
இறுதியாக......,
🚫 #பச்சோந்தி சீமானும்.....!
🚫 #பலியாகும் தம்பிகளும்......!
பச்சோந்தி மரத்திற்கு மரம் நிறத்தை மாற்றிக் கொள்வது போல...,
சீமான்........!
🎯காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திக, அதிமுக, தேமுதிக, "RSS ஸ்பான்சர் நாதக" என்று அடிக்கடி கட்சியையும்..,
🎯கிறிஸ்தவம், கடவுள் மறுப்பு, தமிழ் மதம் என்று மதத்தையும்...,
🎯 தனது வசதிக்கும், வரும் வருமானத்திற்கும் ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு..., இடத்திற்குத் தகுந்தாற்போல் & முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டு திரிவது (சீமானுடைய) இயல்பான பச்சோந்திக் குணமாகும்.
🎯 வடநாட்டைப் போல் தமிழ் நாட்டை மதவெறி கொண்டு வீழ்த்த முடியாமல் போனதற்குத் தமிழ்நாடு "பகுத்தறிவு" மாநிலமாக இருப்பதுதான் காரணம். அதற்குக் காரணமான பெரியாரியச் சிந்தனைகளையும், திராவிட சித்தாந்தங்களையும், அதைத் தாங்கி நிற்கும் "திமுக" வையும் வீழ்த்த.., RSS கையிலெடுத்த ஆயுதமே "தமிழ் தேசியம்" என்ற மடைமாற்றமும்..., "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்றப் பொய்ப் பிரச்சாரமும்.....!
🎯 அதற்குப் பேச்சாற்றல் நிறைந்த, காசுக்காக எப்படி வேண்டுமானாலும் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய சீமானைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றது RSS & BJP.
🎯 இந்தச் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமலும்.., போதிய அரசியல் அனுபவம் இல்லாததாலும்.., நரம்பு புடைக்க உணர்ச்சி வேகத்தில் கத்தும் சீமானுடைய பேச்சை நம்பி..., இளைஞர்கள் செல்கின்றனர். தங்களுடைய அரசியல் வாழ்வை மட்டுமல்ல.., எதிர்கால தமிழக நலனையும் பாழாக்கி வருகின்றனர்.
🎯ஆனாலும் போதிய அரசியல் அனுபவம் பெற்றவுடன், சீமானின் பச்சோந்திக் குணத்தைப் புரிந்து கொண்டு, "நாதக" வை விட்டு கூட்டங் கூட்டமாக வெளியேறுவது ஓரளவுக்கு நிம்மதியைத் தருகின்றது.
(குறிப்பு : மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஆதாரப்பூர்வமானதும், சீமான் தன் வாயாலேயே அவ்வப்போது வெளிப்படுத்திய வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுமாகும்.)
💐 நன்றி.